காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில் தான் நாள்தோறும் கலக்கி றது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரை யில் எரிக்கப்பட்டு கங்கை யில் கரைக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கை யில் தள்ளப் பட்டுக் கொல்லப்படுகின்றன – மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக் கணக்கில் மாண்டன ர்.
இன்னொரு புள்ளி விவரம் மிக வும் முக்கியமானது. இந்தியாவி ல் மற்ற மற்ற பகுதிகளில் எல் லாம் குழந்தைகள் மரணம் நூற் றுக்கு 94என்றால் கங்கைபாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.
பீகாரில் துர்காபூர், பொகாரோ, பி லாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந் தும், உரத் தொழிற்சாலைகளி லிருந் தும் அம்மோனியா, சயனைடு நைட் ரேட், முதலிய நச்சுக் கழி வுகள் ஏராளமாகக் கலக்கின்றன. பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டு ம் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்ச த்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச்சாம்பல் கங் கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.
கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலை களின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது இந்துக்கள் புனிதம் என்று கூறுகிறார் களே – அந்தக் கங்கையில் தான்.
இவற்றை எல்லாம்விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக் கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சி யான தகவலை வெளிச்சத்து க்குக் கொண்டு வந்துள்ளது. (தி பயணியர் 27.7.1997).
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்துள்ளது.
இதற்க்கு யார் காரணம்?
அரசா? பக்தர்களா? துறவிகள? வெட்டியான் களா? புண்ணி யம் தேடி காசிக்கு போய் மண் டையை போட்ட ஆத்மாக் களா? வேறு எந்த நாட்டிலாவ து இப்படி நடக்குமா? இடத் தைக் கொடுத்தால் இப்படித் தான் மடத்தைப் பிடிப்பதா? மலங்கள் ,பிளாஸ்டிக் குப்பை கூளங் கள், அழுகிய பூக்கள்,பூ மாலைகள், பாதி எரிந்த பிண ங்கள் (கங்கை நதி தீரத்தில் மொத்தம் 90கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளதாம் ,பிணத்தின் உறவினர் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து, பாதி வேகும்போதே நதியில் தள்ளிவிட சொல் லுகின்றனர், அப்போது தான் நேராக சொர்கமாம்.
கங்கையை காக்க உயிர்துறந்த சாது
கங்கையின் புனிதம் காப்பதற்காகவே உயிர்துறந்தவர் சுவாமி நிக மானந்தா. உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவா ரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமான ந்தா, மத்ரி சதான் ஆசிரமத்தை சேர்ந்த வர். கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரிமுதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி ஜூன்மாதம் 15ம்தேதி
உயிரிழந்தார்.
புனித கங்கை உயிர்பெறுமா?
கங்கை நதியின் புனிதம் காக்க கடந்த 1985ம் ஆண்டு முதல் பல்வே று திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி காலம் முதல் பல ஆயிரம் கோடி ரூபாய் தண்ணீ ராய் செலவழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கங்கை மாசுபடுவதை யாராலும் தடுத்து நிறுத்த இயல வில்லை. கங்கையை காக்க பல ரும் அறிவுறுத்தியும் சரியான நடவடி க்கை எடுக்காமல் திணறுகின்றன மத்திய மாநில அரசுகள். இதனால் பலரின் பாவத்தை கழுவிய கங்கை நதி பாவமாய் ஓடிக் கொண்டிருக் கிறது.
புனித கங்கையை உயிர்பிக்க இந்த அரசுகள் ஏதாவது செய்யப்போ கின்றனவா அல்லது கங்கை மெல் ல மடிவதை அனுமதிக்கப் போகின்றனரா என்பதுதான் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கேள்வி.