Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அது காதலா? கவர்ச்சியா? என்று உணர முடியவில்லை!” – நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி  நாளிதழ் ஒன்றில் வெளியானது. அந்த பேட்டி வருமாறு:– அனகா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானேன். அந்த பெயரை வைத்து அழைக்க கஷ்டமாக உள்ள து என்றனர். அதன் பிறகு அமலாபால் என மாற்றி னேன். அது ராசியாக அமைந் தது. நிறைய பட வாய்ப்புகள் வந்த ன. பள்ளியில் படித்தபோது ஒரு பையனை பிடித்தது. அது காதலா? என்று புரிய வில்லை. அவனை அடிக்கடி பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

கொஞ்ச நாள்தான் அந்த ஈர்ப்பு இருந்தது. கல்லூ ரிக்கு போனதும் இன்னொருவன் மேல் காதல் வந்தது. அறிவு முதிர்ச்சி இல்லாததால் அது காதலா? கவர்ச்சியா? என்று உணர முடிய வில் லை. இப்போது அந்த காதலும் போய்விட்டது. எனக்கு கணவராக வருபவர் எல்லோருக்கு ம் உதவுபவராக இருக்க வேண்டும். அடுத்த வர் கஷ்டங்களையும் புரிந்துகொள்ள வேண் டும். நான் படித்த குடும்பத்தில் இருந்து வந்த வள். நிறைய படிக்க வைக்க பெற்றோர் விரு ம்பினர். ஜாலியாக மாடலிங் பண்ணப் போய் மலையாள டைரக்டர் கண்ணில் பட்டு நடி கையாகி விட்டேன்.

நான் நடித்த முதல் மலையா ள படத்தை பார்க்க தியேட்டருக்கு போனே ன். என்னையும் சேர்த்து ஐந்து பேர்தான் இரு ந்தோம். கதை யை தேர்வு செய்து நடிப்பது முக்கியம் என்று அப்போது புரிந்து கொண் டேன். ‘மைனா’ படம் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. தமிழில் சர்ச்சைக்குரிய கதை யம்சம் உள்ள படமொன்றில் நடித்தேன். அந்த படத்துக்காக என்னை ஆபாசமாக சித்த ரித்து போஸ்டர் ஓட்டினர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். சினிமாவி ல் பணம் தான் முக்கியமாக உள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: