Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்த தீட்டு, கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா?

சவ ஊர்வலம் சாலையில் போகையி ல், கோவிலை மூடிவிடுகிறார்களே ஏன்? தீட்டு பட்டுவிடுமே என்பதற்காத் தான் என்றால் அந்த தீட்டு கடவுளுக் கா? இல்லை. இறந்து போனவருக்கா ? 

என்றொரு கேள்விக்கு எழுத்துச் சித் த‍ர் திரு. பாலகுமாரன் அவர்கள் அளி த்த‍ பதில் இது.

மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு இறப்பும் நிச்ச‍யிக்க‍ப்பட்டு விடுகிறது. இன்னும் சொல்ல‍ப்போனால் பிறப்பு என்ற வார்தையை பிரித்து எழுதும்போது, ப்+இறப்பு = பிறப்பு என்று வருகிறது. பிறந்த மனிதன் இயற்கையாகவோ அல்ல‍து நோய் வாப்பட்டோ அல்ல‍து ஏதேனும் விபத்தின் காரணமாகவோ அல்ல‍து கொலை செய்யப்பட் டாலோ  அல்ல‍து தற்கொலை செய்து கொண்டு இறந்து போகும் ஒரு மனிதனின்  பிணத்தை சாலையில் தூக்கிச் செல் பவர் அதனு டனே செல்பவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார். இந்த ஊர்வ லம் செல்லும்போது, வழியில் கோவி ல் இருந்தால், அதன் கதவுகள் திறந்து இருக்கும் பட்சத்தில், அவர்க ளது மன தில் கடவுளை பற்றி ஒரு மனக் குறை வந்துவிட‌க்கூடாது என்பதற்காக‌த் தான். அதாவது தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண் டிருக்கிறேனே, என்னு டைய சகோதரனு க்கு அல்லது தகப்ப னுக்கு, அல்லது மகனுக்கு, அல்லது நெருங்கிய உறவினனுக்கு,  நண்பனு க்கு இந்த மரணத்தை கொடுத்து என்னிட ம் இருந்து அல்ல‍து எங்களிடம் இருந்து பிரித்து, அவரை / அவனை / அவளை மண்ணு க்கு உரமாக்கி விட்டாயே, அல்ல‍து நெருப்பில் சுட்டு விட்டாயே! அவனை / அவரை / அவளை பிரிந்து நான் எப்ப‍டி யெல்லாம் வாழ் வேன், அவள் அல்ல‍து அவர் உன்னை எப்ப‍டி வழிபாடு செய்தார். நேரம் காலம் இன் றி உன்னையே வணங்கியிருப் பார், உன் பக்தனை இப்ப‍டி மரணத்திற்கு காவு கொடுத்து விட்டாயே! நீ எல்லாம் ஒரு தெய்வ மாக, நீ தெய்வமாக இருந்தும் எனக்கு, அவரை அவனை அவளை பிரிந்து வாழும் பெருந் துன்பத் தை தந்தாயே என்று அந்த இடத்தை கடக்கும்போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவ நம்பிக்கை வரும். கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்.

இந்த மாதிராயன நேரங்களில் அதாவது வேத னையான நேரத்தில் கடவுளைப் பற்றிய அவ நம்பிக்கை வந்து விடக் கூடாது. அது அவர் களது மனதில் வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சவ ஊர்வலம் கடக்கும் போது, அந்த கோவிலின் பிரதான கதவுகளை மூடி, இறைவனை இவர்களது பார்வையில் இருந் து மறைக்கிறார்கள். அதனால்தான் அந்த கட வுள் நம்பிக்கை அவர்களிடம் என்றும் அசை யாது நிலைத்திருக்கும் அவர்களுக்கு ஒரு போதும். கடவுள் மீது அவநம்பிக்கை வரவே வராது என்பதுதான் உண்மை.

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply