Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (08/08/2013): உங்கள் மனைவி, அவரது கணவர் . . .

அன்பு அக்காவிற்கு —

நான் 30 வயதான ஆண். திருமண மாகி இரண்டு வருடங்கள் ஆகிற து. ஒரு பெண் குழந்தை இருக்கிற து. சந்தோஷமான குடும்பம்.

நான் படித்துக் கொண்டிருக்கும் போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரு ம்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக்கொ ண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில்தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம்.

ஜாதி எங்கள் இருவரையும் பிரித்தது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து விட்டது. தற்போது, அவளுக்கு இரண்டு குழந் தைகள். சென்ற மாதம் அவளிடமிருந்து கடிதம் வந்தது. அவள், என னை எள்ளளவும் மறக்கவில்லை. அவள் குழந்தைகளுக்கு, முன்பு நாங்கள் வைத்த பெயரையே வைத்திருக்கிறாள். எந்நேரமும் என் னையே நினைத்து, தனிமையில் அழுது கொண்டிருக்கிறாள். வெளி யில் எங்கும் போவதில்லை; சினிமா பார்ப்பதில்லை; புத்தகம் படிப்ப தில்லை. சிறைப்பறவையாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கி றாள்.

அவள்கணவனிடமும், பலமுறை என்னைப்பற்றியே புலம்பி இருக் கிறாள். அவளுடைய நல்லநேரம் அவளுடை ய கணவன் ஒரு தெய்வம்போல. “கல்யாணத் திற்கு முன்பே சொல்லியிருந்தால் நான் உங்க ளை சேர்த்து வச்சிருப்பேன்ல…’ என கூறியிரு க்கிறார். “உடல் மட்டும்தான் உங்களுக்கு; என் மனசு என்னிடம் இல்ல’ன்னு இவளும் சொல் லி இருக்கா. எல்லாவற்றையும் சகித்துக் கொ ண்டிருக்கிற து அந்த தெய்வம்.

நானும், அவளுக்கு கடிதம் எழுதி எவ்வளவோ அறிவுரைகள் கூறினேன்; அவள் கேட்பதாக இல்லை. ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. என் நினைவை அவள் மனதில் இருந்து அகற் றுவது முடியாத காரியம். நானேகூட மறந்துவிட்ட, முன்பு நடந்த ஒவ்வொரு நிகழ்ச் சிகளையும் அப்படியே கூறுகிறாள்; முன்பு கடித த்தில் எழுதிய வாச கங்களை அப்படியே சொல்கிறாள்… “என் உடலி லுள்ள ஒவ்வொரு செல்லும் உன் பெயரைத்தான் சொல்லிக்கொ ண்டிருக்கிறது.’ என்கி றாள்.

“வீடுவரை உறவு; வீதிவரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ …’ ன்னாரு கண்ணதாசன். எனக்கு கடைசி வரை உன் நினைவுகள் இருக்கும். உயிர் என்னை விட்டுபிரியும்போதுகூட ” உன் பெயரையே தான் சொல்லிகிட்டிருப்பேன்’ என, எழுதி இருந்தா ள்.

இப்ப சொல்லுங்க… என்ன செய்யலாம்? தங்கள் ஆலோசனைப்படி நான் நடக்க வி ரும்புகிறேன். அந்த பெண் அவள் கணவனு டன் நன்றாக வாழ வேண்டும். என்னைப் பற்றிய நினைவுகளை அவள் மனதிலிருந்து நீக்க வேண்டும். அதற் கு நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கு ஒரு நல்ல வழி கூறுங்க ள்.

இப்படிக்கு,
— அன்புத் தம்பி.

அன்பு தம்பி—

உங்கள் கடிதம் கிடைத்தது.

காதலித்தவரையே மணம் முடிப்பது எல்லாருக்கும் அமைவதில் லை. வாழ்க்கை பல விசித்திரமானத் திருப்ப ங்களை உடைய நாடகம். நாம் அந்த நாட கத்தின் கதாபாத்திரங்கள்; அவ்வளவுதான்! முதல் நாள் ராமாயண நாடகத்தில் ஆஞ்ச நேயர் வேஷம் கட்டினவன், அடுத்த நாள் மகாபாரத நாடகத்தில் துச்சாதனன் வேஷம் கட்டலாம்…

அப்போது அந்த வேடத்தை செவ்வனே செய் ய வேண்டுமே அல்லாது, “அய்யோ, நான் கட் டை பிரம்மச்சாரியாக ஆஞ்சநேயர் வேஷம் கட்டியவன்… ஒரு பெண்ணின் புடவையைப் பற்றி இழுக்கமாட்டேன்.’ என, ஒருநல்ல நடிகன் சொல்ல மாட்டான்.

இப்போது உங்கள் விஷயத்துக்கு வருகிறேன்… பருவம் என்ற நாடக த்தில் நீங்களும், நீங்கள் குறிப்பிட்ட பெண்ணும் காதலர்களாக நடி த்தீர்கள். இப்போது காட்சி மாறிவிட்டது. இல்வாழ்க்கை என்ற நாட கத்தில் அவள் இன்னொருவரின் மனைவியாகவும், நீங்கள் வேறொ ருத்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கணவராகவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது பழசை நினைத்து மனதை அலை பாய விடக் கூடாது.

த்து வருடங்களாக ஒருவரை மண ந்து, அவருக்காக இரு குழந்தைகளை யும் பெற்றவள், “உடம்பு தான் உனக்கு. உள்ளம் வேறொருவருக்கு’ என சொ ல்வதே தவறு. யோசித்துப் பாருங்கள்… மனசெல்லாம் எங்கோ இருக்க, கண வனின் பக்கத்தில் படுப்பது, மகத்தான துரோகம் என, நீங்கள் நினைக்க வில்லையா?

அதற்கு ஆரம்பத்திலேயே, அந்தக் கணவரிடம் நடந்ததை சொல்லி, இவள் விலகியிருக்கலாம்.

அவளுக்குத் திருமணமாகி, பல வருடத்திற்குபின்தான் நீங்கள் மணம் புரிந்திருக்கிறீர்கள். அப்போதே விவாகரத்துப் பெற்று, உங்க ளிடம் வந்திருக்கலாம். அதைவிட்டு இப்போது நினைத்து, தானும் குழம்பி, தெளிவாய் இருக்கிற உங்களது வாழ்க்கையையும் அந்தப் பெண் குழப்புவது நியாயமே இல்லை.

இப்போது நீங்கள் இருவர் மட்டும் இல்லை… உங்கள் மனைவி, அவ ரது கணவர், உங்கள் இருவரது குழந்தைகள், உங்கள் இருவரது குடு ம்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி எத்தனை பேருக்கு இதனால் பிரச் னை பாருங்கள்.

மனைவி வேறொருவனை விரும் புகிறாள் என்பது தெரிந்தும், ” இதை முன்னாலேயே சொல்லி இருக் க லாம் இல்லே…’ என அப்பா வித்தன மாய் கூறும் அவளது கணவர். எப் படி தம்பி இதுபோன்ற நல்ல இதயத்துக்கு அவள் துரோகம் நினை க்க முடியும்? அவள் நினைத்தாலும் நீங்கள் நினைக்கக் கூடாது!

இதுபோல, இந்த விஷயம் எதுவுமே தெரியாத உங்கள் மனைவியை யும் எண்ணிப் பாருங்கள்.

சென்றது கனவாகவே இருக்கட்டு ம். இப்போது கையில் இருக்கும் வாழ்க்கையை உண்மையுடன் நேசியுங்கள். அவளிடம், “நாமிரு வரும் காதலித்த குற்றத்துக்காக, நம்மை சுற்றி உள்ள உறவுகளுக் கெல்லாம் தண்டனை தர வேண் டாம்…’ என கூறுங்கள்…

இப்போது ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நாடகத்தில் முழு கவன த்தையும் செலுத்துங்கள்; வெற்றி உங்களுக்கே!

வாழ்த்துகள்!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: