.
திரிஷாவை’ கண்டு ரசிக்கின்றனர். சிலர் சத்தம் போட்டு அழைக்கின்றனர். ஒரு சிலர், அலைபேசியில் படம் பிடித்து செல்கின்றனர்.
.
வண்டலுர் உயிரியல் பூங்காவில், நீர்யானை மற் றும் குள்ள நீர்யானைகள் பராமரிக்கப்படுகின்ற ன. சுவிட்சர்லாந்தில் இருந்து வாம்பூரி என்ற ஆண் நீர்யானை 2001ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அதற்கு பெண் ஜோடியாக, சவுந்தர்யா என்ற பெண் நீர்யானை மைசூர் பூங்காவில் இருந்து, கொண்டு வரப்பட்டது.இந்த சவுந்தர்யா, 2008ம் ஆண்டு, ஒரு பெண் குட்டியை ஈன்றது. அந்த குட்டிக்கு ‘பிரகதி’ என, பெயர் சூட்டப்பட்டது.
.
இந்நிலையில், கடந்த ஆண்டு, சவுந்தர்யா இரண்டாவது முறையாக கர்பம் தரித்து, மீண்டும் ஒரு பெண் குட்டியை ஈன்றது. அந்த குட்டி நீர்
யானைக்கு ‘திரிஷா’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஒரு நீர்யானைக்கு நடிகையின் பெயர் சூட்டப்பட்டுள்ள தகவலை அறிந்து, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், நேராக நீர்யானைகள் பராமரிக்கும் இடத்திற்கு வந்து, ‘திரிஷாவை’ கண்டு ரசிக்கின்றனர்.சிலர் சத்தம்போட்டு அழை க்கின்றனர். நீண்ட நேரம் நின்று, குட்டி நீர்யானையின் நடவடிக்கைகளை பார்த்து ரசிக்கின்றனர். ஒரு சிலர், அலைபேசியில் படம் பிடித்து செல்கின்றனர். சமீபகாலமாக, வெள்ளை புலிகளுக்கு அடுத்தபடியாக, ‘திரிஷாவை’ பார்க்க வரும் கூட்டம் அதிகளவில் உள்ளது.‘திரிஷாவு க்கு’ கோதுமை தவிடு, கொண்டைக் கடலை, வாழைப் பழம், கேரட், ஆப்பிள், வெங்காயம் ஆகியவை உணவாக வழங்கப்படுகின்றன.
