Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌கத்துவம் பொருந்திய‌ அகத்தியர் அருளிய சூரணங்கள்

தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித் து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கி றோம். சித்த மருத்துவத் தில் இத்தகைய பல சூர ணங்கள் கூறப்பட்டிருக் கின்றன. இவற்றில் திரி கடுகம் எனப்படும் “சுக்கு “, ” மிளகு”, “திப்பிலி” சூர ணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை.

இந்த‌ “சுக்கு”, “மிளகு”, “திப்பிலி” சூரணங்களின் மருத்துவ குணங்க ளை தனித்தனியாக பார்க்க லாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்”  என்ற நூலில் இரு ந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின் வருமாறு…

சுக்குச் சூரணம்

பாரேநீ யின்னமொரு சூட்சங் கேளு
பாங்கான சுக்குதனைச்சூர ணமே பண்ணி
காரேநீ கரும்புச்சர்க்க ரையவ் வீதங்
கலந்துமே யிருவேளை யேழு நாளுஞ்
சேரேநீ தின்றுவர வாய்வு தீருந்
திறமான தீபன முண்டா மப்பா
ஊரெல்லா மருந்திருக்கக் காட்டிற் போய்நீ
உலுத்தரைப் போலலையாதே உண்மை கேளே.

சுக்கைச்சூரணம்செய்து, அந்த எடைக்கு சமமாக கரும்புச் சர்க்கரை யை கலந்து சேமித்துக்கொள்ளவேண்டுமாம். இம்மருந்தை ஏழு நாள் காலை மாலை உண்டு வர வாய்வு தீருவதுடன், பசியும் உண் டாகுமாம்.

திப்பிலி சூரணம்

உண்மையென்ற திப்பிலையைசூரணமே செய்து
உகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன
வண்மையுடன் புகைந்திருமுஞ் சேத்தும நோய் தான்
மாறியே பசியுண்டாம ருவிப் பாரு

திப்பிலியை சூரணம் செய்து தேனில் குழை த்துச் சாப்பிட புகைந்து இருமும் இருமலும், சிலேத்தும நோய்களும் குணமடைந்து பசி உண்டாகுமாம்.

மிளகு சூரணம்

நன்மையுடன் மிளதகுதனைசூர ணமே செய்து
நலமான பசுநெய்யிற் சீனி கூட்டி
தன்மையுடன் மூன்றுநாள் அந்தி சந்தி
தானருந்த சளியிருமத வறிப் போமே.

மிளகினை சூரணம்செய்து அதனுடன் பசு நெய் யும், சீனியும்சேர்த்து 3 நாள் காலை மாலை சாப் பிட சளி இருமல் ஆகியவை நீங்கு மாம்.

நன்றி – சித்தர்கள் இராச்சியம்

Leave a Reply