Wednesday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் Computer-ல் உள்ள‍ HARD DISK -ஐ பாதுகாக்க‍ சில எளிய வழிமுறைகள்

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டு இருக்கும்போது, ஏதாவது பிரச் சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk-ல் குப்பை உருவாகும். இதுபோல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்ய லாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவ ற்றை சரி செய்யலாம். இதனால் உங் கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள் ளும் நேரம் கிட்டதட்ட ஒருமணி நேரம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங் கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்துவரும் குட்டி விண்டோ வில் Tools என்ற Tab ஐ தெரிவு செய் யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்ய வும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண் டாவது option சேர்த்து click செய்தால் Check Diskக்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள் ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன் று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக்செய்துவிட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப் போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத் த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய் யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப் பட் டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங் கள் கம் ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆர ம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூ ட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூ ட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச் சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுட ன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இரு க்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Diskக்கு உள்ளாக்கு வதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்…!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

**************************************************************************************************************

சி.சி.டி.வி கேமராக்களை, மிகச்சிறந்த முறையிலு ம் குறைந்த செலவிலும், பொருத்த‍ AANINFOTECH என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தி ன் விலாசமும், தொடர்பு எண்களும் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. அதனை கிளிக் செய்து அவர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் விரும்பும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்துங்கள்.

AANINFOTECH

9840398311

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

Leave a Reply