Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

. . . தம்பதியர்கள், தாம்பத்ய உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல!

திருமணம் ஆனவர்களா? அல்ல‍து திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களா நீங்கள் ? அப்படியானால் உங்களுக்குத் தான் இந்த கட்டுரை. மற்றவர்கள் படிக்கவேண்டாம் என்றில்லை. படித்து பிறருக்கு ஆலோசனை கூறவேண்டு ம் என்று நினைப்பவர் களும் இதை படிக்கலாம். என்ன ஒரே சஸ்பென்சாக இருக்கிறதே என்று நினைக்க வேண் டாம் விசயம் அத்தனை முக்கியமானது.  தாம்பத்தியத்தில் அவசரம் காட்டினால், ஆயுள் முழுக்க‍ அவஸ்தைதான்!

அவசரம் வேண்டாம்

திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு நடக்க ப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில் ஆழ்த்து பவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர முத லிரவை வைத்துக் கொண்டால் தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக் கொள்ளும் இரவில் அதாவது முதலி ரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பது தான் உளவிய லாளர்கள் மற்றும் மருத்துவர் களின் அறிவு ரை.

அடப்போங்க சார். யாருக்காவது முதலிர வில் தூக்கம் வருமா? என்று கேட் பது காதில் விழுகிறது. வேறு வழியில் லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில் சிக்கல் இல்லாமல் வாழ் க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் என்னதான் சுற்றம்சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட் டாலும் சந்தித்த முதல் நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின் கரு த்து.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முத ல் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்கு மே ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும் கும்மாளமு மாய், இருந்திருக்கும். தண்ணீர் மற்றும் கழி வறை பிரச்சினையினால் அவசரக்குளியல் என இருவ ரின் உடல்களுமே சுத்தமாக இரு க்காது. இதனால் பரவும் நோய்களும் அதிக ம், இதனால்தான் திருமண தினத்தன்றே, “தம்பதியர்கள், தாம்பத்ய உறவை வைத்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல!என்கின் றனர் மருத்துவர்கள்.

ஹனிமூன் நோய்கள்

முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதிய ருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும் வாய்ப் புகள் அதிகமாம். பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது என்கின்ற னர் மருத்துவர்கள். அவசர கோலத்தில், ஆரோக்கி யமற்ற சூழ்நிலையில் உறவு கொ ள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம் வருமாம்.

முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உண வாக உட்கொள்ளுங்கள். அன்றைய தினம் சம்பிரதாயத் திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை சாப்பிட்டே ஆகவே ண்டும் என்பது கட்டாயமில்லை. உடலு ம் மனமும் லேசாக இருந்தலே பாதி டென்சன் பறந்து விடும்.

அன்பை பரிமாறும் வழி

முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதையாவது செய்யப் போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிர தை. இதனால் இருவருக்கு மிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிர வன்று புதுமணத் தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ள லாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம் பேச லாம்.

சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமி டைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும் களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்கின்றனர் மருத்துவத் துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திரு மணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டு மல்ல. காதல் திருமணம் செய்பவர்களுக் கும் பொருந்தும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: