Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாடிக்கையாளர்களை, மதிக்காமல் கேப்மாறி வேலைசெய்யும் வங்கிகளுக்கு “இவர்” ஓர் உதாரணம்

த‌னது வருமானத்திற்குமீறி தாமாக முன்வந்து கடன் அட்டை கொ டுக்கும் வங்கிகளிலிருந்து ஒரு பெருந் தொகையை கடனாக  வாங்கி விட்டு அதை கட்ட‍முடியாமல் காவல் நிலைய த்திற்கும் நீதி மன்றத்திற்கும் பயந்து வங்கிகள் சொல்லும் அந்த அடாவடி தொகையை தமது சொத்துபத்துக்களை எல்லாம் விற்று கடனை அடைப்ப‍வர் களும் உண்டு. இன்னும் சிலரோ வாங்கிய கடனை திரும்ப அடை க்க‍ முடியாமல், காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலை ந்து கொண்டிருக்கும் அவல நிலைக்கும் ஆளாகி இருப்ப‍ர். ஆனால், ரசியாவை சேர்ந்த ஒருவர், தனக்கு கடன் அட்டை கொடுத்த‍ வங்கி யையே ஒரு பிடி பிடித்துள்ளார். அத்துடன் அல்லாமல் அந்த வங்கி யிடமிருந்தே நஷ்ட ஈடாக ஒரு பெருந்தொ கையையும் நீதி மன்றத்தின் மூலம் பெற்று ளார். அந்த சுவாரஸ்யமான சம்பவம் இதோ.

ரசியாவைச் சேர்ந்த Dmitry Agarkov என்பவர் தன்னைச் சந்திக்க வந்த கடன் அட்டை வழ ங்கும் “Tinkoff Credit Systems” நிறுவன அதிகா ரிகளிடம் நான் சொல்லும் இந்த “Terms & Conditions”க்கு நீங்கள் சம்மதித்தால் உங்க ளின் கடன் அட்டையை நான் வாங்கிக்கொள்கிறேன் என சொல்லி யுள்ளார்.

அண்ணாச்சியின் Terms & Conditions.,

  1. வட்டி விகிதம் ௦% மட்டுமே
  2. அளவில்லாமல் பணம் எடுக்கும் வசதி
  3. மேற்சொன்ன இரு Termsஐ ரத்து செய்ய அல்லது மாற்றம் செய்ய வங்கி விரும்பினால் ஒரு பெரிய தொகையை தண்ட மாக எனக்குக் கொடுக்க வேண்டும்.

இவரின் இந்த இடைச்சொருகிய இந்த வரிகளை படித்துப்பார்க்கா

Dmitry Agarkov

மல் அந்த வங்கி உயர் அதிகாரி சம்மதம் தெரிவித்து அட்டை யை குடுத்துள்ளார்.  இரண்டு வருடம் பயன்படுத்திய பின்னர் இவரின் தில்லுமுல்லை அறிந் த வங்கி, அட்டையை ரத்து செய் து அபராததமாக $1,363 கட்டு மாறு சொல்லியுள்ளனர்.

ஆனால் இவரோ, Terms & Conditions படி வங்கிதான் என க்கு அபராதம் கட்ட வேண்டும் என $727,000 கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாடிக்கையாளர்களை மதிக்காம ல் கேப்மாறி (Changing CAP on head., Which means supporting one team cap first and supporting another team by wearing another cap)  வேலை செய்யும் வங்கிக ளுக்கு இவர்  ஓர் உதாரணம். இது போ ன்ற வழக்குகளில் பொதுவாக வாடிக் கையாளர் சொல்லும் “Terms & Conditions ஐ முழுமையாக படிக்க வில்லை” என்பதையே இப்போது இந்த வங்கியும் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது.

thanks to techtamil

Leave a Reply