Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லக்ஷ்மனன், சூர்ப்பனகையின் மூக்கை, குறி பார்த்து வெட்டியதன் சூட்ஷமம் என்ன?

ஒரு கைக்குழந்தை அழுது கொண்டிருந்தது. யார் யாரோ தூக்கி சமாதானம் செய்கிறார்கள். குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. அதன் தாய் வந்தாள். குழந்தையைத் தூக்கி னாள். மார்போடு அனைத்துக் கொண் டாள். குழந்தை அழுகையை நிறுத்தி யது.

ஒருகைக்குழந்தைக்கு தன்தாய் இவ ள் தான் என்பதை எதைவைத்து தீர்மானி க்கிறது. அனைத்துக் கொள்ளும் தாயின் வாசனையும் அவள் உடலின் கதகதப்புமே முழுமுதற் கார ணம்.

வாசனையை முகர்தல் என்பது ஒவ்வொரு ஜீவராசிக்கும் உரிய சூட் சமமான குணம். அந்த சூட்சம குணம் தான் மனிதன் சமூகத்தில் வாழ பல ரூபங்களில் உதவுகிறது.

இந்த முகர்தல் என்ற சூட்ஷம குண த்தில் லக்ஷ்மனன் கை வைக்கப் போய்தான் ராமாயணப் போரும் ராவண வதமும் உண்டானது என லாம். அந்த சூட்ஷமத்தை கொஞ்ச ம் ஆய்வோம்.

ஸ்ரீ ராமரும் சீதாதேவியும் வனவா சத்தை மேற்கொண்டு வந்தனர். லக்ஷ்மனன் சகோதரனுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு பாது காப்பாக உடனிருந்து உதவி வந்தான்.

அப்போது அசுரகுலத்தை அழிக்க வே அவர்களுடன் பிறந்ததுபோன்ற பெ ண்ணான சூர்ப்பனகை ராமர் இருக் கும் வனத்திற்கு வந்தாள். அவள் ராம ரின் கட்டுடலும் அழகையும் கண்டு இப்படி யொரு ஆண் மகனைப் பார்த்த தில் லை. இவனோடுகூடி நான் இன்ப த்தை துய்த்தே தீருவேன் என்று உறு தி கொண்டு மனதி ற்குள் எல்லை யில்லா ஆனந்தத்துடன் ராமரை நோக்கி நடந்தாள். தன் உருவை மிக அழகான யுவதியாக ஆக் கிக் கொண்டாள்.

ஸ்ரீராமரிடம் சென்றுதான் திருமணம் ஆகாத கன்னி ப் பெண் என்று பொய்யைக்கூறி , தான் ராவணனி ன் தங்கை என்றும் ராமனை மணக்கும் ஆசையில் வந்தி ருப்பதாகவும் கூறினாள்.

இதைக்கேட்ட ஸ்ரீராமரோ ‘பெண்ணே! நீ விச்சிரவ சு என்ற பிராமணரின் மகள். நான் தசரத ராஜகுமார ன். ஒரு பிராமணரின் மகளை சத்ரிய அரசன் மண ந்து கொள்ளக் கூடாது. அன்றியும் ராவணன் முத லிய உன் தமையனார்களின் அனுமதி இன்றி உன் னை நான் மணந்து கொள்வது பிழை. மேலும் நான் ஏற்கனவே மணமானவன். ஏகபத்தினி விரதம் பூண்டவனாக இருக்கிறேன். என வே உன்னை மணப்பதென்பது என்னால் ஆகாது. நீ உனது எண்ணத் தை மாற்றிக்கொள். மனதில் அ மைதி கொள். இங்கிருந்து சென்றுவிடு. உன் வருகை எங்களுக்கு துன்பம் உண்டா க்காதிருக்க வேண்டுமென விரும்புகி றேன்.’ என்றார்.

அந்தநேரம் அங்கே சீதை வந்து கொ ண்டிருந்தாள். சீதையைப் பார்த்த சூர்ப் பனகையோ இவ்வளவு அழகு நிறை ந்த பெண் மனைவியாக இருப்பதால் தானே ராமன் எண்ணை புறக்கனிக்கி றான் என்று எண்ணி சீதையை கொன் றால் இனி ராமன் தனக்குத்தான் என்று வேகமாகச்சென்று சீதை யை கொல்ல முயற்சிக்கிறாள்.

நடக்கும் விஷயங்களைப் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மனன் தன் அன்னியாரான சீதாதேவியின் உயிருக்கு சூர்ப்பன கையால் ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அடு த்த கனமே சூர்ப்பனகையின்முன் சென் று அவளைத் தடுத்து அவள் மூக்கை வெட்டி விடுகிறான். ‘இனி ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலை மன்னில் உருளும். பெண் என்பதால் எச்சரிக்கி றேன். போய்விடு’ என்று அங்கிருந்து சூர்ப்பன கையை விரட்டி சீதையின் உயிரைக் காத்தான். அதற்குப்பின் ராவ ணன் கோபம் கொண்டு சீதையை கடத் தியதும் அனுமன் வந்ததும் இலங்கையி ல் போர் நடந்ததும் நமக்குப் பரிச்சியமா னகதை தான்.

ஆனால் இவற்றில் முக்கியமாக கவனிக்கத்தக்கது லக்ஷ்மனன் கோபம் வந்தபோது ஏன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான். ஒரு வர் மீது கோபம் வந்தால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம் தலையை வெட்டலாம். ஆனாலும் அவ்வளவு கோபத்திலும் பதட்டத்தி லும் கூட லக்ஷ்மனன் ஏன் சூர்ப்பன கையின் மூக்கை குறிபார்த்து வெட்ட வேண்டும். அதன் சூட்ஷமம் என்ன?

மேலும் பார்ப்போம். ஒரு புத்தகத்தி ல் வாசனையும் உணர்ச்சிகளும் என்ற தலைப்பில் இதைப் படித்தேன். நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச் சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்து கிறது. நாம் சுவா சிக்கும் போது, நறுமன நுண் அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால், நறுமணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள், மற்ற புலன்களைவிட அதிக சக்திவாய்ந் தாக கருதப்படுகிறது. Memory Triggers என ப்படும் இந்த நினைவு தூண்டல்களிலே யே, நறுமணத்தினால் ஏற்படும் உணர் வே அதிக தெளிவான, உணர்ச்சி பூர்வமா ன நினைவை உண்டு செய்பவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகி றார்கள். நறுமண நுண் அணுக்களின் சமிக்ஞையால் ஏற்படும் இது போல உணர்வுகள் ‘Proustian Phenomenon’ என்று அழைக்கப்படுகிற து. இப்படி இன்னும் நிறைய சொல்லப்பட்டிருந் தது.

கொஞ்சம் புரியும் படியாக சில விஷயங்களைப் பார்ப்போம்.

நம் மூக்கில் எண்ணிலடங்கா வாசனை உணரு ம் நரம்புகள் உள்ள ன. அவைகளின் மூலமாக நாம் உணரும் வாசனைகளுக்கும் நமது உணர் ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நேரடித் தொடர்புகள் உண்டாகின்றன.

காம உணர்ச்சியைத் தூண்டுவதற்கு வாசனை முக்கியப் பங்கு வகி க்கிறது.

ஒரு ஆணோ பெண்ணொ ஒருவரை ஒருவர் வாசனையாலேயே முதலில் ஈர்க்கப்படுகி றார்கள். அதனால் உண்டாகும் தூண்டுதலே ஒருவர் மீது ஒருவர் மோகம் கொள்ளக் கார ணமாகிவிடுகிறது. வாசனையை முகர்தல் காதலிலும் காமத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சித் தூண்டுதலுக்குக் காரணமாக இருக்கிறது.

இன்னும் சொல்லலாம். ஒருவர் எதிர்பாலின ர் மீது காமுறும் பொழு து முதலில் சுறுசுறுப் படைவது மூக்கின் நரம்புகளே. மூக்கின் நரம்புகள் விழிப்படைந்து முகர்தலுக்கு தயாராகிவிடுகிறது. அந்த தயார் நிலையாலும் முகர் தலாலும் தூண்டப்பட்டு உயிர் உறுப்பு கள் உறவுக்குத் தங்களைத் தயார்படு த்திக் கொள்ளத் துவங்குகிறது. அந்த உந்துதல் மேலும் மேலும் காமத்தில் ஈடுபடும் தீவிரத்தை அதிகரித்து எதிர் பாலரிடம் இன்னும் வேகமாகச் செய ல்படச் செய்து விடுகிறது. இவ்வாறு உண ர்ச்சிகளின் வேகத்திற்கு மூக்கு முக்கிய பங்கு வகிப்பதை உணராத வர்கள் இருக்க முடியாது.

ஒருவர் கோபம் கொள்ளும்போது மூக்கு விடைத்துக் கொள்ளும். சிவந்து போகும். கண்கள் விரிய குரல் உயர காது மடல்கள் சிவக்கச் சண்டை போ டுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு கோப ப்படும் போதும் மூக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் கோபத்தால் சில நேரங்களி ல் அது வே உடைந்து போய் ரத்தக் களரியாவ து வேறுவிஷயம்.

உங்களுக்குத் தெரியுமா? சுவையின் எழுபத்தைந்து சதவீதத்தை வாசனை கொண்டே நாம் உணர்கிறோம். மூக்கை மூடிக்கொண்டு அதாவது சுவாசம் செய்யாமல் ஒரு பொருளை கடித்து முழுங்க்ப் பாருங்கள். அதன் சுவை என்னவென்று உங்களால் துல்லியாமாகச் சொல்ல முடியாது. வாசனையுடன் முகர்ந்து உண்ணும்பொழுதே உண வின் சுவையை முழுவதும் ருசிக்கி றோ ம். அனுபவிக்கிறோம். காரணம் மூக்கு.

ஞாபக சக்திக்குபெரிதும் உதவுவது வாசனை உணரும் முகரும் சக்தியே ஆகும். உதாரணமாக ஒரு மலை சார் ந்த இடத்திற்குச் செல்கிறோம். அங்கே பூக்களும் , பச்சை பசேல் என்ற மரமும் செடி கொடிகளும் நிறைய இருக்கும். அதன் அழகை ரசிக்கிறோம். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற் குச் செல்கிறோம். அங்கே ஓரிரு கட் டிடங்கள் வந்திருக்கும். நாம் ஏற்கன வே இங்கே வந்திருக்கி றோமா என்று நமக்குச் சந்தேகம் வந்து விடும். காட் சிகள் நம்மை ஏமாற்றும். ஆனால் அந்த இடத்தில் நாம் உணரும் வாச னைதான் நமக்கு பழைய ஞாபங்க ளை மீட்டுக் கொண்டுவந்து நாம் ஏற்கனவே இங் கே வந்திருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும். காரணம் மூக்கு.

சாமி கும்பிடும் போது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவை ஏற்று வைத்து சாமி கும்பிடுவதன் கார ணம் அந்த வாசனையை நாம் முகரும் போ தெல்லாம் தெய்வீக உணர்வு நம் மனதில் குடிகொண்டு விடும். காரணம் மூக்கு.

எனது பாட்டி இறந்த அன்று அவர் அருகில் ஒரு ஊதுபத்தி ஏற்றி வைத் தார்கள். இன்றைக்கும் எங்காவது யார், வீட்டிலாவது அப்படி ஒரு வாசனை வந்தால் எனக்கு அந்நாள் ஞாபகத்திற்கு வந்து விடு ம். இப்படி நினைவாற் றலுக்கும் வாசனை முகர்வுக்கும் நிறைய சம்ப ந்தம் உண்டு. காரணம் மூக்கு.

ஒரு சில திரையரங்கில் ஏ சி மிஷினிலிருந்து குளிர்ந்த காற்றுடன் நல்ல வாசனை திரவியத்தை கலந்து அரங்கம் முழுவதும் நறுமணத் துடன் இருக்குமாறு பரவச்செய்வார்கள். அப்படி சில்லென்ற காற்றுடன் நல்ல வாசனையை நாம் நுகர்ந்தவுடன் மனம் அமைதியடைகிறது. ஒருவித மகிழ்ச்சி கொள்கிறது. இன்பமாக பட த்தை பார்க்கச் செய்கிறது. காரணம் மூக்கு. இந்த அனுபவம் யாருக் கேனும் இருக் கிறதா?

பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஆண்களைக் கடந்து சென்றாலே அந்த வாசனை ஆண்களுக்கு ஒரு வித ஈர்ப்பை உண்டு பண்ணிவிடும். நமது கலா ச்சாரத்தில் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளுதல் என்ற வழக்கம் முக்கியத்துவம் பெற்றதும் அப்படித்தான். தான்விரும்பும் ஆணை தன்மீது எப்போதும் மயக்க முற்றிருக்கச் செய்து கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவே அவன் கையால் பூவாங்கி அவன் முகரும் வன்ன ம் தலையில் வைத்து அவன் முன்னேயே நடமாடு வர். ஒருவருக்கொருவர் காதல் பிணைப்பு அதிக ரிக்கும். குடும்பத்தில் அன்பும் குதூகலமும் பெரு கும். காரணம் மூக்கு.

இப்படி மூக்கு ஒரு வாசனையை நாம் எந்த நேரத்தில் எந்த இடத்தி ல் எந்த சூழ்நிலையில் முகர்ந்தோம் என்பதை ஆழ்மனதில் பதியச் செய்து விடுகிறது.

இவ்வாறு காமம், கோபம், இன்பம், மகிழ்ச்சி என உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தூண் டப்பட்ட உணர்ச்சியால் வீரியமாக செயல்பட வைப்பத ற்கும் மூக்கு பெரும் பங்கு வகிப்பதா லோ என்ன வோ லக்ஷ்மனன் சூர்ப்பனகையின் மூக்கைப் பதம் பார்த்திருக்கிறார்.

ராமனின்மீது ஆசை கொள்வதற்கும், காமத்தின் உந்துதலினால் சீதையை கொல்ல முயன்றதற்கும் இவளது உணர்ச்சியைத் தூண் டும் மூக்கே காரணம் என்று மூக்கை வெட்டியிருக்கிறார் லக்ஷ்மன ன். பாவம் மூக்கு.

ஆக லக்ஷ்மனன் உளவியல் மற்றும் உடலியல் பற்றி நல்ல அறிவு பெற்றவரா க இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

நன்றி – ஹேராம்

Leave a Reply

%d bloggers like this: