Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

”திறமையும் எளிமையும்” என்னிடம் இருக்கு அதிர்ஷ்டமும் சேர்ந்தா, ஹிட் ஹீரோயின் ஆகிடுவேன்! – நடிகை சிவதா பேட்டி

சிவதா என்றால் என்ன அர்த்தம்?

”சிவனிடம் வரம் பெற்றவள்னு அர்த் தம். பார்வதிக்கு இன்னொரு பெயர் சிவதா. நான் திருச்சியில் பிறந்த கேர ளா பொண்ணு. 2007-ல் பரதநாட்டி யத்துக்காக தேசிய விருது வாங்கி யிருக்கேன். கல்லூரிப் படிப்பு முடிச்சதும், பாசில் இயக்கத்தில் ‘லிவிங் டுகெதர்’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு. அப் புறம் ‘கேரளா கஃபே’. இப்போ தமிழ் நெடுஞ் சாலையில் கூட எனக்கு மலையாளப் பெண் கேரக்டர்தான்!”

”உங்களிடம் நீங்களே விரும்பும், வெறுக்கும் விஷயம்?”

”சின்ன சோகம்னாகூட குலுங்கிக் குலுங்கி அழுவேன். அது பிடிக்காது. அப்புறம், ‘இதுக்கா அழுதோம்’னு நினைச்சு நினைச்சு சிரிப் பேன். அது பிடிக்கும்!”

”அழகு ரகசியம்?”

”வெந்நீர் நிறையக் குடிப்பேன். டென் ஷனா இருந்தா, சாக்லேட் சாப்பிடுவே ன். தினம் சின்னச் சின்னதா எக்சர்சை ஸ் செய்வேன்!”

‘நாரதன்’ நிகிஷா படேல் மெல்லிடை அழகி!

குஜராத்திப் பொண்ணு. ஆனா, பிறந்து வள ர்ந்தது லண்டன். ‘மிஸ் வேல்ஸ் பியூட்டி’ டைட்டில் ஜெயிச்சேன். தெலுங்கில் எஸ். ஜே.சூர்யா இயக்கிய ‘புலி’ படத்தில் சினிமா அறிமுகம். ஆந்திரா, கர்நாடகா, கேரளானு ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு இப்போ தமிழ்நாடு விசிட்!”

”தென்னிந்திய சினிமாவில் பிடிக் காதது?”

”சினிமா ஹீரோயின் கொஞ்சம் பப்ளி யா இருக்கணும். ஓவர் ஆக்டிங் பண் ணணும்னு எதிர்பார்க்கிறாங்க. இந்த டிரெண்ட் மாற¬லன்னா, நான் சீக்கிர மே டைரக்டர் ஆகிடுவேன்!”

உங்களுக்கு இருக்கும் ”லட்சியம் என்ன‍?

”எவ்வளவு சின்ன கேரக்டரா இருந்தாலும் ஒரு படத்துலயாவது குஜராத்திப் பொண்ணா நடிச்சிரணும்!”

உங்களிடம் காணப்படும் ”கெட்ட பழக்கம்? எது?

”தூங்கும்போது அப்பப்போ குறட்டை விடுவேனாம்!”

‘நினைத்தது யாரோ’ நிமிஷாவும் அதே கேரளா!

”எண்ட ஊர் எர்ணாகுளம். படிப்பு எம். சி.ஏ. அப்புறம் மாடலிங், சினிமா. விக்ர மன் சார் படத்துல தமிழ்ல அறிமுகம் ஆவதில் சந்தோஷம். விஜய் படங்கள்னா அவ்ளோ இஷ்டம். அவர் டான்ஸ் ரொம்பப் பிடிக்கும்!”

உங்களுக்கு ”க்ளோஸ் ஃப்ரெண்ட்? யாராவது உண்டா?

”பாவனா. சினிமா பத்தித்தான் நிறையப் பேசிக்குவோம்!”

”நிமிஷாவின் ப்ளஸ், மைனஸ்?”

செம பங்ச்சுவல். தீயா வேலை செய்வேன். அடிக்கடி கோபப்படு வேன்!”

”ஹீரோயின் போட்டியை எப்படிச் சமாளிப்பீங்க?”

”திறமை, எளிமை… இது ரெண்டும் இருக்கு என்கிட்ட. கொஞ்சமே கொ ஞ்சம் அதிர்ஷ்டம் சேர்ந்தா, ஹிட் ஹீரோயின் ஆகிடுவேன்!”

‘வானவராயன் வல்லவராயன்’, ‘சிகரம் தொடு’ படங்களில் அறிமுக மாகும் மோனல் கஜ்ஜார், மாடலிங் உலகில் ‘மிஸ் குஜராத்’ சிகரத்தை ஏற்கெனவே எட்டிப் பிடித்தவர்…

”22 வயசுக்குள் மூணு தெலுங்குப் படம். ஒரு மலையாளப் படம் முடிச்சுட்டு, இப்போ கோலிவுட் வந்திருக்கேன்!”

‘பிடிச்ச பாலிசி?”

”காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல் லை. எவருக்காகவும் காலம் நின்றுவிடுவ து இல்லை’னு ஒரு ஜென் தத்துவம். அத னால நான் நேத்து பத்தின நினைப்பே இல் லாம, நாளை பத்தின கவலையும் இல்லாம இந்த நிமிஷத்தை நேர்மையா, உண்மையா வாழ்றேன்!”

”கிளாமர், ஹோம்லி…. எது உங்கள் ரூட்?”

”ஒரே சாய்ஸ் வித்யாபாலன்தான்… ‘டர்ட்டி பிக்சர்’ல செடியூஸ் பண்ணு வாங்க… ‘கஹானி’ல சென்சிபிளா இருப்பாங்க. அப்படி எந்த பால் சிக்கினாலும் சிக்ஸர் சாத்தணும்!”

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் தமிழ் திரை தொடும் ஸ்ரீதிவ்யா, தெலுங்கில் ஏற்கென வே கன் பார்ட்டி. இவருடைய அக்கா ஸ்ரீரம்யா வும் தெலுங்கில் ‘நந்தி’ விருது வாங்கிய நடிகை.

”காலேஜ் படிக்கும்போதே மாடலிங் பண்ணேன். அக்கா வழியில சினிமாவுக்கு வந்துட்டேன்!”

”கலகலன்னு பேசுறீங்க… செம அரட்டை பார்ட்டியா?”

”இல்லைங்க. நான் ரொம்ப சைலன்ட். வீட்லகூட அதிக ம் பேச மாட்டேன். ஆனா, ஷூட்டிங்ல யூனிட் ஆட் களோட பேசிப் பேசி வாயாடி ஆகிட்டேன். என் நிஜ கேரக்டரையே மாத்திட்ட சினிமா, எனக்கு ரொம்ப ப் பிடிச்சிருக்கு. அக்கா ஸ்ரீ ரம்யா அறிமுக மான படத்துலயே மொட்டை போட்டு நடிச்சு பல விருது கள் வாங்கிட்டா. நானும் அப்படி நல்ல பேர் வாங்க ணும். அதே சமயம் கேரியர்னு வந்துட்டா சினிமா வில் அக்காவும் எனக்குப் போட்டிதான்!”

ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍ பேட்டி இது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: