Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய‌ இளம்பெண்களின் புதிய கவலை! – ஆண்களே! இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள்!

அந்தக்காலத்தில் எல்லாம், திருமணத்திற்கு முன் ஒரு பெண், எந்த ஆணையும் நேருக்கு நேராக பார்ப் பது, பேசுவதோ கூடாது, தலை குனிந்து தான் நாடக்க‍ வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப் பாடுகளை அன்றைய ஆண்கள் சமுதாயம் விதித் தது. ஆனால், தற்போது, ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்ற நிலை ஏற்பட்டி ருப்ப‍து, பெண்களின் முன்னேற்ற‍த்தை காண்பிக்கிறது. படிக்கும்போது அல்ல‍து பணி புரியும்போது ஆண்களுடன் சேர்ந்தே படிக்க, பணிபுரிய வேண்டியிருக்கிறது. பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் இளம்பெண்களிடம் நட்பு பாராட்ட‍ விரும்பும் ஆண்கள், டேட் டிங்கிற்கு அழைத்து செல்வார்கள். பெண்கள், விரும்புவதை வாங்கிக் கொடுத்து, அவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ள‍ ஒரு சந்தர்ப்ப‍மாக இந்த டேட்டிங் அமைகிறது. அத்தகைய டேட்டிங் குறித்த‍ ஆய்வு ஒன்றை, கலி போர்னியா மாநில பல்கலைக்கழகத்தை ச் சேர்ந்த ஜேனட் லீவர், வெல் லெஸ்லீ கல்லூரியின் ரோசன்னா ஹெர்ட்ஸ், டேவிட் பிரெடரிக் ஆகி யோர் மேற்கொ ண்டனர். அதில் டேட்டிங் செல்கையில் யார் செலவு செய்வது என்ற கவலை குறி த்து தான் இந்த ஆய்வு.

டேட்டிங் போனால் நம்மையும் செலவழிக் கச் சொல்வார்களோ?: பெண்கள் கவலை

டேட்டிங் செல்கையில் எங்கே தன்னையும் பில் பணத்தை கட்டச் சொ ல்வார்களோ என்று 44% பெண்கள் கவலை ப்படுகிறார்களாம்.

டேட்டிங் செல்கையில் ஆண்களே அனை த்து செலவையும் செய்ய வேண்டும் என் று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பெண்களும் சில செலவுகளை ஏற்றுக் கொ ள்ள வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார் க்கின்றனர்.

ஆண்கள் தான்

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 84% ஆண்களும், 39% பெண் களும் கூறுகையில், பல காலம் டேட்டிங் செய்தும் ஆண்கள் தான் பெரும் பாலானவற்றுக்கு செலவு செய்கின்றனர் என்ற னர்.

நம்ம செலவழிக்க விட்டுவிடுவாங்களோ?

57% பெண்கள் டேட்டிங் செல்கையில் செலவு செய்ய முன்வருகிறார்கள். ஆனால் 39 % பெண் கள் தாங்கள் செலவழிக்க முன் வந்தால் அதை ஆண்கள் ஏற்கமாட்டார்கள் என்று நம்புகிறார்க ள். இந்நிலை யில் 44% பெண்களோ எங்கே ஆண் கள் தாங்களும் செலவு செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்களோ என்று கவலைப்படுகிறார்களாம்.

பெண்களும் செலவு செய்ய வேண்டும்

டேட்டிங் செல்லும்போது பெண்களும் செலவு களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று 64% ஆண்கள் எதிர்பார்க்கிறார்களாம். அதே சம யம் பெண்கள் செலவழித்தால் அதை ஏற்க ஒரு மாதிரியாக இருக்கிறது என்று 76% ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

செலவழிக்கவில்லை என்றால்…

பெண்கள் ஒருபோதும் செலவழிக்கவில்லை என்றால் அவர்களை டேட் செய்வதை நிறுத்தி விடுவோம் என்று 44% ஆண்கள் தெரிவித்த னர்.

ஆகமொத்த‍த்தில் பார்க்கும்போது, டேட்டிங்செல்லும் இன்றைய‌ இளம் பெண்களுக்கு, எங்கே இந்த ஆண்கள், நம்மையும் செலவழிக்க‍ச் சொல்வார்களோ என்ற கவலை யும் பீதியும் ஏற்பட்டிருப்ப‍து இதன் மூலமாக தெரிகிற‌து.

ஆண்களை, ஏமாளிகளாக, கோமாளிகளாக பார்க்கும் பெண்களின் இந்த குணம் என்று மாறப்போகிறதோ!

ஆண்களே!  இனி மேலாவது விழித்துக் கொள்ளுங்கள்! 

[[இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍! ]]
(இதன் முன்னுரை விதை2விருட்சம்)

Leave a Reply