Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எதெற்கெல்லாம் பிடிவாதமும் விடா முயற்சியும் வேண்டும்!

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தை கள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடு க்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை பொரு ட்காட்சி, மிருகக் காட்சிசாலை… போன்ற இடங் களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர்.

மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியு டன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்.

குழந்தைகள் தங்களுடைய பிடிவாத குணத்தையும் விடாமுயற்சியை யும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இப்படி, பிடிவாத குணத்தினாலு ம் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக பல கண்டுபிடிப்புகளுக்கு ச் சொந்தக் காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்.

எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டா ல், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய் வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனை ச்சாலையில் அவரது உதவியா ளர்கள் இசைத்தட்டு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந் தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந் தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராம போன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந் தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகி னைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந் தார்.

எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில் ஏதோ ஓர் தவறு உள் ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறு த்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய் யலாம் என்றார்.

எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்கு ரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படை யில் தவறு என்று இன் னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய் வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்.

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியு மா?

ஒரே நேரத்தில் நான் எந்த விசயத்தையும் கண்டு பிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொ டர்ந்து செய்த முயற்சிகளின் விளைவு தான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில் சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்து விட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை, நான் விரும்பியதை அடையும்-வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையி ல் நிறுத்தியதே இல் லை.

100 முறை தோல்வியடைந்த ஒரு வர் 101 ஆவது முறை வெற்றியடைந்து விட முடியும் என்பது என் அனுபவத் தில் கண்ட உண்மை. எனக்கு அபாரமா ன அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல் கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை.

விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுப வர்களும் என்னைவிடச் சிறப்பான வெற் றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதி யாக நம்புகி றேன் என்றார்.

எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படி க்கும் குழந்தைகள் மிகச் சிலரே, குறிப்பி ட்ட ஒரு பாடத்தைப் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத் த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப் பயிற்சி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு அறிவியல் என்றால் அலர்ஜி; கணக்கு என்றால் கசப்பு என்று கூறக் கூடாது.

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத் தி, நாம்தான் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள் விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல் பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின் விளக்கு, கிராமபோ ன், ஒலிபெருக்கி, திரைப்படம் போன்றவற் றையெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத் தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின் றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுக ளைத் திரும்பத்திரும்ப விடாமுயற்சியுடன் செய்து பல வெற் றிகள் பெற்றுள்ளார்.

வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைக ளைப் புரிந்துள்ளார் என்றால், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின்,பெற்றோர்களின் அரவணைப்பில் மற்றும் அன்பில் முறைப் படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நமது குழந்தைகள் இது போல பல சாதனைகளை நிகழ்த்தினால் வீட்டுக்கும்..நமது நாட்டுக்கும் பெரு மைதானே ?

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply