ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே, காதலை ஏற்க மறுத்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஜாதாவை 2 பேர் தாக்கி உயிரோடு எரித்துள்ள னர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே, காதலை ஏற்க மறுத்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஜாதாவை 2 பேர் தாக்கி உயிரோடு எரித்துள்ள னர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி, கடந்த இரு வார ங்களாக கட்டாக்கில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். 70 சதவீதம் தீக்காயம் அடைந்ததால், அவரது உடல்நிலை மோசமானது.
உயிருக்குப் போராடிய அவரை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத் துவ மனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு ஆம்புலன்சில் ஏற்றி விமான நிலையத்திற்கு கொண்டு சென் றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். ஆனால் மாணவி இற ந்ததை உடனடியாக பெற்றோருக் கு டாக்டர்கள் தெரியப்படுத்தவில் லை.
வழியில் மாணவிக்கு பொருத்தப்ப ட்டிருந்த செயற்கை சுவாச கருவி யை டாக்டர்கள் அகற்றினர். அப் போதும் காரணத்தை தெரிவிக்க வில்லை. 6 மணி நேரம் கழித்து புவனேஸ்வர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபிறகே மாணவி இறந்துவிட்டதாக கூறினர்.
இச்செய்தியைக்கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் ஆத் திரம் அடைந்தனர். மாணவி சாவுக்கு பொறுப்பேற்று முதல்வர் நவீன் பட்நாயக் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறு
த்தி அரசு மருத்துவமனை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் மருத்துவம னையை அடித்து நொறுக்கினர். பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவி க்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவ த்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப ட்டது.
அரசின் அலட்சியத்தால் மாணவி இறந்துள்ளார். இதற்கு பொறுப் பேற்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி இருவரும் பதவி விலக வேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறு த்தினார்.
news from siruppiddy