Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மணலிலிருந்து மின்சாரம்! – இந்த இந்தியரை, இந்த தமிழரை, நீங்க‌ பாராட்ட‍ மறக்காதீங்க!

உலகின் பெருகிவரும் மின் தேவையை ப் பூர்த்தி செய்ய மணலில் இரு ந்து மின் சக்தி பிறந்திருக்கிறது. அதை விட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டு பிடித்தி ருப்பவர் ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.
 
உலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரை களில் எளிதாகக் கிடைக்கும் மணல் தா ன் இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கா னியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப் பிரித்து மின்சக்தி யைத் தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான் ஸ்ட் என்பவர் கண்டு பிடித்தி ருந்தார். ஆனால் அதைத்தயாரிக்க பிளாட்டினம் போன்ற விலையுர்ந்த, எளிதில் கிடைக்காத பொருள்கள் தேவை பட்டதால் அது பிரபலம் ஆக வில்லை. இப் போது அதே முறையில் அதிகச்செலவில்லா மல் ‘ஃப்யூல் செல்லை’ உருவாக்கும் ஒரு முறையை பத்து ஆண்டுகள் கடின ஆராய்ச் சிக்குப் பின்னர் கண்டு பிடித்திருக்கிறார் ஆர். கே. ஸ்ரீதர்.
 
நெல்லை மாவட்டத்துக்காரான ஸ்ரீதர் சென் னைப் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (ஹானர்ஸ்)கையும், அணுசக்தி துறையி ல் மேற்படிப்பையும் முடித்தப் பின் தொடர்ந்து அமெரிக்க இல்லினாஸ் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அரிசோனா பல்கலை கழகத்தில் விண்வெளி தொழில் நுட்பத்துறைத் தலைவராகப் பணியா ற்றியபோது நாஸாவின் பல திட்டங்களுக்கு ஆலோ சகர். நாஸாவின் செவ்வாய் பயணத் திட்டத்துக்கான மின் சக்தியை, ஃப்யூல் செல் முறையில் உருவாக்கும் ஆராய்ச் சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆராய் ச்சி காலத்தில் அமெரிக்க அரசு சார்ந்த மற்றும் பல தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமைப் பொறு ப்பில் திறம்படப் பணியாற்றியவர்.
 
‘பவுடரிலிருந்து பவர்’என்ற திட்டத்தின் மூலம் இவர் இதை மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க விரும்பினார். ஆனால் இவரது ஆராய்ச்சியைத் தொடர சோத னை உற்பத்திக்கு மிகப்பெரிய முத லீடு தேவைப்பட்டது. ஆராய்ச்சியி ன் விபரம் அறிந்த கெலினர் பெர்கின்ஸ்ர் என்பவரின் நிறுவனம் (venture capitalist) பல மில்லியன் டாலர்கள் முதலீடாகத் தந்து ஸ்ரீதரின் தலை மையில் ஒரு தனி நிறுவனத்தை 2001 இல் தொடங்கியது. இந்த கெலினர் தான் ‘கூகிள்’, ‘ஈபே’ போன் ற நிறுவனங்களுக்கு முதலீடு தந்து தொடங் கியது. உற்பத்தித் தொட ங்கியதும் தங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோகோகோ லா, பாங்க் ஆப் அமெரிக்கா, வால்மார்ட்… போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகளவில் பணம் தந்து இத்திட்டத்து க்கு உதவி இருக்கின்றன.  
 
பிளாப்பிகள் போல் இருக்கும் சதுர வடிவ அட்டைகளை அடுக்கி இணை த்து கறுப்பு வண்ணத்தில் ஒரு செங்கல் கட்டி வடிவத்தில் இருக்கும் ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இது ஒரு வீட்டுக்கு ஒரு வருடத்துக்கான மின்சாரத் தைத் தரும். இதுபோல பல செங்கல்களை இணைத்து தேவைகளுக்கு ஏற்ப பெரிய பாக்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு ‘புளும் சர்வர்’என்று பெயரிட்டு இரு க்கிறார். ஒரு பெரிய பிரிட்ஜின் சைஸிலில் இருக்கும் சர்வர் தரும் மின்சாரம் ஒரு சின்னத் தொழிற்சாலைக்குப் போதும். 
 
மின்சக்தியைச் சேமிப்பதோடு சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வே ண்டும் என்ற தாகத்தில் எழுந்த முயற்சியின் வெற்றி இது” என்று சொல் லும் ஸ்ரீதரை ஃபார்ட்யூன் (Fortune)பத்திரிகை நாளைய உலகின் தலை விதியைத் தீர்மானிக்கும் தொலை நோக்குள்ள ஐந்து பேரில் ஒருவராக ப் பட்டியல் இட்டிருக்கிறது .
 
– ரமணன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: