Wednesday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்மார்ட்டாக‌ வேலைசெய்யும் ஸ்மார்ட்வாட்ச்!

ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கைக் கடிகாரங்களில் மைக்ரோபோன் வைத்துக் கொண்டு பேசுவது, அதிலி ருந்தே சுடுவது போன்ற சாகசங்க ளை எல்லாம் பார்த்து வியந்திருப் போம். அதெல்லாம் சும்மா கற்பனை என்று நினைக்காதீர்கள். தொழில் நுட்பம் அந்தக் கற்பனைகளுக்கு உரு வம் கொடுத்துக் கொண்டே வருகிற து. லேட்டஸ்ட், ஸ்மார்ட்வாட்ச். அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் என்றொரு புதிய வகை தோன்றியிருக்கிறது. செல்போன், ஐபேட், டேப்லட் போன்றவை கைகளில் வைத்து இயக்குபவை. இதையடு த்து, மனித உடலோடு இணைந் து செயல்படும் தொழில் நுட்பத் தை யே வேரபிள் டெக்னாலஜி என்று அழைக்கிறார்கள். அதில் முதலில் வருவது கைக்கடிகார ம். இரண்டாவது மூக்குக் கண் ணாடி. கைக்கடிகாரத்தை எப்படி யெல்லாம் மேம்படுத்தலாம், தொ ழில்நுட்ப உருவேற்ற லாம் என்று நிறுவனங்கள் யோசித்ததின் விளைவு தான் ஸ்மார்ட் வாட்ச். இது வெறுமனே நேரம் மட்டும் காட்டும் கடி காரம் அல்ல. இதன்மூலம், விளையாட லாம், மொழி பெயர் ப்புகள் செய்யலாம், கணக்குகள் போடலாம். இன்னும் சிலவ ற்றில் கேமரா, தெர்மோ மீட்டர், காம்ப ஸ், ஜி.பி.எஸ்., மேப்புகள், ஸ்பீக்கர், மெ மரி கார்ட் ஆகியவையும் இணைக்கப்ப ட்டுள்ளன. இதனை வயர்லெஸ் ஹெட் செட், மைக்ரோபோன், மோடம் போன்ற வற்றோடும் பேசவைக்க முடியும்.அடுத்தகட்டமாக மொபைல் தொழில் நுட்பத்தோடு இன்னும் நெருக்கமாக எப்படி கடிகாரத்தை இணைக்க முடியும் என்று எழுந்த ஆய்வின் பலன், இந்த ஆண்டு பெரிய முன்னேற்றத்தில் கொண்டு நிறுத் தியிருக்கிறது. அதன் பெயர்தான் பெபி ள் இபேப்பர் வாட்ச். ஐபோனோ டும் ஆண்ட்ராய்டு போன்க ளோடும் சுலப மாக இணைக் கத்தக்க இந்த ஸ்மார்ட் வாட்ச் செய்யும் அற்புதங்கள் தான் இப்போது உலகெங்கும் பயனர் களி டையே பாப்புலராக இருக்கிறது.
 
பெபிள், ஐபோனோடும் ஆண்ட்ராய்ட் போனோடும் ப்ளூடூத் மூலம் தொடர்புகொள்ளும். உங்கள் போனில் மின்னஞ்சல் வந்தால், குறு ஞ்செய்தி வந்தால், அலர்ட்டுகள் வந்தால், உடனடியாக அது உங் கள் பெபிள் கைக் கடிகாரத்தில் தெரியும். சைக்கிள் ஓட்டுபவர்க ளுக்கு என்றே பெபிளில் செய்ய ப்பட்டுள்ள வசதிகள் அபாரம். ஜி.பி.எஸ். மூலம் வழிகாட்டும், வேகம் கணக்கிட்டுக் காட்டும், தொலைவைத் தெரிவிக்கும். இதை யே ஓட்டப்பந்தய வீரர்களும் பயன்படுத்தலாம். கூடுதலாக இசை யையும் கேட்கலாம்.கைக்கடிகாரம் உங்கள் போனோடு தொடர்பு கொ ண்டிருப்பதால், உங்களுக்கு விருப் பமான கைக்கடிகார டைய லையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். எப்படி டெஸக்டாப் ஸ்கிரீ னில் முக ப்படங்களை மாற்றுகிறீர்களோ அப்படி கைக் கடிகார முகப்புகளையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச், ஐம்பது மீட்டர் ஆழ தண்ணீருக்குள் இருந்தாலும் தண்ணீர் புகாதாம். பெபிளுக்கு அடுத்த முன்னேற்றம் ஹாட் வாட்ச் கள். எப்படி பெபிள் மக்களிடம் இருந்து பணத்தைத் திரட்டி, தன் தொழில்நுட்பத்தை உரு வாக்கியதோ, அதே போன்ற கிரவுட் ஃபண்டிங் மூலம் உருவாகியிருப் பதே ஹாட் வாட்ச்கள். இந்த ஸ்மார்ட் வாட்ச், ஒரு படி உயர்ந்தது. உங்கள் பாக்கெட்டில் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லையாம். இருபது முப்பது அடிகள் தள்ளியிருந்தாலும், ஸ்மார்ட்வாட்ச் வேலை செய்யும். முன் பிருந்த ஸ்மார்ட் வாட்ச்க ளில் குறுஞ்செய்திகளை, மின்ன ஞ்சல்க ளைப் படிக்க மட்டும்தான் முடியும். இதில் அதற்குப் பதி லெழுதவும் முடியும். போதாக் குறை க்கு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்க ளை கைக் கடிகாரத்தில் இருந்தே அப்டேட் செய்யலாம். போனைத் தொடாம லேயே கைக்கடிகாரத்தை அருகில் வைத்துக் கொண்டே பேசும் வசதியும் இதில் உண்டு. நான்கு அழகழகான மாடல் கள் சந்தைக்கு வரவிருக்கின்றன. இப்போதே, எண்ணற்றோர் இதற்காக முன் பணம் கட்டிவிட்டுக் காத்திரு க்கின்றனர்.
 
இதன் அடுத்தகட்டம்தான் சூப்பர். ஸ்மார்ட்வாட்ச் கோதாவில் ஆப்பி ள் நிறுவனமும் சாம்சங் நிறுவன மும் கூட இறங்க இருக்கின்றன. அவர்கள் தயாரிக்கவிருக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. கைக்கு அழகாக கடிகாரம் மட்டுமல்ல, கணினி யையே பொதித்துத் தர தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துவிட்டன. பயனர்களுக்கு, புதிய அனுபவம் நிச்சயம்!
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply