Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம் திறமைக்கேற்ற வேலையும் நல்ல‍ வருமானமும் கிடைக்கும் துறைதான் ஃபோட்டோகிராபி

உணர்நுட்ப பார்வைத் திறன் கொண்டு, ஒரு சூழலை மிகவும் எதார்த்தமாக படம் பிடிக்கும் ஆற்றல் இருந்தால், உங்களுக் கு ஏற்ற படிப்பு போட்டோகிராபி. பேஸ் புக் போன்ற தளங்களில் போடப்படும் சாதா ரண போட்டோக்கள் மற்றும் ஆல்பங்களி ல் இருக்கும் போட்டோக்கள் ஆகியவற் றைவிட, வித்தியாசமான படங்களை எடுக்கும் துறைதான் போட் டோகிராபி.

ஒரு நல்ல போட்டோகிராபி என் பது, கூரிய உணர்நுட்பத்திறன் மற் றும் நம்மை சுற்றி என்ன நடக்கி றது என்பதை கவனித்து, மிகவும் எதார்த் தமாகவும், நுட்பமாகவும் படம் பிடிக்கும் கலையாகும்.

கற்றல் செயல்பாடு

பலவிதமான கேமராக்கள் மற்றும் லென்ஸ் மற்றும் ஸ்டுடியோ லைட்டிங் ஆகியவற்றை கையாள்வ து எப்படி என்பது குறித்தும், விளம் பரம், பேஷன், டாகுமென்டரி மற்றும் டிரவால் ஆகிய போட்டோ கிராபியி ன் பல்வேறான பரிமாணங்கள் குறித் தும் இத்துறை மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

மேலும், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைப் பணிகளில், இன்ட ர்ன்ஷிப் பணிகளுக்கும் செல்கிறார்கள். மாணவர்களின் ஆர்வத்தி ற்கேற்ப பல்வேறான பணிகளில் ஈடுபடமுடியும். பலர் free lance பணிகளில் இருக்கிறார்கள் மற்றும் பத்திரிகைத்துறை ஆர்வமுள் ளவர்கள், மீடியா மற்றும் பப்ளி கேஷன் பிரிவுகளில் பணியாற்றுகி றார்கள்

படிப்பைத் தேர்ந்தெடுத்தல்

போட்டோகிராபியை ஒரு முழு நேர தொழிலாக தேர்வு செய்ய விரும்பு வோருக்கு, போட்டோ கிராபியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பு ஏற்ற து. அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பானது, வகை ப்பாடு ரீதியிலான போட்டோகிராபிக்கும், வார இறுதிநாள் படிப்பானது, பொழுதுபோக்கு போட் டோகிராபிக்கும் பரிந்துரை செய்யப் படுகிறது.

இந்த போட்டோகிராபி படிப்பை, மூன்று வருட BFA, ஒரு வருட டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட பல முறைகளில் படிக்க லாம். சிலர், போட்டோகிராபியை, add-on முறையிலு ம், பகுதிநேர முறையிலும் படிக்கிறார்கள்.

கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, படிப்பிற் கான கட்டணங்கள் வேறுபடுகின்றன. தனியார் கல்லூரிகளில், ஒரு வருட டிப்ளமோ படிப்பிற்கு, ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை செல வாகும்.

திறன் மேம்பாடு

ஒரு போட்டோகிராபி மாணவர், முத லில் தன்னை சுற்றி என்ன நடக்கி றது என்பதை தவறாமல், உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பின்னர், நுட்பங் களைப் படிக்கலாம். உலகைப் புரிந்து கொள்வதுதான் முதல் தகுதி யே. எனவே, ஒரு DSLR கேமராவை வாங்கி, சாதாரணமாக புகைப் படும் எடுத்துப் பழக வேண்டும்.

திறனை சரியான முறையில் வெளி ப்படுத்தல்

உங்களின் போட்டோகிராபிதிறனை வெளிப்படுத்த, இன்றைய தேதியில், ஆன்லைன் நெட்வொர்க்கிங் என்பது ஒரு சிறந்த வழிமுறையாகும். இது ஒரு எகனாமிக்கல் மற்றும் டைனமிக் வழிமுறையாகும். சமூக தளங்கள், பேஸ்புக் மற்றும் இதர அம்ச ங்களில் உங்களின் புகைப்படங்களை பார்வைக்கு வைக் கலாம்.

பிரின்டிங் செலவு இப்போது குறை ந்து விட்டதால், படங்களை எடிட் செய்து, ஒரு நல்ல narrative புத்தகத் தை தயார் செய்து, அதை client – இடம் கொடுக் கலாம்.

வேலை வாய்ப்பு

இத்துறை நிபுணர், சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தலாம் மற்றும் freelance ப்ராஜெக்ட் வாங்கியும் பணியாற்றலாம். மேலும், ஒரு நிபுணத்துவ போட்டோகிராபரி டம், அதாவது ஆர்ட் டைரக்டர் போ ன்றவர்களிடம் ஆரம்பநிலையில் பணியில் சேர்வது நல்லது. அதே சமயம், செய்தி போட்டோகிராபரி டம் சேர்வதும் வரவேற்கத் தக்கதே.

ஒரு போட்டோகிராபர், தினமும் அதிக தனி மனிதர்களை தனது தொழில் நிமித்தமாக சந்திக்கிறார். வணிகம், பத்திரிகை, செய்தித் தாள், விளம்பரம், வலைதளங்கள் மற்றும் திருமணம் ஆகிய அம்ச ங்களுக்கு தொழில்முறையிலான உயர் ரக போட்டோக்கள் எடுக்க ப்படுகின்றன.

வருமானம் எவ்வளவு?

மேலும், e-commerce துறையின் வள ர்ச்சியால், சரியான பொருள் நுட் பத்தில் படம் பிடிக்கும் ப்ராடெக்ட் போட்டோகிராபர்களின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட த்தக்கது. ஆபரணங்கள், உடைக ள், ஷ¤க்கள் மற்றும் கடிகாரங்கள் ஆகியவற்றை படம் பிடிக்கும் அவர்களுக்கு, ஆரம்பகட்டத்தில், மா தம் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அதேசமயம், எடிட்டோ ரியல் போட்டோகிராபர், மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

ஒருசீனியர் போட்டோகிராபரிடம் உதவியாளராக இருப்பவர், மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிப்பார். மேலும், பேஷன் மற்றும் திருமண போட்டோ கிரா பர்கள், ஒரு தடவை தங்களை நிரூபித்துவிட்டால், அவர்களுக் கான மவுசே தனிதான்.

நீங்கள் சுயமாக தொழில்செய்யும் போட்டோகிராபராக இருந்தால், உங் களுக்கு வரும் பணியைப் பொறுத்து, ஒரு நாளைக்கு ரூ.5 ஆயி ரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். ஒருவரின் அனுப வம், திறமைகள் மற்றும் வாடிக்கையாளர் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, வருமான மும் வேறுபடும்.

படிப்பு-பி.எப்.ஏ.,(BFA) (போட்டோ கிராபி ), சான்றிதழ் படிப்பு / டிப்ள மோ படிப்பு

தகுதி

பள்ளி மேல்நிலைப் படிப்பு

சிறந்த கல்லூரிகள்

காலேஜ் ஆப் ஆர்ட், ரகுராய் சென்டர் பார் போட்டோகிராபி, ஸ்ரீ அரபி ந்தோ சென்டர் பார் ஆர்ட்ஸ் அன்ட் கம்யூனி கேஷன், ஜாமியா மிலியா இஸ்லா மியா.

பணி நிலைகள்

Portrait photographer, product photo grapher, industrial photographer, documentary photographer, photo journalist.

– தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: