Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான (முக்கிய) பாலியல் பிரச்சனைகள்

இச்சையின்மை

பல சமயங்களில் ஆண், பெண் இரு பாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனு ம் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என் பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரண ங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற் றும் பரபரப்பு .

செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப் படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் கொள் வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நர ம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைக்கு தன்மை குறைய கார ணம்.

காரணம் / அறிகுறிகள்

• செக்ஸில் ஆர்வம் இல்லாமை

• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.

• இருஉடலுறவுக்கு நடுவே நிறைய நாட் கள் ‘இடைவெளி’ விடுவது.

• பாலுணர்வு கனவுகள் குறைதல்

• சுயஇன்பம் பெறுவதிலும் நாட்டம் இல்லா மல் போதல்

இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ் வகந்தா, பூனைக்காலி, கோக்சூர் (நெரிஞ்சி) சலேப், வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை பயனளி க்கும் மூலிகைகள்.

விந்து முந்துதல்

உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில் லாத ஆணும், பெண்ணும் சேரும்போது, பழக பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும். ஆனால் குறை பாடு இருந்து மிகக் குறைந்த நேரத்தில், உடனே யே விந்து வெளி யேறி விட்டால் ஏற்படும் பிரச்சனை பல விளைவுகளை உண்டாக்கும். ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு (பேராவல், டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற விர க்தி ஏற்பட்டு விடும்.

காரணங்கள்

1. மனோரீதியான குறைபாடுகள்–பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அள வுக்கதிக காதல் உணர்வு

2. உடல் ரீதியாக, ஆணுறுப்பின் தோல் மிக வும் சென்சிடிவாக  (தொட்டால் சுருங்கி செடிபோல், அதிக உணர்வு) இருப்பது. பிற விக் கோளாறுகள்

3. நமது உடலில் பரவலாக காணப்படும் ‘ஸெரோடோனின்’  என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய் ச்சிகள் இதை உறுதி செய்கின்றன.

4. அதீத “செக்ஸ்” ஆசை

இவையே காரணங்களாக அமைகி ன்றன• ஆகவே பாதிக்க‍ப்பட்ட‍ ஆண், ஒரு தகுதியான மருத்து வரை அணு கி, இதற்கான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டு அவரது ஆலோச னைப்படி நடந்து வந்தால், நிச்ச‍யம் இந்த குறைபாடில் இருந்து நீங்கள் விடுபட்டு, தாம்பத்தியத்தில், நிச்ச‍யம் உங்கள் துணை திருப்தி படுத்தி, உங்கள் இல்ல‍ற வாழ்வு நல்ல‍றமாகும் என்பது உண்மை!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: