Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜேம்ஸ் வசந்தன் வீட்டிற்குள் 40-க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து, அவரை கைது செய்த பரபரப்பு சம்பவம்

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டிய தாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாள ரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நேற்று (ஞாயிறு) அன்று கைது செய்யப் பட்டார்.

நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகு ப்பாளராக அறிமுகமா கி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். எனினும் விஜய் டிவியில் டிவி நிகழ்ச்சித் தொ குப்பாளராக வும் இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தனுக்கும் அவரது பக் கத்து வீட்டில் உள்ள ராதா வேணு பிரசாத் (65) என்ற பெண்ணு க்கும் தகராறு இருந்து வந்ததா கக் கூறப் படுகிறது. இந்நிலையில் சனிக் கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதா கக் கூறி ராதா வேணுபிரசாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத் தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படு த்த போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல் லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தரப்பில் கேட்டபோது, இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று தெரிவித்தனர். செய்தியாளர்க ளிடம் பேசிய ஜேம்ஸ் வசந்தன், என் மீது என்ன வழக்கு போட்டு உள் ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்க வில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர்.

புகார் கொடுத்த பெண் கமிஷனர் ஜார்ஜ்க்கு வேண்டப்பட்ட பெண். என வே எளிதாக என்மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட் டார். நான் தரமறுத்து விட்டேன். அதற் காக என் மீது பொய் வழக்கு போ ட்டு உள்ளனர். இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

news from tamil.com

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: