தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு (பெரிய அளவு) – 2
சர்க்கரை – 1 அல்லது ஒன்றரை கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
பாதாம் எஸ்ஸென்ஸ் – ஓரிரு துளிகள்
மஞ்சள் அல்லது கேசரி கலர் – ஓரிரு துளிகள்
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித் துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் கெட்டியாக ஆரம்பிக் கும்.
இப்பொழுது கலரைச்சேர்த்து, நெய்யை சிறிதுசிறிதாக விட்டு நன்றாகக் கிளறவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தி ற்கு மாற்றி வைக்கவும்.
– அடுப்பங்கரையில் கிடைத்தது