க
டந்த வாரம் தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த நடிகை கனகா, மீண்டும் அவரே அளித்த பேட்டி இது!
நான் இறந்து போனதாக யா ரோ பொய் செய்தி பரப்பி உள்ளனர். சாவை பற்றி நான் கவலைப் பட வில்லை. எல்லோருக்கும் ஒருநாள் அது வந்தேதீரும். என் அம்மா எனக்கு எல்லாமுமாக இருந்தார். அவர் இறந்த போது மரண வலிகளை அனுபவித்து விட்டேன்.
ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடு க்கப் போய் இறந்ததாக செய்திகள் பரவி யது. நான் அந்த ஊருக்கு சமீபகாலத்தில் போக வே இல்லை. நான் தனியாக இருப்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். தனிமை பற்றி ய சிந்த னையே எனக்கு வந்தது இல்லை. வீட்டில் பூனைகள், முயல்கள், அணில்கள் வளர்க் கின்றேன். அவைகள் என் பக்கத்தில் இருக்கி ன்றன. இதுபோல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவலாம் என்ற திட்டமும் இருக்கிறது.
எனக்கு மனநிலை பாதித்துள்ளது என்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. வீட்டுவாச லில் சாமி படங்கள், தாயத்துக்கள் இருப்பது பற்றியும் பேசுகிறார்கள். கோவிலுக்கு போ கும் போது வாங்கி வரும் படங்களை வாச லில் வைத்துள்ளேன். பேய், பிசாசில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மீண்டும் சினிமாவி ல் நடிக்கலாம் என்று இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் அமைந்தா ல் நடிப்பேன்.