Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பருவப்பெண்களுக்கு ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்ச‍னைகள்

பொதுவாக 13-19  வயது வரையிலான  பருவத்தை  “டீன் ஏஜ்’ என்கிறோ ம். இந்த  டீன்-ஏஜ் பருவம்  என்பது  மிகவும் வாழ்வில் முக்கியமான  கால கட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ்  பெண்களின் எண்ணி க்கை, 25  கோடிக்கும் அதிகமாக  உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த  காலகட்டத்தில்,  பெண்கள்  உடல்  ரீதி யாகவும்,  மன  ரீதியாகவும் பல்வேறு  மாறுத ல்களை  சந்திக்கின்றனர்.  அதனால்,  பெற்றோ ராகிய நீங்கள்,  குழந்தைப்  பருவத்தில் எவ்வ ளவு  அக்கறையோடு கவனித்தீர்களோ அதே போல்,  இந்தப்  பருவத்திலும்  கவனிக்க வேண்டியது அவசியம்.

பருவப் (டீன் ஏஜ்) பெண்களுக்கு  ஏற்படு ம் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில்  சில  குழந்தைகளுக்கு  கால  தாமதம்  ஏற்படலாம்.  உடல்  உறுப்பு  வளர்ச்சி சரியாக  இருந்தால்  16வயதுவரை பொறுத்திருந் து  பார்க்கலாம்.  அப்படி இல்லையெனில்,  உடன் மருத்து வரை  அணுகுவது நல்லது.

* சிலருக்கு  முகத்தில்  பருக்கள்  ஏற்படும்.  இது  எண்ணெய்  பசையுள்ள  தோல்,  ஹார்மோன் மாறுபாடுகளால்  ஏற்படக் கூடிய  சாதாரண  ஒரு நிகழ்வே.  ஆனால், இந்த  வயதுப் பெண்கள்  இதை ஒரு  நோய்  போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள்குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.  எக்காரணம் கொண்டும்,  பருக்களை கிள்ளாமல்  இருக்க அறிவுறுத்துவது  அவசி யம்.

* அடுத்து,  இளம்  பெண்களுக்கு,  தன்  சுத்தம் பற்றி  தாய்மார்கள்  எடுத்துக்  கூற வேண்டி யது  மிகமிக  அவசியம்.  நோய் தொற்று வரா மல்   இருப்பதற் கு  சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறி த்தும்  கவனமுடன் இருக்க  அறிவுறுத்த வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாகசொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப்  பூர்வமாக பல விதமான  மன உளைச்சலுக்கு  ஆளாகின்ற னர்.

எனவே,  இந்த  பருவத்தில்  எல்லோருக்கும் இப்படித்  தான்  உடல் வளர்ச்சி  இருக்கும். இது குறித்து கவலைப்பட  வேண் டாம்  என் பதை  பெற்றோர்கள்  எடுத்துக்கூறுவது  மிக வும்  அவசியம். அதோடு,  வெளியிடங்களி ல் தங்களை  பாதுகாத்துக்  கொள்வது  பற்றி யும் கூற வேண்டும்.

*வேலைக்குசெல்லும்  தாய்மார்கள் தங்க ளின் டீன்-ஏஜ் பெண்களுடன்  தினமும்  சிறி து நேரமாவது  கட்டாயமாக செலவழிக்க  வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்புபற்றி பேச வேண்டும்  மனம்  விட்டு  பேச  வேண்டும். இது அவர்களிடம்  தன்னம்பிக்கையை வளர்ப்பது டன்  தாயுடனான  நெருக்கத்தையும்  பாசத்தை யும்  மேம்படுத்தும்.

* இந்த  வயதுக்கே உரிய  பல்வேறு  பிரச்னைக ளால்,  டீன் ஏஜ்  குழந்தைகள்,  பொதுவாக அதி கம் சாப்பிட மாட்டார்கள்.  இதனால், ரத்த சோ கை  ஏற்பட  வாய்ப்புண்டு.  இவற்றை சரிப்படு த்துவதுடன்  ஹீமோகுளோ பின் அளவை  10க் கு மேல்  வைத்துக் கொண்டால், படிப்பில் முன் னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு,  ஆரோக்கி யம்  ஆகியவை மேம்படும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: