Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் நிலை ஏற்படும் – தலைவா பட பிரச்சனை குறித்து கருணாநிதி!

நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் ரிலீ ஸாகியுள்ள‌ தலைவா படத்துக்கு தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸுக்கு தொடரும் தடங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி தமிழ் நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவி த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் அறிகையில் கூறப்பட்டு ள்ளதாவது,..

த‌மிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரிய வில்லை. அரசியல்வாதிக ள் மேடை களில் முதலமைச்சரைப்பற்றி வாயைத் திறந்தாலே போதும், உடனடியா க அவர்கள் மீது அவதூறு வழக்கு போட ப்படுகிறது. பத்தி ரிகைகள் அந்தப் பேச்சி னை வெளியிட்டால் அவர்கள் மீதும் அவ தூறு வழக்கு. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக 144 தடை உத்த ரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கே பொதுக் கூட்ட மோ, நிகழ்ச்சிகளோ நடத்த முடியவில்லை.

ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில மாவட்டங்களில் உள்ளேயே நுழையக் கூடாது என்று தடை விதி க்கப்படுகிறது. நெருக்கடி நிலை கால த்திலே கூட இப்படிப்பட்ட நிலைமை கள் இல்லை. அந்த வரிசையிலே தான் “தலைவா” திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்க ப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலா க எதிர் பார்த்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக் குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரைய ரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்ட ல்கள் வருவதாகக் கூறப்படு கிறது. ஆனா ல் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்று ம், யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அவ்வளவிற்கும் அந்தப் படத்திலே நடித்து ள்ள விஜயின் தந்தை இயக்குனர், எஸ்.ஏ. சந்திரசேகர், இந்த ஆட்சிக்கு மிகவும் வேண்டியவர் என்று கருதப்படுகிறவர். அரசுக்கு ஆதரவாக பல முறை நடந்து கொண்டவர். ஆனால் அவரும், நடிகர் விஜய்யும் முதல மைச்சரை இதற்காகச் சந்தி ப்பதற்காக கொடைநாட்டிற்கே பயணம் மேற்கொண்ட தாகவும், ஆனால் முதல்வரைப்பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது.

மேலும், தமிழில் பெயரிடப்படும் திரைப் படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசி னால் அனுமதிக்கப்படும் “வரி விலக்கு” கூட, இந்தத் திரைப்பட த்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு “விஸ்வரூபம்” திரைப்படத்திற்கும் இந்த நிலை தான் வந்தது. தமிழகத்தில் இப்படி ப்பட்ட ஜனநாயகத்திற்கும், சட்டத் திற்கும் புறம்பான நிலைமைகள் தொடரு மேயானால், அதை யாரும் கண்டு கொள் ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடு வார்களானால், ஆட்டைக் கடித்து, மாட் டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொட ங்குகின்ற நிலை தான் ஏற்படும்.

ஜனநாயகம் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பிரி வில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

செய்தி தமிழ்ஸ்டார்

Leave a Reply