Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எங்கள் காதலை பிரித்து அவரை கொன்று விடுவதாக எனது தந்தை என்னை மிரட்டுகிறார்!” – இயக்குநர் சேரன் மகள், போலீஸில் பரபரப்பு புகார்

தன்னை தன் காதலனிடம் இருந்து பிரித்து, அவரை கொலை செய்யப் பார்க்கிறார் என்று தனது அப்பாவும் டைரக்டருமான சேரன் மீது அவரது இளைய மகள் தாமினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் கொடுத்துள்ளார்.

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை யில் உள்ள தனது வீட்டில் குடும்பத் துடன் வசித்து வரும் இயக்குநர் சேரன், நல்ல‍ குடும்பப் பாங்கான திரைப்படங்கள் எடுப்பதிலும், நல்ல காதல் கதைகளை படங்களாக எடுப்பதிலும் கைதேர்ந்தவர் டைரக்டர் சேரன். அவரது மனைவி செல் வ ராணி. இருவருக்கும் நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இயக்குநர் சேரனின் 2-வது மகள், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகி றார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் தனது அப்பாவான டைரக்டர் சேரன் தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; சூளைமேட்டை ச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறேன். அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்ஸராக வும் உள்ளார்.

சினிமா விழா ஒன்றுக்கு என் அப்பாவுடன் சென்றபோதுதான் சந்துரு எனக்கு அறிமுகமானார். பிறகு நாங்கள் காதலி க்க ஆரம்பித்தோம். எங்கள் காதல் பற்றி என் தந் தைக்கு தெரிய வந்தது. முதலில் அவர் எங்கள் காதலை எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்த பிறகு நீ சந்துருவையே திருமணம் செய்து கொள் ளலாம் என்றார்.

ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் வீட்டில் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என் அப்பாவும், அவருக்கு நெரு க்கமான திரைத்துறையினரும் சேர்ந்து சந்துரு வை மறந்துவிடும்படி என்னை மிரட்டி வருகின் றனர். சந்துருவை கொலை செய்ய பலமுறை முயற்சி நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது என் அப்பா வெள்ளைத்தாளில் என்னிடம் கையெழு த்து வாங்கினார். எங்கள் காதலை பிரித்து சந்துருவை கொன்று விடுவ தாக அவர் என்னை மிரட்டுகிறார். என்னை வீட்டில் அடைத்து வைத் திருந்தனர்.

இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வந்து சந்துரு வின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். என் அப்பா எங்கள் காதலை பிரிக்க முயற்சிக்கிறார் என்று சந்துருவின் அம்மா மற்றும் அவரது அக்காவிட ம் கூறினேன். அவர்களுடன் வந்து தான் இன்று கமிஷனர் அலுவலகத்தி ல் புகார் கொடுத்துள்ளேன். என்னை என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply