Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருகளே! உனது மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி?

திருமண வாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், திருமணம் ஆகி பலவருடங்கள் ஆன பெண்ணா நீங்க, அப்ப‍டி ன்னா உங்க‌ மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி? என்று சில குறிப்புக்க‍ளை கீழே கொடுக்க‍ப் பட்டுள்ள‍து. படித்து பயனுறுங்கள்

1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, “அம்மா” என்று அன்போ டு அழையுங்கள், ‘அம்மா’ என்ற மூன்றெ ழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.

2. உங்கள் மாமியாருக்கு, வயது முதிர் ச்சி காரணமாக ஏற்படும் நோய் கள் ஏதா வது இருந்தால், அதை நீங்களே நேராநே ரத்துக்கு ஞாபகப்படுத்தி, உணவை வழங் கி, பின் தேவையான மருந்து மாத்தி ரைகளை எடுத்துக்கொடுத்து போ டச் சொல் லுங்க‌

3.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவ னியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமா யின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தி ல் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.

4.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரி ந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரி டமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள். தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட் டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.

5. உங்கள் மாமியார் உங்கள் மீது ஏதாவது கோபித்துக்கொண்டாலோ அல்ல‍து திட்டினாலோ, உங்கள் அம்மா திட்டினால் நீங்கள் எப்ப‍டி பொறு த்துப் போவீர்களோ அதுபோல சற்று பொறு மையை கையாளுங்கள். அவரது கோவம் தீரும்வரை மறுவார்த்தை எதுவும் பேசாம ல் அமைதியாக இருந்துவிடுங்கள். அவருக் கு இருந்தகோபம் தணிந்து சாதாரண நிலை க்கு வந்தவுடன், ஏம்மா என்னை அப்ப‍டி திட்டினீர்கள், எதற்காக என்று நான் தெரி ந்து கொள்ள‍லாமா? நான் என்ன‍ தவறுசெய்தேன் என்று சொன்னீர்கள் என் றால், அதை திருத்திக்கொள்ள‍ முயற்சிப்பேன் என்று சொல்லிப் பாரு ங்கள். அதுவரை மாமியாராக இருந்தவர் அடுத்த‍ விநாடியே உங்கள் அம்மாவாக மாறி, உங்களிடம், தான் ஏன் அவ்வாறு பேசினோம் என்ப தை உங்களிடம் பகிர்ந்து கொண்டு, உங்களிடம் அப்ப‍டி பேசியமைக்கு வருத்த‍மும் படுவார்.

6.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாத னைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்ப வங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்க ள். சுவைக்க சுவைக்க ‘மலரும் நினைவுகளை’ பகி ர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

7.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமி யோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண் ணத்தையும் உருவாக்கும்.

8.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக்கேளுங்கள். அவ ருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக் கும்.

9.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங் கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழு ங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பி ல் திக்கு முக்காடி போவார்.

10.எல்லா அம்மாக்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possessiveness]  என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன் னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ண ம், அந்த உணர்வை அதிகப்படுத்தும். இத னை மனதில் கொள்வது ஒரு மருமகளு க்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக்கொண்டால் நீங்கள் தான் மாமி யார் மெச்சும் மருமகள்.

11.உங்கள் கணவர், உங்களுக்கென்று ஒரு புடவை வாங்கி வந்தாலும், ஏன் உங்க அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி வரவேண்டியது, என்று கேட்டு அடு த்த‍ முறை வரும்போது உங்க அம்மாவிற்கு சேர்த்து வாங்கி வரச் செய் யுங்கள். இதனை அப்ப‍டியே உங்கள் மாமி யாரிடம் ஒரு புகாராகவே தெரிவியுங்கள் எப்ப‍டி என்றால், பாருங்க அம்மா, நீங்களு வீட்டில இரு க்கீங்க என்ற ஞாபகமே இல் லாம எனக்கு புடவை வாங்கி வந்திருக் காரு, அத அவர்கூட ச்ண்டைப்போட்டு உங்களுக்கு பிடித்த‍ வண்ண‍த்தில் புடவை வாங்கி வரச்சொன்னேன் அதே மாதிரி வா ங்கி வருந்திருக்காரு. பாருங்க இந்த புட வை உங்களுக்கு பிடித்திருக்கா பிடிக்க‍ல னா சொல்லுங்க, இப்ப‍வே போய் மாத்திக் கலாம். என்று சொல்லு ங்கள்.

12. மேலும் உங்கள் கணவர், உங்களுக்கென்று வாங்கிய புடவை மறு நிமிடமே உங்கள் மாமியாரிடம் காண்பித்து, உங்கள் மகன்தான் வாங்கி க்கொடுத்தார். இது எப்ப‍டி அம்மா இருக் கு?

13. நீங்களும் உங்கள் கணவரும் எங்கா வது வெளியில் செல்வதாக இருந்தால், அதை முன் கூட்டியே உங்கள் மாமியாரிடம் தெரி வித்து விடுங்கள். எந்த அம்மாவும் தனது மகன், அவனது மனைவியுடன் வெளியில் செல்ல அனுமதி தன்னை மதித்து கேட்கும் போது, அதை மறுக்க‍ மாட்டார்கள். ஆகவே, சரி போய்ட்டு வாங்க, பத்திர மா பொழுது சாய்வதற்குள் வாங்க, என்று சொ ல்லி, உங்கள் கணவரிட மும், டேய் வண்டியை வேகமாக ஓட் டாதே! புரியுதா, பின்னாடி என்னோட மருமக இருக்கா, பாத்து பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டுவா என் று சொல்வார்.

14.அப்ப‍டிவெளியில்செல்லும் போது , உங்கள் மாமியாருக்கு பிடித்த‍ உண வுகள், அல்ல‍து ஏதேனும்பொருட்கள்  உதாரணமாக கைப்பை, துணிமனிக ள் போன்றவற்றை மறக்காமல் வாங்கி, வீட்டிற்கு வந்தவுடன், நாங்க இந்த ஓட்ட‍லுக்கு போய் சாப்பிட் டோம், இந்த உணவு ரொம்ப நல்லா இருக்கு, உடனே எனக்கு உங்களோட ஞாபகம் வந்திருச்சு, அதனால், அந்த உணவை உங்களுக்கும் வாங்கி வந்திருக்கோம். இந்தாங்க உந்த உணவை நீங்களும் சாப் பிட்டு பாருங்க, எவ்வ‍ளவு ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கு என்று சொ ல்லி கொடுத்துப் பாருங்கள்.

15. உங்கள் நாத்த‍னார் அதாவது உங்கள் கணவரது சகோதரிகளுக்கு திருமணமாகாமல் இருந்தால், அவர்களுக்கு நல்ல‍ வரன் பார்த்து, திரு மணம்செய்து வைக்க‍ உங்க மாமியார், பேச் சைத் தொடங்கும்முன்பே, நீங்களே அத்தே எங்க ஒண்ணு விட்ட‍ அண்ணன் இருக்காரு, ரொம்ப அமைதியானவர், நம்ம‍ வீட்டு பொ ண்ணுக்கு ஏத்த‍வரு, அவரை, நம்ம‍ வீட்டு பொண்ணுக்கு திருமணம் முடித்தால், நம்ம‍ வீட்டு பொண்ணு அங்க நல்ல‍ வாழ்வாள். என்று சொல்லுங்கள். (தன்னிடம் மட்டும் அல்லாமல் தனது மகள்மீதும் நீங்கள் காட்டு ம் அக்க‍றையை கண்டு பூரித் துப் போவார். )

16. உங்கள் அம்மா அப்பவோ, அல்ல‍து உங்களோட உறவினர்கள் யாரா வது உங்கள பார்ப்பதற்கு உங்க வீட்டுக்கு வந்தால், உங்க மாமியாரை பற்றி உயர்வாக சொல்லுங்கள், குறை இருந்தாலும் சொல்ல‍ வேண்டா ம். வருபவர் நல்ல‍வராக இருந்துவிட்டா ல், பரவாயில்லை, உங்களுக்கு கிடைத் த‍ நல்ல வாழ்க்கை பார்த்து பொறா மை படுபவராக இருந்தால், நீங்கள் சொல்லும் ஒரு குறைக்கு கண் காது மூக்கு என்று வைத்து, உங்கள் மாமி யாரி ஒன்றுக்கு பத்தாக சொல்லி, மாமி யார் மருமகள் உற வில் விரிசல் ஏற்ப ட காரணாமாகிவிடுவார். ஜாக்கிரதை.

17. பண்டிகை நாட்களிலோ அல்ல‍து திருமணநாளிலோ அல்ல‍து உங்கள் பிறந்த நாளிலோ உங்களது மாமி யார் மாமனார் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க தவறாதீர்கள். அவர்களும் உங்களை மனதார வாழ்த் துவார்கள். இந்த வாழ்த்து உங்களுக்கு ம் மட்டுமல்ல‍, உங்களுக்கு வரப்போகு ம் பிள்ளைகளுக்கு அதுபோய்ச்சேரும்.

18. உங்கள் மாமியார், விரதம் ஏதேனு ம் இருந்தால், அம்மா உங்க உட ம்புக்கு இந்த விரதமெல்லாம் தேவையா, சொ ல்லுங்க அந்த விரத்த்தை என்னிடம் சொன்னீங்கன்னா நான் இருக்கே! என் று சொல்லுங்கள். மேலும் விரதம் மேற்கொள்ளும் நாட்களில் வாழைப் பழம், காபி, டீ போன்ற வற்றை அடிக்க‍டி அவர்களிடம் கேட்டு, போட்டுக் கொடுங்கள்.

19. வீட்டில், நீங்களும் உங்கள் மாமி யாரும் தனியாக இருக்கும்போது, அவ ரது மடிமீது தலை வைத்து படுங்கள். ஏம்மா? என்று கேட்டாள். எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு அம்மா, அதனாலதான் நா உங்க மடியில படுத் தேன்.உங்க மடியில படுக்கும்போது எங்க அம்மா மடியில படுப்பது போல் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுது என்று சொல்லுங்கள்.

20. உங்கள் மாமியார் செய்யும் வீட்டு வேலைகளுக்கு நீங்கள் உதவி யாக இல்லாமல், நீங்க போய் ஓய்வு எடுங்கம்மா நா பாத்திருக்கேன் என்று சொல்லுங்கள். அந்த வேலையை நீங்களே இழுத்துப்போட்டு, செய்யுங் கள். அப்ப‍டி நீங்கள் செய்யும்போது அவருக்கு ஓய் வெடுக்க‍ மனம்வராது. அதனால், உங்களுக்கு உதவி யாக அவர் இருந்து சில வேலைகளை செய்வார்.

21. வேலைகள் செய்யும்போதோ, ஓய்வெடுக்கும் போதோ, அவரது மாமியார், அவரிடம் எப்ப‍டி நடந் தார். என்பதை கேளுங்கள். நீண்ட காலமாக தனது மனதுக்குள் இருக்கும் சுக சோகங்களை அப்ப‍டி உங் களிடம் கொட்டிவிடுவார். மகிழ்ச்சியான அனுபவ மாக இருந்தால், அந்த சந்தோஷம் அவருக்கு இரண் டு மடங்காக பெருகும். சோக அனுபவமாக இருந்தா ல், அந்த  சோகம் பாதியாக குறைந் து மனது லேசாக ஆரம்பித்து, சற்று உற்சாகம் கூடு ம்.

22. ஏதேனும விசேஷங்களுக்கு குடும்பத்துடன் செல்லும்போது, உங்கள் மாமியாரின் அருகிலேயே இருந்து, அந்த விசேஷங்களுக்கு வந்திருக்கும் உங்கள் குடும்ப உறவி னர்களிடம் இவர் என் மாமியார் அல்ல‍ என்னோட அம்மா என்று சொல் லுங்கள்.

23.வயது முதிர்ச்சி காரணமாக அவரால் நீண்ட நே ரம் நிற்கமுடியாது. ஆகவே அதுபோன்ற நிகழ்ச்சி களுக்கு செல்லும்போது, அங்கிருக்கும் நாற்காலியி ல் முதலில் அவரை அமர வைத்துவிட்டு, பின்பு நீங்கள் அமருங்க‌ள். அதே பேரூந்து பயணம் பேற் கொள்ளும் போதும், மகளிருக்கான இருக்கை ஒன்று காலியாக இருக்கும்போது, உங்கள் மாமியாரை, அம் மா இங்க உட்காருங்க என்று சொல்லி அவரை அமர வைத்து நீங்கள் நின்று கொண்டு வாருங்கள்.

24. நீங்கள் பட்ட‍ப்படிப்பில் தேர்ச்சி பெற்றாலோ, அல்ல‍து வேலை கிடை த்தாலோ உங்களது மாமியாரிடம் ஆசிர் வாங்கிவிட்டு, அவரை கட்டிப் பிடித்து உங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள் ளுங்கள். அப்ப‍டி கட்டிப் பிடிக்கும் போது, ஒரு பாசமாக அன்பான ஒரு அம்மாவி ன் முத்த‍ம் உங்களுக்கு பரிசாக கிடைக்கு ம் இது உங்களை மேலும் உற்சாகப்படு த்தும்.

25. அக்க‍ம்பக்க‍து வீட்டுப்பெண் உங்கள் மாமியாரைப்பற்றி சிலகுறைக ள் சொல்ல‍ வந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல், எங்க அம்மாவை ப் பற்றி எனக்கு தெரியும், அதனால், அவர் களை பற்றி குறை சொல்வதை நிறுத்துங் கள். என்று போல்டாக போசுங்கள். அதை தவிர்த்து விடுங்கள்.

26. எந்தவிஷயமாக இருந்தாலும், உங்கள் மாமியாருடன் கலந்துரையாடுங்கள், அவ ர்கள் ஆலோசனைகளை கேளுங்கள். உங் களுக்கு அது சரியென்றுபட்டால், அதன் படி நடந்து கொள்ளுங்ள்.

27. ஏதாவது பிரச்சனை என்றால், உங்கள் மாமியாரிடம் மனம் விட்டுப் பேசுங்கள், அவர்களது அனுபவம் உங் களது பிரச்ச‍னைக்கு தீர்வாக இருக்கும்

28. உங்களது பிறந்த வீட்டில் நீங்கள் நல்ல‍ விதமாக நடந்து கொள்ளும் வித த்தால், தானாகவே உங்களது பெற்றோ ரின் மீதுள்ள‍ மதிப்பும் மரி யாதையும் உங்கள் பிறந்த வீட்டில் உயர்ந்து கொ ண்டே போகும் என்பது நிச்ச‍யம்

மேற்கூறியவற்றை மருமகளாகிய நீங்கள் கடைபிடித்தால், உங்கள் மாமியாரை வசியப்படுத்துங்கள். பின்பு பாருங்கள் மாமியார் மருமக ள் என்ற உறவு போய் அம்மா மகள் என்ற உறவே மேலோங்கி, குடுமபத் தில் சச்சரவு ஏதும் இன்றிய அமைதி யான இல்ல‍றவாழ்வு கிடைக்கும்.

ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍ இடுகையை கூடுதல் தகவல்களுடன் மெருகேற்றியது உங்கள் விதை2விருட்சம் இணையம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: