Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்மார்ட்போன்கள் “இவ்வளவு” மின்சாரத்தைக் குடிக்க‍ காரணம் என்ன?

நாளொரு போனும் பொழுதொரு அப்ளி கேஷனுமாக வாடிக்கையாளர் களைத் திணறடிக்கும் மொபைல் போன் துறை, சார்ஜ் போதாமல் நொண்டிக் கொண்டிரு ப்பது பேட்ட ரியில்தான். எந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் போனாக இருந்தாலும், சார்ஜ் நிற்ப தே இல்லை. குழந்தைகளை மறக் காமல் தூக்கிக் கொள்கிறார்களோ இல்லையோ, சார்ஜரை எல்லா இடங்களுக்கும் மூட் டை கட்டுவது தவிர்க்கவே முடியாதது. பல போன்களில் சார்ஜ் எட்டு மணிநேரம் தங்கி னால் அதிகம். வீட்டில் சார்ஜ் போட்டு அலுவல கம் போனால், மாலை க்குள் சிவப்பு தெரியத் தொடங்கிவிடும். 
 
புதுசு புதுசாக மொபைல் போன்கள் வாங்கப் போவோர் கூட, பேட்டரி விஷ யத்தில் தயங்கித் தயங்கியே முடிவு எடுப்பர். பேட்டரி எத்தனை மணிநேரம் தாங்கும் என்ற கேள்வி எழாமல் எந்த போன் விற்பனையும் ஆவதில் லை. போனுக்குள் புதுப்புது முன்னேற்றங்களைச் சேர்த்து வெ ளியிடும் நிறுவனங்கள் கூட, பேட்டரி விஷயத்தில் ஜகா வாங்கிவிடும். சரி, ஏன் ஸ்மார்ட்போன் கள் இவ்வளவு மின்சாரத்தைக் குடிக்கின்ற ன? அதில் இருக்கும் இயங்குதளம், எண்ண ற்ற அப்ளிகேஷன்கள், அபரிமிதமான வசதி கள் ஆகியவை மிக விரைவாக பேட்டரியி ன் ஆற்றலை உறிஞ்சிவிடுகின்றன. பேட்ட ரிகளுக்குள் போதுமான மின்சாரத்தைச் சேமிக்க முடியாததே முக்கிய காரணம். 
 
இணையம் முழுக்க எப்படியெல்லாம் பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்த லாம் என்று தான் ஆலோசனைகள் கொட்டிக் கிடக்கி ன்றன. முக்கியமாக, செல்போன் ஸ்கிரீன் களின் வெளிச்சத்தைக் குறை ப்பதில் தொடங்கி, தேவையற்ற அப்ளி கேஷன்க ளை மூடி விடச் சொல்வது வரை ஒரே அட்வைஸ் மழை. ஆனால், இதெல்லாம் பிரச்னைக்குத் தீர்வே இல்லை. சொல்லப்போனால், இ ப்போதைக்குச் சரியான தீர்வு கிடைக்கவி ல்லை என்பதுதான் உண்மை.
 
மொபைல்போன் துறையின் சவலைப் பிள்ளை பேட்டரிகள்தானோ என்ற எண் ணமே பலருக்கும் ஏற்படும்.அப்படி இல் லை என்கின்றன இத்துறையில் நடக்கு ம் ஆய்வுகள். லித்தியம்-ஐயான் பேட்ட ரிகளே இன்று புழக்கத்தில் இருக்கும் பேட்டரிகள். இதனுள் கிராஃபைட் அனோட் தான் அதிகபட்ச இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதற்கு மாற்றாக வேறு என்ன வைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்று ஆய்வு கள் நடக்கின்றன. சிலிக்கான அனோடு களைப் பயன்படுத்தினால், இப் போதிருப் பது போல் பத்து மடங்கு மின் சாரத்தைச் சேமிக்க வாய்ப்புண்டு. அதே போல், லித்தியம் -சல்ஃபர், லித்திய ம்- கடல்நீர், லித்தியம்-காற்று ஆகிய இ ணைப்புகளின் மூலம், கூடுதல் திறனைப் பெற முடியும் என் றும் நிரூபி க்கப்பட்டி ருக்கிறது. இவை மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னு ம் பல காலமாகும்.
 
லித்தியத்தை மட்டும் ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும்? வேறு ஏதே னும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல், பேட்டரி நிறுவனங்களிடம் ஏற் பட்டிருக் கிறது. விளைவு, கார்பனின் மற்றொரு வடிவமான கிராபைனைக் கொண்டு பேட்டரி உருவாக்கும் திட் டம். இதனை சில நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துவிடமுடியும். இதற்காக இங்கிலாந்து அரசு பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கி இருக்கிறது. பேட்டரிக்குள் இருக்கும் எலக்ட்ரோ டுகளின் ஆற்றலை எவ்வளவு உயர்த்த முடியும் என்பதிலேயே கவனம் செலுத் தப்படுகிறது.  மைக் ரோ பாட்டரிகளை உருவாக்குவது மற்றொ ரு திட்டம். இல்லினாஸ் பல்கலைக்கழகம் இதைச் செய்திரு க்கிறது. இப்போதிருக்கும் பேட்டரி களின் அளவில் பதி மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் புதிய மைக்ரோ பாட்டரி, ஆயிர ம் மடங்கு வேகமாக சார்ஜ் ஆகுமாம்.இதெல்லாம் ஆய்வு நிலையில் இருக்க, இன்னொரு திட்டம் கொஞ்சம் முன் னேறி இருக்கிறது. வைசிப் கிரிஸ்டல் (Wysips Crystal)என்ற பிலிம், சூரியனில் இருந்து மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி இருக்கி றது. செல் போன் ஸ்கிரீனுக்குக் கீழே பொருத்தப்படும் இந்த மிகமெல்லிய பிலிம், எந்த ஒளியி லிருந்தும் மின்சாரத் தை உருவாக்கிக் கொள்ளும்; சூரிய ஒளி யில் இருந்து கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளும். இன் றைய தேதியில் இது உற்பத்தி செய்யும் மின்சார ஆற்றல் போதுமான தாக இல்லை; 2014க்குள் இதனைப் பன் மடங்கு உயர்த்திவிட முடியும் என்கிறார் கள்.
இன்னும் சில வித்தியாசமான ஆய்வு கள் .
சிறுநீரில் இருந்து மின்சார பேட்டரி, சோடியம் ஐயானைக் கொண்டு மரத்தில் இருந்து மின்சார சார்ஜ் என் றெல்லாம் ஆய்வுகள் நடக்கின் றன.பேட்டரியின் மற்றொரு பிரச் னை, அதனை சார்ஜ் செய்யும் நேரம். பல போன்களுக்கு சார்ஜ் ஏற பலமணிநேரம் ஆகும். பொறுமையைச் சோதிக்கும். எப்படி விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பதினெட்டே வயதான இஷா கார்ரே கண்டு பிடித்திருக் கும் சூப்பர் கபாசிட்டர், இப்பிரச்னை யைத் தீர்த்து விடக் கூடும். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண்ணான இஷா, இந்தக் கண்டு பிடிப்புக்காக ஐம்பதாயிரம் டாலரைப் பரிசாகப் பெற்றுள்ளார். இந்த சூப்பர் கபாசிட்டர்மூலம் இருபது நொடிக ளில் செல்போனை சார்ஜ் செய்து விட முடியுமாம். இப்போ தே, கூகுளு ம் இன்டெல்லும் இப்பெண்ணோடு பேசி, சூப்பர் கபாசிட்டர் தொழில் நுட்ப த்துக்கு ஆதரவளி த்துள்ளன.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply