Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது !

ஒரு மனிதனுக்கு கடவுளைக்காணவேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது? கோவிலுக்குப்போ! என் றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய்? கடவுளைக் காண போகிறேன்! எங்கே? கோவி லில்! அங்கே போய்..? அவரை வழிபடப்போகிறே ன்! அவரை உனக் கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்க வில்லை. அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்? அப்படி யென்றால்.? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும்! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவு படுத்தினார். ஏ, மனிதனே… நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர் கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்ட வனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொ ண்டிருக் கிறார்கள். தங்களது கோரிக்கை களைக்குரல் மூலம் பட்டியலி ட்டுச் சொல்லிக் கொ ண்டிருக்கி றார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண் டிருக்கிறார்கள். அவ்வளவு தான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்… ஆண்டவனை சந்திக்க என்ன தான் வழி? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?

தியானம். தியானத்துக்கும் கடவுளுக் கும் சம்பந்தம் உண்டா? இல்லை! மனி தன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப் பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணு ம், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையி ல், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்கு வாய். உண்மையான தியான த்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டு மே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னு டைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றா வது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங் கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறை நிலையை நீங்கள் நெருங்கி விடுவீர் கள். வெளிநாட்டுக் காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாரு க்கும் கிடைச்சிருக்காது!

ஸ்பெஷல் தரிசனம்! 50 ரூபாய் டிக்கெட்! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது! அவன் முகத் திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம்! ஞானி கேட்டார்: அப்ப டின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வ ளவு தூரம்? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ் வளவுதான்! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்க லையா? இல்லை! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவு ளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு! யார் அவர்? அங்கே இருக்கிற அர்ச் சகர்! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன்! சோர்வோடு நடந்துபோனான். அதன் பிறகு ம் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய்? வீட்டுக்கு கோவிலு க்குப் போக வில்லையா? இல்லை! அங்கே போகவேண்டும் என்று தானே புறப்பட்டு வந்தாய்? ஆண்டவனை உணர் ந்த பிறகுதான் அவ ரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவ னை நெருங்கலாம் என்கிற உண்மை யை தெரிந்து கொண்டேன். ஞானி கை களை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிரு க்கிறீர்கள் என்பது பொருள்! விட்டு விலகினால் கடவுளை காண லாம்.

– Balasandiyan (Balasubramanian Kalyanaraman)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: