Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது தேக அழகு பற்றி ஆர்யா அடித்த‍ கமெண்ட்டால், முகம் சிவந்த நஸ்ரியா

நடிகர் ஆர்யா எந்த படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிந்தாலும் அங்கி ருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொ ழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் என பாகு பாடின்றி க‌லாய்ப்பதில் மன்னாதி மன்னன் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று!

தற்போது நயன்தாரா, ஜெய் இவர்கள் நடி கர் ஆர்யாவும்  ராஜா ராணி திரைப்பட த்தில் நடித்து வருகிறார்கள். இத்திரைப் படத்தில், நஸ்ரியா நஸீமுக்கு ஒரு முக்கி ய கதாபாத்திரம் வழங்கப்பட்டு அதில் அவ ரும் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப் பின்போது ஆர்யா, நஸ்ரியா நஸீமை கலாய்த்துக் கொண்டிருந்தா ராம்.

நஸ்ரியா நஸீம் சாப்பிடுவதெல்லாம் பேச்சில் தான் போகிறது. அதனால் தான் அவருக்கு சதை போடுவதில்லை என்று ஆர்யா தெரிவி த்துள்ளார். மேலும் நஸ்ரியா ஒரு இடத்தில் இருக்க மாட்டார். நஸ் ரியா பேசினால் பேசிக் கொண்டே இருப்பார். அவர் சாப்பிடுவதெல்லாம் பேச்சுக்கே சரியாகி விடுகிறது. அதனால்தான் அவருக்கு வெ யிட் போடவில்லை என்று நான் சந்தேகப்படுகி றேன் ஆனாலும் நஸ்ரியா ஒரு திறமையான நடிகை. அவர் திரையிலும் பப்ளியாக இருக்கக்கூடிய நடிகை என்று ஆர்யா கூறினார்.

நஸ்ரியாவின் காதல் குறித்த‍ கேட்ட‍தற்கு, நஸ்ரி யாவும், ஜெய்யும் திருமணம் என்னும் நிக்கா, ராஜா ராணி ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறியதும் நஸ்ரி யாவின் முகம் வெட்கத்தாலும், அவரது சிவந்த முகம் மேலும் சிவந்ததாம், அதோடு இல்லாமல் தனது இதழ்களில் இருந்து சிறிது புன்னகையை யும் சிந்துவாராம். இவரது சிவந்த முகத்தையும், இவரது இதழ் சிந்த புன்னகையையும் மீண்டும் மீண்டும் பார்க்க‍ வேண்டும் என்ற ஆவலில் நடிகர் ஆர்யா, முன்பை விட அதிகளவில் போட்டு கலாய்த்துக்கொண்டிருக்கிறாராம்.

Leave a Reply