Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது விவேகானந்தர் சொன்ன‍து – “நீங்கள் பெண்கள் என்பதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டுமா, என்ன?”

மேன்மக்கள் அனைவருமே பெண்மை யை மதிப்பவர்கள். பெண்மையை மதிப் பவர்கள் அனைவரும் மேன் மக்களே.

மேன்மக்கள் அன்புகாட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக, பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவ ர்கள் முன்னேறுவ தையே விரும்புவா ர்கள்.

உண்மையிலேயே பெண்மைக்கு மரியாதை செய்தல் என்பது என்ன?

பெண்மைக்கு ஆதாரமாய் உள்ள தெய் வீக சக்தியைப் புரிந்துகொண்டு அதை வணங்குதலே அல்லவா அதற்கு சரி யான மரியாதை?

இதோ இந்த சம்பவம், அதை நமக்கு தெளி வாக உணர்த்துகிறது.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இந்துமதப் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலகட்டம்.

எந்நேரமும் அவரைச் சுற்றி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஆண்,  பெண் இளைஞர் கூட்டம் கூடியி ருக்கும்.

அவர்களுடைய ஆன்மீக ஆற்றலை உணர்த்தவே சமயத்தில் சுவாமிஜி அவ ர்களுடன் ஒரு தாயின் அன்போடும் இரு ப்பார்.சமயத்தில் தந்தை யின் கண்டிப் போடும், சில நேரங்களில் நண்பனின் குதூகலத்தோடும் அந்த வெளிநாட்டுச் சீடர்களுக்கு வேதாந்தத்தைப் போதித்தார்.

சுவாமிஜி சில நேரங்களில் தம் சீடர் களுடன் சேர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை நாடிச் செல் லத் தொடங்குவார்.

அன்றும் அதேபோல சுவாமிஜி தனது சிஷ்யைகளான சகோதரி கிறி ஸ்டைன் மற்றும் வேறு சிலருடன் ஒரு மலைமீது ஏறிக்கொண்டிருந் தார்.

சுற்றிலும் லேசாக பனி படர்ந்திருந்தது. சுவாமிஜி செங்குத்தான பாறை களைத்தாண்டி மின்னல் வேகத்தில் மலை யுச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய சிஷ்யைகளுக்கு மலையேறுவது அவ்வளவு எளிதாக இல் லை.

மலையின் ஈரத்தில் அவர்களின் பாதங்க ள் வழுக்கின. அங்கிருந்து விழு ந்தால் அதோகதி தான். ஆதலால் அவர் கள் தைரியமில்லாமல், மிகவும் சிரமப்பட்டு மலையேறினார்கள்.

சுவாமிஜி இவற்றையெல்லாம் பார்த்தாலும் அந்தப் பெண்க ளுக்கு அவர் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.

அது அந்த பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. சுவாமி ஜி என்ன ஈவிரக்கம் அற்றவரா?

மலையுச்சியை அடைந்தவுடன் அந்த சிஷ்யைகள் தங்கள் மனத்தாங்க லை குருவிடம் வெளியிட்டார்கள்.

பெண்கள் பலவீனர்களா?

பெண்களைப் பொதுவாக பலவீன மானவர்கள் என்று ஆண்கள் சொல்கி றார்கள்.

பெண்களை “Better Half “ என்று கூறுவதெல்லாம் ” Better” மக்க ள் மட் டுமே.

ஆனால் சுவாமி விவேகானந்தர் பெண்களின் பலத்தையும், அதனால் அவர்கள் அடையும் சுதந்திரம் பற்றியும் கூறுவதைப் பாருங்கள்.

தமது குழந்தைகளின் மன வருத் தத்தை உணர்ந்துகொண்ட ஒரு தந்தை யைப்போல சுவாமி விவே கானந்தர் அவர்களிடம், ”குழந்தைக ளே நீங்கள் வயதானவர்களாக வோ, பலவீனர்களாகவோ, ஆதரவற்றவர் களாகவோ இருந்தால் நான் உங்க ளுக்கு நிச்சயம் உதவ வேண்டும். ஆனால், யாருடைய உதவியும் இல்லாமலேயே உங்களால் இந்தக் கடினமான பாதையில் தாண்டிக் குதித்து ஏற முடியும். அதற்கான வல்லமை உங் களிடம் உள் ளது.

“என்னைப் போன்றே நீங்களும் பலமுள் ளவர்கள். பின் எதற்காக நான் உங்களு க்கு உதவ வேண்டும்? நீங்கள் பெண்கள் என்பதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டுமா, என்ன?”

ஆண்கள், பெண்களுக்கு உதவ முற்படுவ தெல்லாம், ஆசைகளை உள் ளுக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் பெண்களிடம் காட்டும் வெற்று வீரம் தான் (Chivalry) என்பது உங்களு க்கு தெரியாதா?” என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தரின் வித்தியாச மான இந்த உபதேசத்தைக் கேட்ட அந்தப் பெண் களுக்கு சில உண்மைகள் தெளி வாயின.

பொதுவாக, பெண்களுக்குப்பரிந்து பேசுப வர்கள், பெண்களை பலவீனர்கள் என்றே சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பெண்களின் உடலையோ மனதை யோ மட்டும் தான் காண்கிறார்கள்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் பெண்களிடம் மட்டுமல்ல, அனைத்து மக்களிடமும் உடல்,  உள்ளம் பலங்களோடு ஆன்ம பலத்தையும் கண் டவர். அவர் அன்று அப்பெண்களுக்கு ஆன்ம ஆற்றலை உணர்த்தவே, மலை யில் உதவவில்லை போலும்!

ஒரு குழந்தை தத்தித் தத்தி நடந்து வருகிறது. நடை பழகட்டும் என்று நல்ல தாய் ஒருத்தி அதனை அன்போ டு, அதே சமயம் கவனத்தோடு கண்கா ணிப்பாள். குழந்தை நடந்தால் கால் முறித்துக் கொள்ளும் என்று தன் இடுப் பிலேயே வைத்துக்கொண்டு குழந்தை யின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்பவ ள் நடுத்தர,  சாதாரண பெண் ஆவாள்.

ஆண்மை என்பது என்ன?

Manliness எனப்படும் ஆண்மைப் பண்புகள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது என்பது சுவா மி விவேகானந்தரின் முழக்கம். ஆண் மை என்பது வீரம் மாத்திரமல்ல; பொ றுமை, அன்பு,  தியாகம்,  சேவை,  செய ல்வேகம், சிந்தனைத்திறன் போன்ற வையும் ஆண்மைப் பண்புகளாகும்.

வள்ளுவர் “பிறன்மனை நோக்காப் பேராண்மை” என்று பகன்றார். இங்கு அவர் ஆண்மை என்பதை ஆண்க ளின் கற்பு என்று குறிப்பிடுகிறார். இந்த லட்சியத்தின் அடிப்படையில் தான் பாரதியார் “கற்பு நிலையென்று சொல்லவந்தார், இருகட்சிக்கும் அதை ப் பொதுவில் வைப்போம்” என் றார்.

கற்பு என்பது ஆண்மைதானே?

நல்ல சூழ்நிலையில் பெண்களின் கற்பு மலர் போல் இருந்து நல்லவர் களின் மனங்களை மேம்படுத்துகிறது. அதே சமயத்தில் சூழ்நிலை பாதகமா கும்போது பெண்களின் கற்பு சுட்டெரிக் கும் நெருப்பாகித் தீயவர்களைச் சுட் டெ ரிக்கிறது.

அதி பராக்கிரமசாலியாக இருந்தும் ராவ ணன் சீதையை நெருங்க முடி யாததற்கு சீதையின் கற்பு தான் காரணம்.

ராவணனிடமிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறமை; தேவை ப்பட்டால் ராவணணையே சபிக்கக் கூடிய சக்தி; இவை இரண் டும் சீதையிடம் இருந்தன. ஆனாலும் ஸ்ரீராமன் தான் தன்னை வந்து மீட்க வேண்டும். தன்னை மீட்ட பெருமை ராமரு க்கே கிடைக்க வேண்டும் என்ற சங்க ல்பமும் சீதையிடம் இரு ந்தன. தாய்மையில் செரிந்திருந்த சீதை, ராவணன் காட்டிய சிற்றியல்புக ளையும் பெருந்தன்மையுடம் பொருத்தி ருந்தாள் – இவை சீதையி ன் சிறப்பியல் புகளில் சில.

இது போன்ற கற்பெனும் சக்தியை எல்லா பெண்களும் பெறவேண்டும் என்பதற்காக ‘இந்தியப் பெண்களின் லட்சியம் சீதை’ என்றும் சுவாமி விவேகானந்தர் கூறினார்.

ஆண் ஆதிக்கமும் பெண் ஆதிக்கமு ம்

பெண்களை ஆளும் ஆதிக்கங்கள் அநேகம் உள்ளன. கணவன்,  மனை வி போன்ற உறவில் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்கிறார்கள். மாமியார்- மருமகள் போன்ற உற வில் பெண்களைப் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். (அதேபோ ல ஆண்களை அடக்கி ஆளும் பெண் ணாதிக்கமும் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது).

ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன் உடல்,  உள்ளத்தின் பலவீனங்களுக்கு த் தன்னைத் தானே அடிமையாக்கிக் கொள்கிறாளே, இந்த ஆதிக்கத்தைத் தான் சுவாமிவிவே கானந்தர் முதலில் சுட்டிக்காட்டு கிறார்.

இந்த ஆதிக்கங்களிலிருந்து பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் விடுப ட்டு ஆன்ம சுதந்திரத்தில் திளைக்க வேண்டும் என்பதே சுவாமி விவே கானந்தர் காட்டும் விடுதலை வாழ்க்கை ஆகும்.

ஆம்! ஒவ்வொருவரும் ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதை வெளி ப்படுத்தி,  தங்கள் சொந்தக் கால்க ளிலேயே நிற்க வேண்டும். இதில் ஆண் என்ன? பெண் என்ன? இருவ ருக்கும் இதில் சம வாய்ப்பும், உரி மையும் உள்ளன.

அன்று அமெரிக்கப் பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லாப் பெண்களுக்கு ம்  ‘பெண் விடுதலை’  பற்றிய தெளிவான கருத்துக்களை சுவாமி விவே கானந்தர் கற்றுக் கொடுத்தார்.

மகாகவி பாரதியார் ‘மாதர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அபிப்ராயம் ’ என்ற கட்டுரை யை 1920-இல் எழுதினார். அதில் அவர் பெண்கள் நிலை, பெண் விடுதலை பற்றிய தமது கருத்துக் களை தமக்கே உரிய பாணியில் ஆராய்ந்திருக்கி றார். கடைசியில் அவர் அந்தக் கட்டுரையை கீழ்க் கண்டவாறு முடித்தது குறிப்பிடத்தக்கது:

” இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தை யும், இதனைச் செய்யும் படி தூண்டிய பேரன்பையும் கைக்கொள்வோமாயின், பாரததேசத்து ஸ்திரீகளுக்கு பரிபூர்ணமான விடுதலை கிடைத்துவிடும்! அதனின்றும் பூ மண்டலத்துக்கு நன்மை உண்டாகும்”.

விவேகானந்தம் 150

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: