Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சப்த கன்னியர்களிடம் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல்

சப்த (7) கன்னியர்கள், சக்தியின் வடிவம். தாங்கள் யாரென்றே உணராத அவர்களிடம் சிவபெருமான் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன.

சப்த (ஏழு) தெய்வக் கன்னிகள்

பார்வதி அம்மன்

பட்டத்தாள்

அருந்தவம்

பூவாள்

பச்சையம்மன்

மறலியம்மன் என்னும் காத்தாயி

பூங்காவனம்.

கன்னிமார்களின் கதை :

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தா ர்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கை கூடவி ல்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உண ராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழி பட்டு வந்தார்கள்.

சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளை யாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டி ருந்த பெண் களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மான பங்கப்படுத் தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக்கொருவராகக் காட்டிற்கு ள் ஓடியொளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டு ம் ஒன்றுசேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள். மற் ற சகோதரிகள் குழப்பமடைந்து, ”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி, ”பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண் மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டா னது இக்குழந்தை” என்றாள்.ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. “என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்க ளே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டு ம்?” என்று அழுத படி கேட்டாள்.

“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந் தால் நீ சொல்வதை உண் மை என நாங்கள் ஏற் றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரி கள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவ பெருமான், ”இவையெ ல் லாம் என் திருவிளையாடல் களில் ஒன்று. நீங்களெல் லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொ ண்டு மக்களின் துயரங்களைப் போக்கு ங்கள். மக்களும் உங்க ளையே முதன் மைப்படுத்துவார்கள். உங்களுக்கு ஏவ லர்களாக- காவல ர்களாக பூமாலைய ப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராய ப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிக ளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார் கள்.

குடி கொண்டிருக்கும் இடங்கள் :

பார்வதி அம்மன் – சன்னாசி நல்லூர்.

ட்டத்தாள் – புலியூர்.

அருந்தவம் – காளிங்கராய நல்லூர்.

பூவாள் – வ. சித்தூர்.

பச்சையம்மன் – குமாரை.

காத்தாயி – வெங்கனூர்.

பூங்காவனம் – அரகண்ட நல்லூர்.

இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

நன்றி நக்கீரன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: