Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (11/08/2013): “ஓடிப் போய் விடலாமா’ என்று ஒருவரையொருவர் கேட்பதும் நிஜமான காதல் இல்லை”

அன்புள்ள அம்மாவுக்கு—

தங்கள் முகம் தெரியாத மகள் எழுதுவது. எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம். என்னு டன் பிறந்தவர்கள் இரு அண்ணன்; ஒரு தம்பி. நான் ஒரே பெண். இப்போது, என் வயது 17. என் 12வது வயதில் ஒருவரை நேசி த்தாள் என் வயதுடைய உறவுக்கார பெண் ஒருத்தி. தன் காதலைப் பற்றி தினமும் என்னிடம் கூறுவாள் .

அந்தக் கதைகளை கேட்டதால், அந்த வயதி ல் எனக்கு, “வருங்காலத்தில் நாமும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் வரும். காதல் வீட்டிற்கு தெரிய, அந்த பையனை என் கண் எதிரிலேயே அடித்தான் அவள் அண்ணன். அதைப் பார்த்த எனக்கு, காய்ச்சலே வந்துவிட்டது.

என் 15வது வயதில் என் மாமாவின் மகனை கண்டபோது, “ஏன் இவ ரை என் வாழ்க்கை துணைவராக தேர்ந்து எடுக்கக்கூடாது…’ என்று நினைத்தேன். அந்நேரத்தில் என் உறவுக்காரப் பெண்ணுக்கு, வேறு ஒருவரோடு திருமணம் நடந்தது. என் வீட்டில் ஜாதகம் பார்த்தனர். அதில் எனக்கு சொந்தத்தில் திரு மணம் நடக்காது என்று தெரிந்த து.

என் மனதை மாற்றிக் கொண்டேன். என் வீட்டு பக்கத்தில் துணிக் கடை வைத்திருந்தார் முஸ்லீம் ஒருவர்; அவருக்கு மூன்று சகோ தரர்கள். அவர்கள் அனைவரும் என்னை, “தங்கை’ என்று கூறுவர்.

ஆனால், கடைசியில்பிறந்தவர் என் னை பெயர் வைத்துதான் அழைப்பார். அவரை, என் மனசுக்குள் நேசித்தேன்; ஆனால், வெளியே கூற வில்லை. கார ணம், “இந்த வயதில் இவளுக்கு இது தேவையா…’ என அவர் நினைத்தால்…

ஆனால், அவர் என்னிடம் பலமுறை கடி தங்கள் கொடுத்து இருக் கிறார். நான் ஒருமுறை கூட வாங்கவில்லை; மனதில் ஒரு பயம். ஒருமுறை, “எந்த முறையில் திருமணம் செய்து கொள் வோம்,’ என்றார். விளை யாட்டாக கேட்கிறார் என நினைத்து, “கிறிஸ்தவ முறையில் செய்து கொள் வோம்…’ என்று கூறினேன்.

அதைகேட்டு நான் காதலிக்கிறேன் என்ப தை அறிந்து, இவை அனைத்தையும், அவர், பக்கத்துவீட்டு அக்காவிடம் கூறி விட்டார். அது மட்டுமன்றி, “நாம் இருவ ரும் ஓடி போலாமா,’ என்று நான் கேட்ட தாக, அதிக மாக சேர்த்து கூறி விட்டார்.

என்னை அழைத்து, “இவ்வாறு செய்கிறாயா,’ என்று அந்த அக்கா கேட்க, “நீங்கள் கூறுவதுபோன்று எனக்கு யாரையும் தெரியாது.’ என்று கூறிவிட்டேன். அதற்குபின், என் மனதுக்குள் உள்ளவர் என்னிடம் முன் போல் பேசவில்லை; நான் சிரித்தால் கூட சிரிப்பது கிடையாது.

ஆனால், இப்போதுதான் அவர்மீது அதிக மாக காதல் ஏற்படுகிறது என்று நினைக் கிறேன். ஏன் என்றால், அவரை ஒருநாள் பார்க்கா மல் இருந்தாலும், என் மனம் பதறி விடுகிறது. அவர் முஸ்லீம்; நான் இந்து. துணிந்து காதலை வெளிப்படுத்தி விட வா.. வெளிபடுத்தினா ல் இது நிறைவேறுமா; இல்லை வேறு ஏதாவ து சிக்கல் வந்துவிடுமோ என்று பயமாகவும், குழப்பமாகவும் உள்ளது.

இதனால், என் படிப்பும் தடைபடுகிறது. முன்பு என் மார்க் 90 சதவீதம்; ஆனால், இப்போது 43 சதவீதம் தான். எனக்கு ஒரு நல்ல பதிலை தரு மாறு மிகவும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் பதிலை எதிர்பார்க்கும் மகள்.

அன்பு மகளுக்கு—

உன் கடிதம் படித்தேன்.

இப்பொழுதெல்லாம் இதுபோன்ற பிஞ்சிலேயே பழுத்த காதல் கதை களையே கடிதங்களில் பார்த்து மிகவும் வருத்தத்துடன் எழுதுகிறே ன். எத்தனை இளைஞர்களுக்கும், யுவதி களுக்கும் எழுதியிருக்கிறேன். அலுக்கா மல், சலிக்காமல் எழுதிக்கொண்டே இரு க்கிறேன்.

எனக்கெல்லாம் காதல் என்றால் என்ன வென்றே தெரியாது உன்வயசில். நிறைய புத்தகம் படிப்போம்; அதில் வரும் காதல் உன்னதமாக இருக்கும். நிறைய பாட்டு பாடுவோம்; சக சிநேகிதி களுடன் போட்டி போட்டு எல்லாப்போட்டிகளிலும் கலந்து கொள் வோம். அதைப் பற் றியே கனவு காண்போம்.

அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களிடமே அநாவசியமாய் பேச்சு வை த்துக்கொள்ளத்தயங்குவோம். அப்படியி ருக்க, அதிகம் பழக்க மில்லாத ஆணுடன் பேசினால், எங்கள் வீட்டுப் பெரியவர்கள், எங்களை, “பெண்டு’ நிமிர்த்தி விடுவர்.

“இவர்தான் உன் கணவர்’ என்று பெரிய வர்களால் அறிமுகப்படுத்த ப்பட்டு அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, முறையாய் தாலி கட்டியவ ரிடம் கூட, சரளமாய் பேச பல மாதங்கள் ஆகும்.

“ஆணுக்குப் பெண் சமம்’ என்பதை நாங்களும் அறிந்திருந்தோம். ஆனால், இப்படி கடிதம் கொடுப்பதிலும், மனசைக்கண்டபடி அலை க் கழியவிடுவதிலும், ஆணுக்குப்பெண் சமம் என்று நாங்கள் நினை த்ததே இல்லை.

ஒவ்வொரு சமயம் பார்க்கும்போது, “டிவி’யும், பத்திரிகைகளும் மட்டுமல் லாது, இக்காலப்பெற்றவர்களே தங்கள் குழந்தைகள் வீணாவதற்கு ஒரு கார ணமோ என்று தோன்றுகிறது.

முஸ்லீமோ, இந்துவோ… பிரச்னை அது அல்ல சின்னப் பெண்ணே… நீ இன் னும் முற்றாதத்தளிர். எந்த விதக்குழப்பமும் இல்லாமல் படிக்க வேண்டிய வயசு. இது போன்ற வயசுகளில்தான் மிகமிக ஜாக்கிர தையாய் இருக்க வேண்டும். 15 வயதில் மாமன் மகன், இப்போது 17 ல் பக்கத்துக் கடை முஸ்லீம் இளைஞர்… “யாரையாவது காதலித் து, மனசையும், படிப்பையும் பாழாக்கிக் கொண்டால் தான் ஆச்சு…’ என்று ஏதாவது சபதம் எடுத்திருக்கி றாயா?

உனக்கு இன்னும் காலம் இருக்கிற து. நன்றாக படித்து, நல்ல வேலையி ல் அமர்ந்து, உற்றாரும், ஊரும், நாடும் போற்றும் வண்ணம் உயர லாம்.

இன்றைக்கு விளையாட்டாய், “அவ ளும் என்னை, “லவ்’ செய்றா… ரெண் டு பேரும் ஒடிப் போயிடலாமான்னு கேட்டா…’ என்று அந்த இளை ஞர், தன் பக்கத்து வீட்டு அக்காவிடம் சொன்ன சொல், நாளைக்கு உன்வெற்றிப்பாதையில் நெருஞ்சி முள்ளாய் இருந்தால் ,. என்ன ஆகும்.

காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை  இருந்தால், முதலில் படிப்பை முடி. உன் னை, உன் அழகுக்காகவோ, இளமைக்காக வோ, உன் பெற்றோர் தரும் சீதனத்துக்காக வோ, நீ சம்பாதித்துத் தரப்போகும் பணத்துக் காகவோ அல்லாமல், உன்னை, உனக்காகவே காதலிக் கிறவனை நீயும் காதலி.

அது, பக்கத்து வீட்டு இளைஞனாகவே இருந்தா லும் காத்திருக்கட்டும். உன் படிப்புக்குச் சம மாக அவனும் படிக்கட்டும். உன் பதவிக்கு நிக ராக அவனும் நல்ல பதவியில் இருக்கட்டும். அதை விட்டு, அசிங் கமாய், நாலு பேர் அறிய காதல் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதும், தனிமையில் சந்திப்பதும், “ஓடிப் போய் விடலாமா’ என்று ஒருவரை யொருவர் கேட்பதும் நிஜமான காதல் இல்லை; இது ஒரு விதமான மயக்கம்; போதை, அவ்வளவே!

மற்றவர்கள் தங்களை ஏதோ சினிமா கதாநாயகன்போல நினைத்து க் கொள்ளவேண்டும் என்பதற்காகப் போட்டுக்கொள்ளும் வேஷம். அதுவும், அந்த இளைஞன், எப்போது நீ சொல்லாத வார்த்தையான, “ஓடிப் போயி டலாமா,.’ என்றுகேட்டதாக அந்த அக்கா விடம் கூறினானோ… அது, அந்த அக்கா வின் முன்னிலையில் தனக்குத்தானே போ ட்டுக் கொண்ட மாலை.

ஒருவேளை, அந்த அக்கா மனசில் ஒரு விதப்பொறாமையை உண்டு பண்ணி, “பார், என்பின்னால் ஓடிவர இத்தனைப் பெண்கள் இருக்கி ன்றனர்.’ என்று காட்டிக்கொள்வதற்காக இவன், உன்னை பலிகடா வாக்கி இருக்கலாம். புத்திசாலிப் பெண்ணாக இருந்தால், இதையெ ல்லாம் ஒதுக்கு; நீயும் ஒதுங்கு. வீட்டுக்குள் உன்னை நீயே சிறை வைத்துக் கொள். அப்படி சிறைபட்ட நேரத்தை படிப்பில் செலவிடு.

பட்டாம் பூச்சிகள் இறக்கை முளைப்பதற்கு முன், புழுக்களாக, தன் னைத்தானே கூட்டில் அடைத்துக்கொள்வதில்லையா. அது போலத் தான் இதுவும். மனசை ஒருமுகப்படுத்து; எதையும் நிதானமாய், ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய். வாழ்த்துகள்!

இப்படிக்கு,
—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: