Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – என்றென்றும் இளமை அழகுடன் இருக்க சில குறிப்புகள்

இளமை காலங்களில் அழகில் கவனம் செலுத்தும் பெண்கள் திரு மணத் திற்கு பின்பு அவர்கள் தங்கள் கணவன் குழந்தை குடும்பம் போன்றவ ற்றில் மட்டுமே கவனம் செலுத்த‍ தொடங்கி விடுகிறார்கள். இதனால், பெண்கள் இளம் வயதிலயே முதிர்ச்சியான தோ ற்ற‍த்தை பெற்று விடு கின்றனர்.

இவ்வாறு, காலம் கடந்தபின் வருத்தப் படாமல் நமது வீட்டிலிருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே உங்களின் இளமை தோற்றத்தை திரு ம்ப பெற இங்கு குறிப்பிடப்பட்டிரு க்கும் குறிப்பு களை பின்பற்றி பயன் பெறுங்கள்.

சமையல் அறையில் உள்ள‍ என்ன‍ என்ன‍ பொரு ட்கள் உங்கள் இளமை க்கு உதவுகிறது என்பதை பார்போம்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ஒரு நேச்சுரல் ப்ளீச். வயதான தோற்றம் வந்தால், சருமத்தில் ஆங்காங்கு பழுப்பு நிறம் காணப்படும். ஆகவே உருளைக் கிழங்கை வைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்து வந்தா ல், அதனைப் போக்கலாம்.

கரும்பு சாறு

கரும்பு சாறு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மஞ் சள் தூளை கரும்பு சாறு ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வர, முதுமைத் தோற்ற த்தை தடுக்கலாம்.

தேன்

தேனை தினமும் முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவி வந்தால், முது மைத் தோற்றத்தை தடுக்கலாம். அதிலும் இத னை மறக்காமல், கண்க ளைச் சுற்றி தடவ வே ண்டும். இதனால் கருவளையம் நீங்கிவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை அனைத்து சருமத்தினருக்கும் மிக வும் சிறந்த ஒரு அழகுப் பொருள். எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந் தால், முதுமைத் தோற்றம் நீங்குவதோடூ, ஆங் காங்கு காணப்படும் புள்ளி களும் நீங்கும்.

அழகை அதிகரித்து இளமையை தக்கவைக்கும்  பாரம்பரிய மூலிகைப் பொருட்கள் 

இயற்கையின் கொடை வேம்பு

இந்தியா முழுவதும் வேப்பமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எண் ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி இதில் உள்ளதால் இயற்கை மருத்துவர் என் றே அழைப்படுகிறது. அழகு சாதன கிரீம்களிலும், பருவை போக்கும் கிரீம்களிலும் பயன்படுத்தப் படுகிறது. வேப்ப எண்ணெய் முகத்தின் ஈரப்பதத் தை தக்கவைக்கும் மிகச்சிறந்த பொருளாக திகழ் கிறது.

தெய்வீக மூலிகை துளசி

பெரும்பாலான வீடுகளின் கொல்லைப்புறங்களில் துளசிச் செடியை வைத்திருப்பார்கள். இது இயற்கையான அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிற து. சில துளசி இலைகளை பறித்து அதனுடன் சில துளிகள் பால் விட்டு அரைத்து முகத்தில் பரு உள்ள இடங்களில் அப்ளை செய் தால் பரு இருந்த இடம் காணாமல் போய்விடும் வடுக்களும் மறைந்து விடும்.

மஞ்சளும், சந்தனமும்

மஞ்சள் இந்திய சமையலில் மட்டும் பயன் படுத்தப் படுவதில்லை. அது மிகச்சிறந்த அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. மணநாளில் பெண்ணின் கண்ணக் கதுப்பிலும், கைகளி லும் தோளிலும் மஞ்சளை பூசி குளிக்கவைப்பார்கள். இதனால் பெண் ணின் முகம் மெருகேறும்.

அதேபோல் கண்ணிற்கு கீழே ஏற்படும் கருவளைய த்தையும், சுருக்கத் தையும் மஞ்சள் போக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு சிட்டிகை மஞ்சளுடன் சில துளிகள் பால் சேர்த்து கண்ணின் கருவளையம் உள்ள பகுதிகளில் பூசினால் கருவளையத்திற்கு பை சொல்லிவிடலாம்.

முகத்தில் சந்தனம் பூசுவதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது அலர்ஜி, தோல் நோய்களைப் போக்கும் அருமருந் தாக செயல்படுகிறது.

குங்குமப்பூவும் தேனும்

குங்குமப்பூ சிறந்த அழகு சாதனப் பொருளாகத் திகழ்கிறது. சருமத்தின் நிறத்தையே மாற்றும் சர்வ வல்லமை படைத்தது. சருமத்தில் பாக் டீரியா நோய் தாக்குதல் இருந்தாலும் இதனை போக்கி விடும்.

தேன் சருமத்தின் அழகை தக்கவைக்கும். இது இனி ப்பான உணவுப் பொ ருளாக இருந்தாலும் பேஸ் பேக் போடுவதில் பயன்படுகிறது. பாலுடன் தேன் கலந்து பேக்போடுவதன்மூலம் சருமம்பொலிவுறு ம். இதில்உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் சரும அழ கை பாதுகாக்கிறது. அழகு சாதனப் பொருட்களில் தேன் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

சிகைக்காய், நெல்லிக்காய்

கூந்தல் அழகை பராமரிப்பதில் சிகைக்காய்க்கு முக் கிய பங்குண்டு. இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் இயற்கை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கூந்த லின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக் காய், சிகைக்காய், வேப்பிலை கலந்த பொடி கூந்தல் வளர்ச்சிக்கும், அழகிற் கும் சிறந்த பொருளாக உள்ளது.

முல்தானி மெட்டி

பூமியில் கிடைக்கும் இயற்கை கிளன்சர் முல்தானி மெட்டி. சிறந்த ஸ்கிரப்பராக பயன்படுகிறது. சருமத் தை பாதுகாக்க தக்காளிசாறுடன் முல்தானி மெட்டி யை கலந்து பேஸ்பேக் ஆக போடலாம். இந்திய உணவுப் பொருளில் தயிர் தினசரி பயன்படுகிறது. இது இளமையை தக்கவைக்கும் இயற்கை அழகு சாதனப் பொ ருளாகும்.

கடலைமாவு

இந்திய சமையலறையில் கிடைக்கும் முக்கிய பொருள் கடலைமாவு. இது பாரம்பரியமாக குளிய ல் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கும் பெரும் பாலானோர் சரும பாதுகாப்பிற்காக கடலை மாவினை பயன்படுத்துகி ன்றனர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: