Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தண்ணீர்! – தெரியாமல் போன நல்ல‍ விஷயங்கள்

குடி தண்ணீர் கேட்டு நாம், பக்க‍த்தில் உள்ள‍ ஆந்திரா, கேரளா மற்றும் கர் நாடகா மாநிலங்களிடம் அன்றாடம் போராடி பெற்று வருகிறோம். ஆனால் அந்த குடி தண்ணீரை ஒழுங்காக பயன் படுத்துகிறோமா என்றால் இல்லையே! சரி அந்த குடி தண்ணீரால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது என்ப தாவது நாம் தெரிந்து வைத்துக்கொண்டு நமது உடல்நலத்தை பேணுகி றோமா என்றால் அதுவும் இல்லையே! ஏதோ, தாகம் எடுக்கும் போது, மொடுக் மொடுக் என்று இரண்டொரு டம்ளர் குடிக்கி றோம். அதன் பின் சாப்பி டும் போதும், சாப்பிட்ட‍ பின்பும் சிறிதள வு தண்ணீரை அருந்துகிறோம். ஆனால், மேல்நாட்டு நாகரீகத்தின் மீது கொண்டுள்ள‍ அதீத மோகத்தால், பன்னாட்டு நிறுவனங் களின் குளிர்பானங்களை கையிலேந்தி, அதையும், ஸ்டைலாக குடித்து வருகி றோம். அந்த குளிர்பானங்கள், எந்த ளவு நமது உடலுக்கு கேடுகளை விளைவிக்கின்றன என்பது பலரு க்கு தெரியாது. சிலர் தெரிந்திருந்தும், பகட்டுக்காக குடித்து அவர்களது உட லை அவர்களே கெடுத்துக் கொள்கிறா ர்கள்.

இங்கே பாருங்கள். வெறும் தண்ணீ ரால் நமது உடலுக்கு எத்தகைய நன் மைகள் ஏற்படுவதை பாருங்கள். 

.தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பள பள க்க செய்யும்.

தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும்போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீ ரில் சேர்ந்து விடுகிறது. அதனை குடிக் கும்போது நோய் ஏற்படுகிறது. தின மும் காலையில் வெறு வயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோ யை கட்டுப்படுத்தலாம். 

தண்ணீர் அவசியம்

கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளக்காடாகச் சூழ் ந்து விடுகின்ற மழைத் தண்ணீர் சலிப்பை உண் டாக்கியிருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றா டம் இரண்டு லிட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். அதைப் பருகும் விதம் எப்படி என்ப து இதோ இங்கே கூறப்படுவது சரிதானோ என்று யோசிக்க வைக்கின்றது. டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படு கிறது.

எப்படிக் குடிக்க வேண்டும் ?

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண் ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதிவேகமாக செல் லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்  தண்ணீரை ,  டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல்வேண்டும். அப்பொ ழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உண வு ஜீரணிக்கும். டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண் ணீரைத் தலை அண் ணாந்திச் சாப் பிடுவது காது நோய்களுக்கு வழி வகுக்கும். தண்ணீரை அண்ணாத் திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப் பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன் றுகின்றன. நமது உடம்பில் காது, மூக்கு, தொண் டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒரு போதும் தண் ணீரை அண்ணா த்திக் குடிக்க வேண்டாம். ஒருவர் குடித்த டம் ளரில் மற்றொருவர் குடிப்பது சுகாதாரக் கேடு என நீங்கள் கூறலாம். இதற்கு ம் மாற்று வழி உண்டு. ஒவ்வொ ருவ ருக்கும் டூத் பிரஷ் இருப்பது போல தனித்தனியே டம்ளர் வைத்துக் கொ ள்ள வேண்டு ம். விருந்தினர்க்குக் கொடுக்கப்பட்ட டம்ளரை உடனுக் குடன் அலசிக் கழுவி வைத்துக் கொள்ளலாமே!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply to sajeed from dubai Cancel reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: