Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

13 என்ற எண் பேய்களுக்கு பிடித்த‍ எண். என்பார்கள் ஆனால், உங்க கூந்தலை உதிராமல் பாதுகாப்ப‍து இந்த 13-தானுங்க !

13 என்ற எண் பேய்களுக்கு பிடித்த‍ எண். என்பார்கள் ஆனால், உங்க கூந்தலை உதிராமல் பாதுகாப்ப‍து இந் த 13-தானுங்க! அட ஆமாங்க ஆரோக் கியமான தலைமுடிக்கு தேவையான 13 வகையான உணவுகள் இங்கே குறி ப்பிடப்பட்டிருக்குது படித்து பாருங்கள்

எவ்வாறு வீட்டில் இருந்தே தலைமுடி பிரச்சினையை எதிர்கொள்வது என மீண்டும் யோசனையா? கவலையை விடுங்கள், படித்து பின்பற்றுங்க ள். வீட்டில் இருந்தவாறே தலைமுடி பிரச்சனைக்கு ஒருதீர்வு காணும் வழியைக் கண்டுபிடித்து நீங்களே செய ல்படுத்துங்கள். “நோய் நாடி நோய் முதல் நாடி” என்று பாடிய அய்யன் வள்ளுவனின் வாக்குப்படி மருந்தை உட்கொள்ளும் முன்னர் நோய்க்கான காரணம் என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும்.

பல்வேறு ஆய்வுகளின் விளைவாக ஆண்களுக்கு முடி உதிர காரணம் என்ன என சிலவற்றை ஆய்வாளர்கள் பொதுமைப்படுத்தியுள்ளனர். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், வைட்டமின் குறை பாடு, மரபியல் காரணி கள், அதிகப்படியான மன அழுத்தம், கவலைகள், டைபாய்டு, இரத்த சோ கை, வயிற்றுக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நாள்பட்ட நோய்கள், சீரற்ற இரத்த ஓட்டம் மற்று ம் நன்றாக பராமரிக்கப்படாத தலைமுடி போன்ற காரணிகள் தான் அவற்றுள் முக்கியமானவை.

இப்போது என்னென்ன காரணிகள் தலைமுடியின் எதிரிகள் என கண்டு பிடித்தாகிவிட்டது. எதிரியை எதிர்நோக்கும் வழிகளை இப்போது பார்ப் போம். இயற்கையே நமக்கு சிறந்த தீர்வை தருகிறது. பெரும்பாலும் உண்ணும் உணவுப்பழக்கத்தை சரிசெய் தாலே கூந்தல் உதிர்தல் நின்று, தலை முடி யும் கருகருவென்று மாறும்.

ஆகவே கவலையை விட்டுவிட்டு, இங்கே கூறப்பட்டுள்ள 13 உணவு முறைகளை படித்து தவறாமல் பின்பற்றி அழகான கூந்தலுடன் வலம் வாருங்கள்

1.ஆளி விதை

வெறும் வயிற்றில் ஆளிவிதை நீர் (alsi) ஒரு டம்ளர் குடிக்கவும். இது முடி வளர்ச்சிக்கு தே வையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டை வழங் கும்.

2. நெல்லிக்காய்

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டு ம். பெண்கள் பளபளக்கும் கூந்தலைப் பெற வேண்டுமானால், நெல்லிக்காயால் செய்ய ப்பட்ட எண் ணெயை கூந்தலுக்குப் பயன் படுத்த வேண்டும்.

3. பாதாம் பருப்பு

ஒவ்வொரு இரவிலும் 5 பாதாம் பருப்புகளை தண் ணீரில் ஊற வைத்து, தோலுடன் அவற்றை சாப்பிட வேண்டும்.

4. இளநீர், மோர் மற்றும் எலுமி ச்சை ஜூஸ்

தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் இன்றிய மையாதது. அதனால் மோர், எலுமிச்சை சாறு மற்றும் இளநீர் போன்ற வற்றை நிறைய குடிக் க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிக் க வேண்டும்.

5. முளை கட்டிய பருப்புக்கள்

ஒரு கிண்ணம் முளை கட்டிய பருப்பு வகைக ளை சாப்பிட வேண்டும்.

6. சிக்கன் மற்றும் முட்டை

தலைமுடிக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமா னது. எனவே சிக்கன் மற் றும் முட்டையை அதிகம் சாப்பிட வேண்டும்.

7. டீ மற்றும் காபி

சிலர் டீ மற்றும் காபியை அதிகம் குடிப் பார்கள். ஆனால் அவ்வாறு அவற்றை அதி கம் குடிக்கும் பழக்கத்தை நிச்சயம் குறைக்க வேண்டும்.

8. எலுமிச்சை சாறு

குளிக்கும்போது ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை தலை யில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தலை பொடு கில் இருந்து பாதுகாக்க முடியும்.

9. பால்

தோனியைப் போன்று தினமும் இரண்டு டம்ளர் வெண்ணை எடுக்கப்ப ட்ட பாலை குடிக்க வேண்டும்.

10. வெந்தயம்

வாரம் ஒருமுறை வெந்தயத்தை அரைத்து, தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் தினமும் காலை யில் வெறும் வயிற்றில் வெந்தயத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

11. ப‌ழங்கள்

ஆதிவாசிகளும், சாதுக்களும் பழங்கள் உண்டே உயிர் வாழ்ந்தது நினை விருக்கிறதா? எனவே ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், திராட்சை போன்ற பழங்களில் தினமும் குறைந்த பட்சம் 2 அல்லது 3 பழங்களை சாப்பிட வேண்டும்.

12. பச்சை காய்கறிகள்

கீரை உள்பட பச்சை காய்கறிகளை அதிகம் சாப் பிட வேண்டும்.

13. மீன்

மாமிச உணவுகளைத் தவிர்த்து கடல் உணவுகள் மற்றும் முட்டை போ ன்ற உணவுகளை சாப்பிடவும்.

ஆண்களுக்கு பெண்களை விட முடி அதிகம் உதிர்தல் மிகவும் பொதுவானது. பாலின வேறுபாடு பெண்களுக்கு சாதகமாக இருக்கி றதோ என நினைக்கீறிர்களா? மேற்கூறிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந் தால், முடி உதிர்தலை நிச்சயம் தவிர்க்கலா ம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: