Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிறந்து 2 மாத குழந்தையின் உடலில் திடீர் தீடீரென‌ தீப்பிடித்து எரியும் மர்மம் – குழப்ப‍த்தில் மருத்துவர்கள் – அதிர்ச்சியில் பெற்றோர்!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளா ன கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண் டு மாத கைக் குழந்தை உள்ளது.

ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்தபோ து, இரண்டு மாத ஆண் குழந்தை திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. தீக்காயத் திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதி ர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கியிருந்த போதும் இரண்டு முறை தீப்பிடித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திண்டிவனம் அருகே உள்ள கர்ணனின் சொந்த ஊரான டி.பரங்கணி யில் தங்கியிருந்த போதும், மர்ம மான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்தது, வீடும் எரிந்துள்ள து.

இதனால் மனமுடைந்த ரா ஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார், பின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார். இந்நிலையில் குழந்தை ராகுலை சிகிச்சை க்காக உப்பு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத் துவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், இரண்டு மாத குழந்தைக்கு உடலில் பல் வேறு தீக்காயங்கள் உள்ளது ஆச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக் காயங்களும் சில நாட்களில் சரியாகி வி டுகின்றன. இது புரியாத புதிராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளா ர்.

இந்நிலையில் தந்தை கர்ணன், குழந்தை பிறந்ததில் இருந்தே ஏதாவது ஒரு விபரீதம் நடந்து கொண்டு தான் உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம், குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என குழப்பமாக உள்ளது என்று தெரி வித்துள்ளார்.

வியப்பு(இன்) உச்ச‍த்தில். . .

One Comment

  • B.Kumaresan. Thanjavur.

    To Dr Jayaprakash,
    The child is suffering by fire the cause is methane it is produced with in the body cavity the phenominen is see in google search ” auto human combustion “. In all fire cases only the trunk will fully burnout and all hands and legs will not burn. If you need further information you can contact me. From B.Kumaresan. SBI Retd, Thanjavur. cell number 9443866550. in past research work only old and aged people affected. This is the first case for child. If possible let me know more information. Thank you. Pray for good health of the child.

Leave a Reply