Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சித்த மருத்துவத்தின் முதல் சித்தனாம் அந்த சிவனின் அருள்பெற்ற மூலிகை இது!

ஒவ்வொரு செயலிலும் பூரணத்துவம் வேண்டும். பக்தியிலும் பூரணத் துவம் இருந்தால்தான் இறைநிலை இன் பம் சாத்தியமாகும். “மனமது செம்மை யானால் மந்திரம் தேவையில்லை’ என்பர் ஞானிகள். மனம் செம்மையானால்தான் பூரணத்துவம் சாத்தியமாகும்.

ஒருவன் பூரணத்துவம் பெற்றுவிட்டால் அவனுக்கு அகந்தை, ஆண வம் எதுவும் இருப்பதில்லை. அவன் செயல்பாடுகள் தெளிந்த நீரோடையாய் சமூக மேன்மை க்குப் பயன்படும். தியானம் ஒன்றே முழுமைக் கான வழியும் வாசலுமாகும். வெறும் பக்தியுடன் நின்றுவிடாமல், மிக்க சிரத்தையுடன் நம்முள் ஜீவனாய் ஜீவித்தி ருக்கும் அந்த சிவபெருமானை நித்தமும் தியானித்து பிறவிப் பெரும் பயனைப் பெற முனைவோம்.

சித்த மருத்துவத்தின் முதல் சித்த னாம் அந்த சிவனின் அருள் பெற்ற மூலிகைகளைச் சரணடை ந்து, சிவலயம் பெற முயல் வோம். சிவாம் சம் பொருந்திய- அனைத்து நற்பலன்களையும் தன்னகத்தே பெற்றுள்ள முருங் கையைப் பூரணமாய் சரணடைவோம். முருங்கையின் நற்பலனால் நல்தேகம் பெற்று நலமுடன் வாழ முனைவோம்…

முருங்கையைப்போல் அனைத்து நோய்க ளையும் தீர்க்கும் சக்தி வேறு எந்தக் கீரைக்கு ம் இல்லை எனலாம். இதை சர்வரோக நிவா ரணி என்று சொன்னால் மிகையல்ல. இந்தக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்பு ச்சத்து, இரும்புச்சத்து போன்ற அத்தியாவசி ய சத்துகளும் வைட்டமின்களும் அபரிமித மாக உள்ளன. உடல் பலவீனம், கருப்பைக் கோளாறுகள், எலும்பு மற்றும் நரம்பு தொடர் பான நோய்களை முழுமையாகக் குணப்படுத் தக்கூடியது முருங்கை.

மூட்டுவலிகள் குணமாக…

முருங்கைக் கீரையோடு சிறிது மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் மட்டும் சேர்த்து வேகவைத்து தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தா ல் மூட்டுவலிகள் அதிசயமாய் குணமா கும்.

முருங்கைக் கீரை, முடக்கத்தான் கீரை ஆகியவற்றை உலர்த்தி வகை க்கு 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் மிளகு, சித்தரத்தை, சுக்கு ஆகியவற் றை வகைக்கு 50 கிராம்சேர்த்து ஒன்றாக அரைத்துத்தூள் செய்துகொள் ளவும். இதில் அரைத் தேக்கரண்டி அளவு காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலிகள் முழுமையாய் குண மாகும்.

ரத்த அழுத்தம்  சீராக…

முருங்கைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, பின் அதை உலர் திப் பொடியாக் கி தினமும் காலை-மாலை இருவேளையு ம் அரைத் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த ம் சீராகும்.

இதய நோய்கள் விலக…

சீரகம், சோம்பு, ஓமம், தனியா ஆகிய வற்றை வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து, கால் லிட்டர் முருங்கைக் கீரை சாற்றில் அனைத்தையும் ஊற வைத்து உலர்த்தவும். பின்னர் தூள் செய்து பத்தி ரப்படுத்தவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் இதயம் சார்ந்த அனைத்து நோய்களும் விலகும்.

கப நோய்கள் விலக…

முருங்கைக் கீரை சாற்றில் மிளகு, அதி மதுரம் இரண்டையும் தேவையான அள வில் ஊறவைத்து, பின் உலர்த்திப்பொடி யாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கபநோய் கள், இருமல், காச நோய்கள் அனைத்தும் தீரும்.

சிறுநீர் நோய்கள் விலக…

ஒரு கைப்பிடியளவு முருங்கைக் கீரையை எடுத் துக்கொண்டு, அத்துட ன் 20 கிராம் பார்லி, கால் தேக்கரண்டி சீரகம், சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் தாரா ளமாய் பிரியும். மேலும் சிறு நீர் நோய்கள் அனைத்தும் விலகும்.

மாதவிலக்கு கோளாறுகள் மறைய…

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை எடுத்து, அத்துடன் அரை தேக்கரண்டி கறுப்பு எள், கால் தேக்கரண்டி கருஞ்சீரகம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயமாக்கி, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிடாய் முறைப் படும். மேலும் ரத்த உற்பத்தி உண்டாகி, மாதவிடாய்க் கோளா றுகள் அனைத்தும் முறையா யத் தீரும்.

ரத்த சோகை மறைய…

கைப்பிடியளவு முருங்கைக் கீரையுடன் ஒரு பல் பூண்டு, பத்து மிளகு, சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை முழுமையாகக் குண மாகும். இதனை காலை உணவுக்குப் பின் னரே சாப்பிட வேண்டும். ஒருசிலருக்கு வயி ற்றுக் கழிச்சல் உண்டாக லாம். அவர்கள் தங்களது செரிமான திறனுக்கு ஏற்ப உட்கொ ள்ள வேண் டும்.

கண் நோய்கள் விலக…

ஒரு கைப்பிடியளவு முருங்கைக் கீரை, ஒரு கைப்பிடியளவு பொன்னா ங்கண்ணிக் கீரை- இரண்டையும் நீர்விடா மல் அவித்து, சூடு ஆறியபின் கண்களில் வைத்துக்கட்டி வரவேண்டும். தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் கண் ரோகங்கள் அனைத்தும் விலகும். இதேபோல் முருங் கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு தணி யும். பொடுகுப் பிரச்சினையும் தீரும்.

பாலுணர்வு மேம்பட…

100 கிராம் ஜாதிக்காய் வாங்கி ஒன்றிரண் டாய் உடைத்துக்கொள்ளவும். பின்னர் அதை 250 மி.லி. முருங்கைக் கீரை சாற்றில் ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து கொள் ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து இரவில் சாப்பி ட்டு வந்தால் பாலுணர்வு மேம்பட்டு, கலவிச்சுகம் கிடைக்கும்.

முருங்கைக் கீரை கஞ்சி மாவு

இரண்டு கிலோ அளவு முருங்கைக் கீரையில் நீர் சேர்த்து விழுதாய் துவை யல்போல் அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த விழுதுடன் இரண்டு கிலோ பச்சரிசி கொட்டிக் கிளறவும். இதனை இரண்டு நாட்கள் நிழலில் காயவைத்து உலர்த்திக் கொள்ளவும். பின்னர் அரை கிலோ சிறுபருப்பை லே சாக வறுத்து சேர்க்கவும். மிளகு, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றையும் மேற்கண்டவற்றுடன் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.

இதில் தேவையான அளவுப் பொடியை எடுத்து நீரில் கலந்து கஞ்சியா கச் செய்து சாப்பிடலாம். அல்லது வெங் காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அடையாகச் செய்தும் சாப்பிடலாம். பிரசவி த்த பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு வலிக் கு இது அற்புத உணவாகும். அறுவை சிகி ச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண்க ளுக்கு இயல்பாக உண்டாகு ம் இடுப்பு  வலி முழுமையாக குணமடைய, இந்த கஞ்சி மாவை தொடர் ந்து 20 நாட்கள் சாப்பிட்டால் போதும்; பலன் நிச்சயம் உண்டாகும்.

முருங்கை பல்வேறு புலவர்களாலும் பாடப் பெற்ற பெருமைக்கு உரியது. முருங்கையின் பூக்கள் கடுங்காற்றில் அடிபட்டு உதிர்வதை, கடல் அலைகளின் நீர்த்துளிகள் சிதறுவதைப்போல இருப் பதாக அகநானூற்றுப் பாடலில் மாமூ லனார் என்னும் புலவர் பெருந்தகை குறிப்பிடுகின் றார்.

மருத்துவ குணங்களைத் தன்னுள் ஏராளமாய் பெற்றுள்ள முருங்கை பாம்பணி சிக்குருபுரம் சிவன் கோவிலில் தலவிருட்சமாய் வணங்கப் பட்டு வருகிறது.

சிவனின் சாரம் முருங்கையில் உள்ளது. முருங்கையைச் சார்ந்து வாழ முனைவோம்.

நன்றி – நக்கீரன்

Leave a Reply