Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக?

சிலர் கோவிலைச்சுற்றி, வலதுபுறமாக, சுடும் கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக?

பொதுவாக கோவிலுக்குச் செல்ப வர்கள் அனைவரும் இடதிலிருந் து வலது பக்கமாக மூன்று முறை யாவது தெய்வச்சிலை உள்ள கரு வறை யைச்சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர்மட்டும், வேண்டுதல் படி, நடப் பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே சுற்றுவார்கள்.

ஒரு சக்தி வடிவத்தை சுற்றி வரும்போது, தெய்வீக சக்தியை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. ஆனால் நாம் வாழும் இடத்தைப் பொறுத்து அது இரண்டு விதமாக உள்ளது. பூமத்திய ரேகைக்கு வட பகுதியில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், கருவறையைச் சுற்றி வலது புறமாகவும் (கடிகாரம் சுற் றும் திசையில்), பூமத்திய ரேகை க்கு தென் பகுதியில் வாழ்பவர்கள் இடது புறமாகவும் சுற்ற வேண்டும். ஏன் இந்த வேறுபாடு என்றால்..

இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் நீர்த்துளி அல்லது ஏதோ ஒரு பொருள் மேலிருந்து கீழ் வரும்போது, அந்தப்பொருள் சுற்றிக்கொண்டே கீழே விழுமானால், அது வலதுபுறமாகத்தான் சுற்றிவிழும். குழாயைத் திருப்பினால்கூட நீர் வலது புறமாகவே சுற்றி விழுவதைப் பார்க்க முடி யும். பூமத்தியரேகைக்கு கீழே அதாவது தென் புறமுள்ள நாடுகளில் இது இடதுபக்க ம் நிகழும். சரியாக பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஊர்களில், இதை ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பார்கள். பூமத்திய ரேகைக்கு அந்தப் பக்கம் உள்ள குழாயைத் திருப்பினால் தண்ணீர் ஒரு திசையிலும் இந் தப்பக்கம் வந்து குழா யைத்திருப்பினால் தண்ணீர் வேறு திசையி லும் சுற்றி விழும்.
     
எனவேதான் பூமத்திய ரேகைக்கு மேல்புறமுள்ள நம் நாட்டில் ஒரு சக்தி வடிவத்தை சுற்றும்போது வலது புறமாக சுற்றுகிறார்கள். இப்படிச் செய் யும்போது தெய்வீகத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாகிறது. ஆனால் ஏன் படுத்துக்கொண்டே சுற்றுகிறார்கள் என் றால்..

அனைவராலும் ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க முடிவதில்லை. ஏதோ ஒருசெயல்மூலம்தான் தங்க ளை அர்ப்பணிக்க முடிகிறது. செயல் எந்த அளவு தீவிரமாக இருக்கிற தோ அந்த அளவிற்கு அவர்களால் தங்களை முழுமையாக அர்ப்பணி க்க முடிகிறது. அதனால்தான் மக்கள் இது போன்ற வழிகளை உருவாக்கிக் கொண் டார்கள். நடந்து சுற்றுவதற்குப்பதிலாக உருண்டு கொண்டே சுற்றுகிறார்கள்.

இப்படிச் சுற்றுவதால் அவர்களுக்கு ஏதாவ து அதிகமாகக் கிடைக்குமா என்றால் அப்ப டி ஏதும் சொல்ல முடியாது. ஆனால் எதை யாவது கஷ்டப்பட்டு செய்யும்போதுதான், மக்களுக்கு, எதையோ அர்ப் பணிக்கிறோம் என்ற எண்ணமும் மன நிறைவும் ஏற்படுகிறது.

இப்படிச் செய்யும்போது, சக்தியை கிரகிப்பதற்கு ஏதுவாக, தங்களை அதிகமாக திறந்த நிலையில் வைத்துக் கொள்ள முடிகிறது.அதிக நேரம் அந்த சக்தி நிலை உள்ள இடத்தில் இருக்கமுடிகிறது. எனவேதான் உரு ண்டு கொண்டே கோவிலைச் சுற்றுகிறார்கள். அதுவும்கூட, கோவிலைச் சுற்றி வெளிப்புறமுள்ள கருங்கல் தரையில், சூரியனி ன் தகிக்கும் வெப்பத்தில் உருண்டு சுற்றி வருகி றார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: