Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூட்டுக் களவாணிகள்! – ( இந்த கூட்டு களவாணி பயலுகளுக்கு, இந்த தலையங்கம் சாட்டையடி கொடுத்திருக்கு,)

கூட்டுக் களவாணிகள்!

2013, ஆகஸ்டு (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

அது ஓர் அபூர்வ காட்சி! நம் தேசத்தின் எதிர்க் கட்சிகள், எதிரி கட்சிகள், உதார் கட்சிகள், உதிரி கட்சிகளை என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சி பொங்க ஒற்று மையாய் அமர்ந்திருக்கும் காட்சியை தொலைக் காட்சி களிலும் பத்திரிகைகளிலும் பார்த்த‍வுடன் உடல் சிலிர்த்துப் போனது, எதற்கு இந்த ஒற்றுமை?

வன்முறையிலிருந்தும் தீவிரவாதத்திலிருந்தும், நம் தேசத்தைக் காப் பாற்றுவதற்காகவா? விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக வா? வீழ்ந்துகொண்டிரு க்கும் ரூபாயின் மதிப்பை உயர்த்திக் காட்டுவத ற்காகவா?

வெளிநாட்டிலிருக்கும் கருப்புப் பணத்தை எல் லாம் அதிரடியாய் மீட்டு, நம் கஜானாவில் சேர் த்து உலக கடனை ஒரேயடியாய் அடைப்பதற்காக வா? அல்ல‍து அந்நிய முதலீடுகளாய் அடிமைப்பட்டிருக்கும் நம் தேசத் தை மீட்பதற்காகவா?

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி வெளி நாட்டு ஊடுருவலை ஒரே இரவில் தடுத்து நிறுத்துவதற்காகவா? ஊழல்களாலும், கமி ஷன்களாலும் செல்ல‍ரித்துப் போயிருக்கு ம்  நிர்வாகத்தை நெறிப்படுத்துவதற் காக வா? 28 ரூபாய் தினசரி வருமானத்தைச் சுட்டிக்காட்டி ஏழ்மையை இந்தியாவிலிருந்து ஒரே நாளில் விரட்டி அடித்த‍ அறிவு ஜீவி அலுவாலி யாவைப் பாராட்டுவதற்காகவா?

இப்ப‍டியெல்லாம் நாம் கற்பனை செய்து பார்த்தால், அது நம் பைத்தியக்காரத்தனம், அப்ப‍டியானால், எதற்கு இந்த திடீர் ஒற்றுமை?

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் குறிக்கிட க்கூடாதாம். தேர்தல் கமிஷனின் தீவிர நடவடிக்கைக ளை குறைக்க‍ வேண்டுமாம். குற்ற‍ம் நிரூபிக்க‍ப்பட்ட‍ வர்கள் தேர்தலில் நிற்க தடை என்கிற விதியை மாற்றி தண்டனை அடைந்தவர்கள் (எந்த ஜென்மத்தில் . . .) மட்டும் நிற்கத் தடை என்று தீர்ப்பை மாற்ற‍ வேண்டுமாம். சி.பி.ஐ.யின் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க‍ வேண்டுமாம். தகவல் அறியும் உரிமை சட்ட‍த்தின் கீழ் கட்சிகளைக் கொண்டு வரக் கூடாதாம்.

அடப்பாவி மக்கா… இதற்காகவா? அடிச்சிக்கிட்டிருந்த நீங்க அணைச் சிக்கிட்டு நிற்கிறீங்க என்றும் இதைத் தான் வேற் றுமையில் ஒற்று மைங்கறாங்களோ. . . என்றும் அப்பாவி ஜனம் விக்கித்து வாயடைத்து நிற்கிற து. வேறு என்ன‍ தான் செய்ய‍ முடியும்?

கும்பிக்குச்சோறிட கூட்டுசேர்ந்து வழி காண வக்கில்லாத இந்த கூட்டுக் களவாணிகளை கூண்டோடு வீட்டுக்கனுப்ப‍ நாமெல்லாம் ஒன்றி ணை வோம். அது முடியுமல்ல‍வா?

இந்த வைர வைடூரிய வரிகளின் உரிமையாளர் உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை) => கைபேசி 94440 11105

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

விதை2விருட்சம் இணையம் இங்கு பதிவுசெய்யும் அழுத்த‍மான ஆழமான கருத்து . . .

இந்த கூட்டு களவாணி பயலுகளுக்கு, இந்த தலையங்கம் சாட்டையடி கொடுத்திருக்கு, இதுக்கு மேலய அந்த பயபுள்ளிங்க திருந்தலன்னா, அதுக மனுசனுங்கள்ள‍ சேத்தேயே இல்ல‍!

One Comment

Leave a Reply