Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என் தோளில் கை வைக்க உங்களைத்தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” (இதை யார், யாரிடம் சொன்ன‍து”?)

“என்  தோளில் கை வைக்க உங்களைத் தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது இந்த வாசகம் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த வாசகம் ஆகும்.  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒருங்கி ணைத்து, இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய அந்த பெருமைக் குரிய நமது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் சொன்ன‍ வரிதான் இது! சரி, இந்த வாசகம் எப்ப‍டி வரலாற்று சிறப்பு வாய்ந்த வாசகமாகும் என்பதுதான் உங்கள் முன் நிற்கும் கேள்வி! மேற்கொ ண்டு, நீங்கள் கீழே குறிப்பிட்டிருக்கும் ஒரு சம்பவத்தை படித்தவு ட‍ன் , நீங்களே சொல்வீர்கள். ஆம் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாசகம்தான் என்று. . .

இதோ அந்த சம்பவம்

இந்திய சுதந்திரப்போராட்ட‍த்தின்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோ ஸ் அவர்கள், முதல் முறையாக சர்வாதிகாரி ஹிட்லரை சந்திக்க சென்ற போது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை, ஒரு அறையில் அமர‌ வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம் பித்து விட்டார். ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டு கொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என் றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல பிரபலங்கள், ஏதோ உண்மையான ஹிட்லரையே தாங் கள் சந்தித்து விட்ட‍தாக பெருமை அடித்து கொண்டனர்.

 

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவு டனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது” என்றுகேட்டா ர்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் (என்) சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க உங்களைத் (ஹிட்லரை) தவிர வேறு யாருக் கும் தைரியம் கிடையாது” என்றார்…!

த‌கவல்- முகநூல்

Leave a Reply