Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌மது வீட்டிற்கான மின் கட்டணத்தை மின்வாரிய ஊழியர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள் தெரியுமா?

ந‌மது வீட்டிற்கான மின் கட்டணத்தை மின் வாரிய ஊழியர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள் தெரியுமா? அட என்ன‍ சார் அதல்ல‍ போய் யார் சார் தெஞ்சுக்கிறது, என்று நினைக்கிறீர்களா, இந்த நினைப்பை மட்டும் சற்று மாற்றிக் கொள்ளுங்க ள். ஆம்! மின்வாரிய ஊழியர்களால் நாம் உபயோ கிக்கும் மின்சாரத்திற்கான கட்ட‍ணத்தை எவ்வா று துல்லியமாக கணக்கிட்டு சொல்கிறார்கள் என் பதை தெரிந்து கொள்ள‍ வேண்டியது நம் ஒவ் வொருவரின் கடமையாகும். இதோ அந்த மின் கணக்கீட்டு முறை 

வீட்டு இணைப்புகளுக்கானது:- 

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00  நிலைக்கட்டணம் இல்லை. (நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)
.
இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00. (நீங்கள் 100 யூனிட்டுக்குமேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலை க்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக் கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00. 201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.  நிலை க்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். 

நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை400.00+10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+கூடுதல் கட்டணம் ரூ,30.00  ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.  201-500 யூனிட் வரை ரூபாய் 4.00. 500 க்கு மேல் ரூபாய் 5.75 நிலைக்கட்டணம் ரூபாய் 40.00 (நீங்கள் 500 யூனிட் டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்து விடுவீர்கள். 

நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடு த்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

2 Comments

Leave a Reply