தொடக்க காலத்தில் முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வரியா ராயின் நெருங்கிய தோழியாக காஜல் அகர்வால், நடித்த கியூன்…! திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப் படத்தின் மூலமாக ஆந்திர ரசிகர்களுக்கு அறிமு கமானார். இதுவரை அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்த இவருக்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கிய சந்தமாமா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானதுடன் இவரது வளர்ச்சி யும் தொடங்கியது.
அதற்கு பிறகு 2008-ம் ஆண்டு, பழ்னி திரைப்ப டத்தில் தமிழில் வெளியானது இத்திரைப்படம் இயக்குநர் பேரரசு இயக்கியுள்ளார். மேலும் நடிகர் பரத் இவருக்கு ஜோடி யாக நடித்தார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த சரோஜா திரைப் படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்ம லாட்டம் திரைப்படத்தில் நடித்தார்,
2009-ம் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசி யாக இவர் நடித்த மஹதீரா திரைப்படம் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றறார். அது தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்து பெரு வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து சூர்யாவுட ன், மாற்றான் திரைப்படத்தி லும் ஏ. ஆர். முருக தாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்ப டத்திலும், நடித்தார்.
இப்படி தமிழ் தெலுங்கு என்று பிசியாக இருந்த நடிகைகளில் குறிப்பிடத் தக்கவாராக இருந்தவர் இவர் (காஜல் அகர்வால்) அச்சமயத்தில் தனது சம்பளத்தை அதரடியாக உயர்த்தினார். இதனால் இவரது காட்டில் பண மழை கொட் டியது. பின் செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில் இனி வயதான ஹீரோக்களு டன் நடிக்க மாட்டேன் என பகிரங்கமாகவும் தெரிவித்தார்.
உச்சத்தில் இருந்த இவர் தற்போது பெரும் சரிவினை சந்தித்து வருகிறார். தற்போது இவரது கைவசம் ஜில்லா (நடிகர் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். ) மற்ற மொழி ப்படங்களில் இருந்து வாய்ப்புகள் ஏதும் இன்றி தனித்து விடப்பட்டுள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப்போன காஜல், மீண்டும் விட்ட மார்க்கெ ட்டை பிடிக்க ஒரு புதிய உத்தியை கையாண்டு வருகிறார். அதாவது சென்னையிலேயே செட்டில் ஆகியிருக்கும் பல முன்னணி நடிகர்களை எல்லாம் தானே தொ லைபேசிமூலம் தொடர்பு கொண்டு அவர்களுக் கு என்றே தனிப்பட்டமுறையில் ரகசிய பார்ட்டி கொடுத்து அவர்கள் நடிக்கும் திரைப்படங்களு க்கு, தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு வருகிறாராம். வந்தவர்களும் அப்படியே கொடுப் பதாக உறுதி அளித்துள்ளனராம்.
காஜல் (பார்ட்டி கொடுக்கும்) வலையில் வீழ்ந்த நடிகர்கள் அனைவரும் தமிழில் மூச்சுக்கூட விட நேரம் இல்லாமல் நடிப்பவர்கள் என்பதால் விட்ட இடத்தை மீண்டும் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.