Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்மைக் குறைவின் பொதுவான வகைகள்

ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு என்றால் என்ன?

ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு அல்லது ஆண்மைக் குறைவு என்பது உடலுறவின் போது ஆண் செயல்பட முடியாமல் போவது. ஆணின் உறுப்பு விறைப்புத்தன்மை அடையா மலோ அல்லது போது மான அளவு விறைப்புத் தன்மை அடையாமலோ சரியான முறையி ல் உடலுறவு கொள்ள முடியாமல் போவது. ஆண் உடலுறவைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறுகி ய நேரத்தில் விந்து வெளிப்படுவது

ஆண்மைக் குறைவின் வகைகள்

ஆண்மைக் குறைவு பொதுவாக 3 வகைப்படும்.

1. முதன்மை ஆண்மைக் குறைவு சிறு வயதிலிருந்தே ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை அடையாமல் போவது.

2. நடுநிலை ஆண்மைக் குறைவு சீராக நல்ல முறையில் இயங்கி வந்த ஆண் உறுப்பு ஒரிரு முறையாக பிரச்சனையை சந்திப்பது.

3. முதுமை ஆண்மைக் குறைவு ஏறுகின்ற வயது காரணமாக ஆண்மைக் குறைவு ஏற்படுவது.

இவை தவிர விந்து முந்துதல் – ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பி ல் நுழைந்தவுடன் விந்துவை வெளியேற்றி விடுவது

இதற்கான காரணங்கள்

சோர்வு

ஆசையின்மை

வெறுப்பு

அதிக உணர்ச்சி வசப்படுவது

ஆண்மைக் குறைவும் ஆயுர்வேதமும்

பழமையான ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆண்மைக் குறைவு மருத்துவத்திற்கென ‘விருக்ஷ சிகிட்ஸா’ என்ற முறை உள்ளது. ஆயுர்வேதத்தில் ஆண்களுக்கு விசேஷ சக்தி தந்து குதிரை பலம் தருவதற்கும் அதிகமாக உடலுறவில் ஈடுபட “வாஜி கர்ணம்” என்ற சிகிச்சை முறையும் உள்ளது. விறைப்புத் தன்மை விறைப்புத் தன் மை என்பது உடலின் செயல்பாட்டிலேயே மிகவும் சிக்கலானது – ஏனெ னில் விறைப்புத் தன்மை பெற நரம்புகள், இரத்த க் குழாய்கள், சுரப்புகள் மற்றும் நல்ல மனநிலை தேவைப்படுகின்றது. இதில் ஏதாவது ஒன்று இல் லையெனில் விரைப்புத் தன்மை அடைவது கடி னம். இவை தவிர மூளை ஒரு வித சந்தோஷ ஊக்கியைச் சுரக் கின்றது. இந்த சுரப்பு இரத்த நாளங்களை விரிவடையச் செய்து ஆணின் உறுப்புக ளுக்கு அதிகமான இரத்தத்தை செலுத் துகின்றது. அந்த ஊக்கியானது உடலுறவு முடிந்தவுடன் தளர்வை உண்டாக்கி இரத்தத்தை உறுப்புகளி லிருந்து வெளி யேற்றுகின்றது. இதனால் விரைப்பு குறைந்து ஆண் உறுப்பு இயல்பு நிலை யை அடைகின்றது.

ஆண்மைக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்

எவரிடமாவது இவ்வுலகில் உன்னதமான மேன்மையான செயல் எது என்றுகேட்டால் ஆண் பெண்சேர்க்கை என்றுதான் பதில் வரும். ஏனென்றால் உடலுறவு ஒன்றுதான் சந்ததியினரை உண்டாக்கக் கூடியது. உடலுக்கு உற்சாக மளிக்கக் கூடியது. மனநலப் பிரச்சனை களுக்கும், உடல் நலப் பிரச்சனைகளுக் கும் வடிகாலாக அமை ந்து புதுத்தெம்பை யும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. உலகின் ஆதாரமாக விளங்குவதும் ஆண் பெண் உறவே ஆகும். அத்தகைய உன்னதமான செயல்பாட்டில் குளறுபடி யும் மனக்கசப்பும் சொல்ல முடியாத மன வேதனையையும் ஏற்படுத்த க் கூடியது ஆண்மைக் குறைவு. இதனால் மனவெறுப்பு, சோர் வு, கோபம் போன்ற பிரச்சனைகளு க்கு பெண்கள் தள்ளப்படுகின்றனா. ஆண் மைக் குறைவிற்கு தக்க தருணத்தில் தகுந்த மருத்துவம் செய்து கொண் டால் வாழ்க்கையை மீட்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: