Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நேருவை பிரம்மிக்க‍ வைத்த‍ ‘தமிழர்’!

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, சென் னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும். என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். தெலுங்கு பேசும் மக்க ளைக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவாக்கப் பட்ட பிறகும் கூட ஆந்திரமாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. 

இந்த நிலையில் 1948-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம் என் பதை நிலை நாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலி ல் போ ட்டியிட்டனர். தேர்தலில் வென்று சென்னையை ஆந்திராவுடன் இணைத்து விட வேண்டும் என்பது அவர்களது திட்டமாகும். 

அந்த சமயத்தில் காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந் தார். ஆந்திரா காங்கிரஸ்காரர்கள் திட்ட மிட்டு காய்களை நகர்த்து வதை அறிந்த அவர், சென்னை மாநகராட்சித் தேர்த லில் தமிழக காங்கிர சார் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவித்தார். எல்  லோரும் காம ராஜரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

அதன் பிறகு காமராஜர் தன் அதிரடியை த் தொடங்கினார். தமிழ்நாடு எல்லையைக் கமிட்டி என்ற ஒரு அமைப் பை உருவாக்கினார். அந்த அமைப்பு சார்பில் “தமிழ் நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்” என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்பட்டனர். 

தேர்தலில் தமிழ் நாடு எல்லைக்கமிட்டி சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர் கள் அமோக வெற்றி பெற்றனர். ஆந்திர காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியைத் தழுவினார்கள். இதன் மூலம் சென்னை நகரை காம ராஜர் மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்க வைத்துக் கொண்டார். 

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர மாநில தலைவர்கள்,சென்னை நக ருக்கு உரிமை கொண்டாடுவதை கை விட்டு விட்டனர். இதன் மூலம் காமராஜர் ஓரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஒன்று தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவ ர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு முற்று ப்புள்ளி வைத்தார். 

இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி செல்லாமல் பார்த்துக் கொண்டார். சுதந்தி ரம் அடைந்த மறு ஆண்டே எழுந்த இந்த பிரச்சினையால் பிரதமர் நேரு மிகுந்த பதற்றத்துடன் இருந்தார். ஆனால் பிரச்சினையை  காமராஜர் (தமிழர்) கையாண் ட விதத்தை கண்டு நேரு பிரமித்துப்போனார். 

கர்ம வீரர் என்றால் என்ன அர்த்தம்:

பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்த ஒரு சிறப்புப்பட்டம் கரும வீரர் காமராஜர் என்பதாகும். கர்மமே கண்ணாகக் கொண்டவர் என்று இதற்கு அர்த்தம். கரும வீரர்கள் நட வடிக்கைகள் பற்றி குமரகுருபரர் பட்டியலில் தந்துள்ளார். மெய் வரு த்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ் சார், செல்வி அருமையும் பாரார், அவமதிப்பும் நாடார் என்பது அது. 

9 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு நூற்றா ண்டுச் சாதனைகளை காமராஜர் நிக ழ்த்தினார். அது எவ்வாறு மெய் வருத்தம் பாராது, பசிநோக்காது, கண் துஞ்சாது, அருமை பார்க்காது, அவமதிப்பையும் பொருட்படுத்தாது, என வே தான் அவர் கருமவீரர் ஆனார். கருமமே கண்ணாக காமராஜர் உழை த்த காரணத்தால்தான் தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் கிராமங்களில் 75 சதவீதம் மின் வசதி பெற்றன.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: