Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உறவின்போது விந்து விரைவாக வெளியேறுதல் (அ) விந்து முந்துதல் – விரிவான அலசல் (வ‌யது வந்தோருக்கு மட்டும்)

விந்து விரைவாக வெளிப்படுதல் (அ) விந்து முந்துதல் (premature ejaculation) என்பது ஒரு ஆண் தனது பாலியல் துணை விரும்புவத ற்கு முன்னோ (அல்) தானே விரும்பும் முன் னோ விந்துவை வெளித்தள்ளுதல் ஆகும்.

வரையறை

மேற்கண்ட வரையறையில் இவ்வளவு நேர த்திற்கு முன்னமே விந்து வெளிவருதல் என்பது போன்ற திட்டவட்டம் எதுவும் இல் லை. ஓருவர் 10 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார். அவரின் பாலி யல் துணை 20 நிமிடத்தில் உச்ச நிலை அடைகிறார் என் றும் கொண்டால் இது விந்து முந்து தல் ஆகும். இதே 10 நிமிடத்தில் இன்னொருவர் உச்ச நிலை அடைவதாகவும் ஆனால் அவரி ன் பாலியல் துணை 8 நிமிடங்க ளுக்குள் ளாகவுமே உச்ச நிலை அடைவதாகவும் கொண்டால் இது விந்து முந்துதல் அன்று.

பத்துப்பேரில் ஒருவர் (1/10) என்ற விகி தத்தில் மிகப்பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் எதுவென்றால் அது விந்து முந்துதல் தான். இந்த விந் து முந்துதலை ஆங்கிலத்தில் Prema ture Ejaculation என்பார்கள்.இதுதான் ஆண்க ளை மிக அதிகமாகப்பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.

உறவின்போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவத ற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவ தைத்தான் விந்து முந்துதல் என்கிறோ ம்.

ஆண்மைக் குறைபாடு அல்லது விறைப் படுவதில் Erectile dysfunction சிக்கலுக்கா ன காரணங்கள் இவை. விந்து முந்துத லுக்கான Premature ejaculation காரணங் கள் பிறகு கட்டுரையில் சொல்லப்படுகி றது

விந்து முந்துதல் Premature ejaculation என்பது ஆண்மைக் குறை பாட்டினால் ஏற்படுவதல்ல.  இங்கு ஆண் உறுப் பு விறைப்படுவதில் எவ்வித பிரச்சனையும் இருப்பதில்லை. விறைப்படுவதில் குறைபாடா னது Erectile dysfunction எனப்படும் பாலுறவின் நாட்ட த்திலும் குறை விருப்பதில்லை.

யாரைப் பாதிக்கும்
 
பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. பாலி யல் உணர்வுகள் அதிகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் பருவத் தில் பலரையும் பாதிக்கிறது. காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டுவர பல ஆண்களா ல் முடிகிறது. இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண் மையே.

 உசிதமான நேரம் எவ்வளவு? ஆய்வு முடிவு கள்

உச்சகட்டத்தை அடைவதற்கு எந்தளவு நேரம் உசிதமானது என்பதைப்பற்றி சரி யான தகவல்கள் இல்லை. இருந்தபோதும்  2006ல் சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் பொது வாக விந்து முந்துவதாகக் கருதும் ஆண் களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது. எவ் வித பிரச்சனையும் இல்லை, சாதா ரணமாக வெளியேறுகிறது எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்க ள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந் தது. இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை விந்து வெளியேறாது உறவி ல் ஈடுபடமுடிந்த சில ஆண்களும்கூட தமக்கு விந்து விரைவில் வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டது ண்டு. 2.5 சத விகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது.

எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க வே ண்டும்?

எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ் வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அள வுகோல்கள் இருக்கும் என்பது தெளி வாகிறது.  இருந்த போதும் 20 நிமிடங்க ளுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும் உடலுறவைப் பெரு ம்பாலான தம்பதிகள் திருப்ப தியற்றதாகக் கருதுகிறார்கள். பல வற்றையும் கருத்தில் எடுக்கும் போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து வெளியேறி விடுவதை விந்து முந்துதல் எனப்பெரும் பாலான மருத்துவர்கள் கருதுகி றார்கள்.

இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித் தால் நேரக்கணக்குகளை விட திருப்தியடையும் உணர்வு முக்கிய ம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம் சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதி னால் அங்கு விந்து முந்துதல் இருப்ப தாகக் கருதலாம்.

அதற்கான காரணங்கள் என்ன?

இது ஏற்படுவதற்குக் காரணம. என்ன ? ஒருவன் தனது பாலியல் உறவுகளி ன் ஆரம்ப கட்டங்களில் இதற்கு ஆற்றுப் படுத்தப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள்.

மற்றவர்கள் கண்டு கொள்வார்களோ என்ற பதற்றமான சூழ்நிலைகளில் பயத்துடனும் அவசர அவசரமாகவும் உறவு கொண்டவர்க ளின் ஆரம்ப கால அனுபவங்களின் தொடர்ச் சியாக இது நேர்ந்திருக்கலாம். காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவுகொண்டு விந்தை வெளியேற்றிய நிகழ்வுகளால்  பதன ப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்து தல் இருப்ப தை அவதானிக்க முடிகிறது.

மற்றொரு காரணம் இது பரம்பரையில் வருவ தாகவும் இருக்கலாம். விந்து முந்தியவரகள் பலரது தகப்பன்மா ருக்கும் இது இருந்தது தெரிய வந் தது.

மனப்பதற்றம் முக்கிய காரணமா க இருப்பதையும் மறுக்க முடியா து. மனப் பதற்றம் பதகளிப்பு ஆகிய வை விந்து விரைந்து வெளியே றக் காரணமாகின்றன.

உடலுறவு என்பது உணர்வுகளோடு தொடர்புடையன. மனக்கிளர்ச் சி அதற்கு அவசியம். ஆனால் சஞ்சலமும், கவலையும் உறுப்புகளை சோரவும் ஈரலிப்பின்றி வரட்சி யாகவும் ஆக்கும், அதேநேரம் பத களிப்பு முந்தச் செய்து விடலாம். இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள்.

ஆற்றலை மேம்படுத்தாது

 ஆனால் மதுவானது ஆர்வத்தைத்த தூண்டுமளவு ஆற்றலை மேம் படுத்துவதில்லை. அத்துடன் வே ண்டாத பல பக்க விளைவுகளையு ம் தீங்குகளையும் கொண்டுவரும் என்பது தெரிந்ததே.

அதை தடுக்க‍ என்ன செய்யலாம்?
 
மனம்

மனத்தைத் திருப்ப முயற்சியுங்கள். விந்து முந்திவிடுமா என அஞ் சிக் கொண்டிராமல் மனத்தை முற்றிலும் வேறு ஒரு விடயத்தினா ல் செலுத்தினால் விரைவாக வெளி யேறுவதைத் தடுக்கலாம்.

களிம்பு மருந்துகள்

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம் புகளும் பலன் அளிக்கும் என நம்பப்ப டுகிறது. இப்பிரச்சினை உள்ள ஆண்க ளின் உறுப்பின் மு னையில் உள்ள மொட்டுப் பகுதியானது தூண்டப் படும் போது ஏனையவர்களதைவிட கூடியளவு உணர் வினைத் திற னைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படு கிறது. இதனால், அப்பகுதியை சற்று மர க்கச் செய்யும் விறைப்பு (மரக்கச் செய்யு ம்) மருந்துகள் (Topical anesthetic) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம்மருந்து கள் உறுப்பின் மொட்டுப்பகுதியின் உண ர்நிலையை (Sensitivity) சற்றுக் குறைப்ப தன்மூலம் விந்து விரைவ தைத் தாமதப் படுத்துகின்றன. ஆனால் இம்மருந்தான து உணர்வை சற்று மரக்கச் செய்யக் கூடும். மருந்தை இடும் ஆணு க்கு மாத்திரமின்றி அவருடன் உறவு கொள்பவரின் உணர்வுகளையு ம் மந்தப்படுத்தி விடக் கூடிய பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு பூசிய இடத்து த் தோ லில் ஒவ்வாமை ஏற்றடவும் கூடும்.

விசேட ஆணுறை இதற்குமாற்றாக ‘நீண்ட உறவு Long Love’ எனப்பெயரிடப்பட்ட ஆணு றை மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப்பட் டுள்ளது. மரக்கச்செய்யும் மருந்துகளை (Benzocaine) பூச வேண்டிய தேவை யில்லா மல், ஆணுறையில் உட்புறமாகக் கலந்திருக்கிறார்கள்.

இலங்கையில் Stamina என்ற ஆணுறையை இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் சந்தைப்படுத்தியுள் ளது.

Durex, Pasante போன்ற இன்னும் பல்வேறு பெயர்களில் வேறுநாடுகளில் கிடைக்கும்.

அழுத்திப் பிடிக்கும் முறை

அமெரிக்க மருத்துவர்களான மாஸ்டர்ஸ் ஜோன்சன் அறிமுகப்படுத்திய முறை இது வாகும். மருந்து மாத்திரை, பூச்சு மருந்து எவையும் தேவையில் லை. மனைவியின ஒத்துழைப்பும் கணவனின் பங்களிப்பும் மட்டு மே தேவை. ஆயினும் சரியான முறையில் அதைப் பயில்வது அவசியம். விந்து வெளி யேறவிருக்கும் தறுவாயில் ஆணுறுப்பை இறுக அழுத்திப் பிடிப்பதால் தடுக்கலாம்.

உறவின்போது பெண் தனது ஒரு கையால் விறைத்திருக்கும் ஆணின் குறியை பற்ற வேண்டும்.

பெருவிரல் ஒரு பக்கத்திலும், சுட்டி விரலும் நடுவிரல் மறு பக்கமா கவும் இருக்குமாறு பற்ற வேண்டும்.

அவ்வாறு பற்றும்போது சுட்டி விரலா னது மொட்டிலுள்ள தடித்த வளையத் திற்கு முற்புறமாகவும், நடு விரலான து மொட்டிலுள்ள தடித்த வளையத் திற்கு பின்புறமாகவும் இருக்கும்.

ஆண் தான் உச்ச கட்ட்டததை எட்டுவ தாக உணர்ந்தவுடன் அதை பெண் பங்காளிக்கு உடனடியாகச் சொ ல்ல வேண்டும்.

உடனடியாக அவள் தனது பெரு விர லாலும், ஏனைய இரண்டு விரல்க ளாலும் அவனது உறுப்பை இறுக்கி அழுத்த வேண்டும். வலிக் காது. ஆனால் விந்து வெளியெறுவது தாம தப்படும்.

மருத்துகள்

இத்தகைய நடைமுறை சிகிச்சைகளால் பயன் இல்லையெனில் மருத்துவரை நாடுங்கள். உடலுறவில் முந்துவதைவிட வும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடு வதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் என்பதைத் தாரக மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருக் கக் கூடாது. திருப்பதி கொள்வதற்கு மாற்று வழிகள் உள்ளன.

இறுதியாக..

இதற்கு சிகிச்சைகள் மட்டும் பயனளிப்ப தில்லை. கணவன் மனைவி தம்மிடை யே பிரச்சனைகளையும் விருப்பு வெறுப் புகளையும் வெளிப்படையாகப் பேசி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாத சக உறவு இருக்க வேண்டும்.

நம்பிக்கையும்
புரிந்துணர்வும்
விட்டுக் கொடுப்புகளும்

நிலவினால் முந்துவதும் பிந்துவது ம் அர்த்தம் கெட்டுப் போகும் என்ப தே நிஜமாகும்.

முந்துதல் வேண்டாமே!

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கி றது. ஆனால், இருவருமே வெளிப்படை யாகப் பேசத் தயங்குகிறார் கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடு கதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?

விந்து முந்துதல்.

இதுதான் ஆண்களை மிக அதிகமாக ப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையா கும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும்  மனைவியைத் திருப்திப்படுத்த முடிய வில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள்.  இயலாமை யால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகி றார்கள்.

அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடை யைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனி ப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத்தவிக்கிறார்கள். மெல்லவும் முடியா மல் விழுங்கவும் முடியாமல்இருவருமே துன்புறுகிறார்கள்.

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படை க் கார ணம் தெளிவாகப் புரியவில்லை. இருப் பினும் உயிரியல் கார ணங்களும் மனோவியல் காரணங்களும் இணை ந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச் சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

உறவின்போது நிதானத்தைக் கடை ப் பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கை யாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இது தவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புக ளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்க ளின் உறுப்பின் முனையில் உள்ள மொட் டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந் துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிற து.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய் யும் விறைப்பு மருந்துகள் ( Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர் நிலையை ( Sensitivity ) சற்றுக் குறை ப்பதன் மூலம் விந்து விரைவ தைத் தாமதப்படுத்துகின்றன. ஆயினும், விந்து வெளியாகும் உண ர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவ னையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரள வு செயற்திறன் கொண்டவை என் பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளைவிட விசிறப்படும் (Spray) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலப மானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந் து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாக த் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங் கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய் யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவை ப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனை யில் இருந்த போதும் புது மருந்துகள் பற்றிய ஆய் வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரி சோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்ற ன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற்படி ச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப்பொரு த்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர் காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போது ம் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவு ம் இணைந்து ஓடுவதில்தான் இருவரு க்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட் டும். ஆனால், கணவன் மனைவி இ டையே நம்பிக்கை யும் புரிந்துணர்வு ம் விட்டுக் கொடுப்புகளும் நிலவினா ல் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.

வரைவிலக்கணம்

ஒரு ஆண் தனது பாலியல் துணை விரும்பும் காலத்தி ற்குமுன் விந்தை வெளியே ற்றலாகு ம்.

இது 50%க்கும் அதிகமான பாலியல் உறவுகளில் நிக ழ்கிறது.

சில பாலியல் வல்லுனர்கள் புணர்ச்சி ஆரம் பித்து 2 நிமிடங்களில் விந்து வெளியாவது என்றும் வரைவிலக்கணப்படுத்துவர். இந்நி லையானது முக்கால்வாசி ஆண்களில் அவர்களது அரைவாசிக்கு ம் அதிகமான உறவுகளில் நிகழ்கிறது.

புணர்ச்சி நேரம்

புணர்ச்சி ஆரம்பித்து விந்து வெளியேறுவதற்கா ன சராசரி நேரம் வெறும் 6 இலிருந்து 7 நிமிடம் வரையான காலப்பகுதி மட்டுமே. எனவே அரை மணிநேரம் புணர்ச்சி என்றெல்லாம் நீங்கள் கற்ப னை செய்திருந்தால் அக்கற்பனையை மறக்கவும்.

முதற் காரணி

உளவியல் காரணி – மன அழுத்தம்

நிதிப்பிரச்சினைகள், துணையுடன் மனம்விட்டு பேசாமை, ஏன் “விந்து முந்துமோ “என்ற பயம் கூட கார ணியாகும்.

சிலருக்கு அதீத வேட்கை / கிளர்ச்சி கார ணமாகும். ஆனால் இது நாளடைவில் சரியாகும்.

சரி செய்தல்

மன அழுத்தங்களை தவிர்த்தல்.

புணர்ச்சிக்கு முன்னரான பாலியல் செயற்பாடுகளில் அதிக நேரத் தை செலவிடல்

உணர்வுகளை கட்டுப்படுத்த பயி ற்சி பெறல்

இதற்கான பயிற்சி :start and stop technique

விந்து வெளியேறக்கூடும் என்ற நிலை வரும்போது சிறிது நேரன் புணர்ச்சியை நிறுத்தி பின் மீண் டும் ஆரம்பித்தல். இவ்வாறாக மீண்டும் மீண்டும் ஆரம்பித்து நிறுத்துவதன்மூலம் புணர்ச்சியி ன் நேரத் தை மடங்குகளாக அதிகப்படுத்தலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply