Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – உங்கள் அழகை மேம்படுத்த . . .

அழகான தோற்ற‍மும் தூய்மையான உடை யும்தான், மற்ற‍வர்கள் மத்தியில் நமது மதி ப்பை உயர்த்திக்காட்டுகிறது. அப்ப‍டி உயர் த்திக் காட்டும் தோற்றத்தை சிறப்பாக காண் பிப்பதில் தலைமுடி பெரும்பங்கு வகிக்கிற து. அந்த தலைமுடி, இன்றைய சூழ்நிலை யில் இளமையிலேயே நரைத்து விடுகிறது. அந்த நரையை மறைக்கும் விதமாக நமக் கு வரப்பிரசாதமாக அமைந் திருப்ப‍து ஹேர் டை. இந்த ஹேர் டையை பற்றிய சில தகவ ல்கள்

நரையை மறைக்க ஹேர்டை என்ற காலம் போய், அழகை மேம் படுத்த ஹேர் டை என்றகாலம் வந்துவிட்டது. அயல் நாடுக ளில் தலை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கம் வெகு நாட்களாகவே உள்ளது.

இப்போது நம் நாட்டிலும் இளைஞர், இளைஞி களிடையே தலை முடியை டை செய்து கொள்வது ஒரு ஃபேஷன் ஆகி விட்டது. ஹேர் டை பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு செயல்பட்டால் அது உங்கள் தோற்றத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

ஒன்றும் தெரியாமல், எல்லோரும் செய் கிறார்கள், நாமும் செய் வோமே என்று செய்தால் அதன் விளைவு கோமாளித் தனமாக இரு க்கும்!

நீங்கள் முதல் முறையாக முடியை டை செய்யுமுன் ஒரு அழகு நிலையம் (ப்யூட்டி பார்லர்)சென்று அழகுக் கலை நிபுணரின் ஆலோ சனையைப் பெறவும்.

உங்களுக்கு என்ன தேவை என்ப தை அவரிடம் விளக்கவும். நீங்கள் புத்தகங்களில் பார்த்த படங்களை யும் எடுத்துச் செல்ல லாம். உங்கள் நிறத்திற்கேற்ற, உங்கள் முடியின் அமைப்புக்குத் தகுந்த நிறம் என்ன என்பது ஒரு அழகுக் கலை நிபுண ரால்தான் கூற முடியும்.

அழகு நிலையம் செல்லாமல் நீங்களே முடிவெடுக்க விரும்பினா ல், உங்கள் முடியின் ஒரு சிறிய பாகத் தை டை செய்து பார்க்கவும். அல்லது டை செய்து கொண் டு வெளியில் செல்லும் போது ஏற்படும் விளைவு களைத் தாங்கும் மன உறுதியை தயார் செய்து கொள்ளவும் !

ஹேர் டையின் நிறம் முடிவாகி விட் டது. வீடோ அல்லது அழகு நிலையமோ, முதலில் ‘அலர்ஜி டெஸ்ட்’ செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஹேர் டை உங்கள் சருமத்தி ற்கு தீங்கு விளை விக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் முடியை முழுவதாக டை செய்ய வே ண்டும் என்று அவசியம் இல்லை. தலையின் முன் பக்கத்திலோ பின் பக்கத்திலோ மேலே இருக்கும் சில முடிகளை மட்டும்

“ஹை லைட்” செய்யலாம். இதை பராமரிப் பதும் எளிது.

டைசெய்த முடிக்கு அதிக பரா மரிப்பு தேவை என் பதை மறந்து விடாதீர்கள். அதற்கேற்ற ஷாம்பூ, கண்டிஷனர் ஆகியவற் றை உப யோகப் படுத்துங்கள்.

உங்கள் முடியை மருதாணியால் டை செய்தி ருந்தால், அந்த நிறம் முழுமையாக மாறும் வரை கெமிக்கல் ஹேர் டை உபயோகிப்பதை தவிர்க் கவும்.

குளித்த பிறகு ஹேர் ட்ரையர் அதிகமாக பயன் படுத்துவதைத் தவிர்க்கவும். முடி அதிகமாக சூடானால் உங்கள் டையின் நிறம் மாறி, ஆங்காங்கே வெளுத்து அசிங்கமாகத் தோற்றம ளிக்கும்.

நாட்கள் செல்லச் செல்ல உங்கள் முடி வளருவ தால், டை செய்த முடியில் புதிதாக வளர்ந்த முடி வித்தியாசமாகத் தோற்றமளிக்கும். அதனால் இரு வாரத்துக்கு ஒரு முறை வளர்ந்த முடியை ‘டச் அப்’ செய்து கொண்டால் அழகாக இருக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: