Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு (ஆரோக்கிய) குறிப்பு: உடல் எடை குறைத்து, அழகான தோற்றம் பெற‌

உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது.

ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண் கள் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் உடல் பெருத்து அவதிப் படுகின்றனர். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதால் உடல் அழகு மட்டுமல்லாமல் ஆரோகியத்தோடும் வாழ முடியும்.

அதற்கு நம் உடலுக்கு ஏற்றார்போல சில வழிக ளை கையாண்டால் இனிதே வாழலாம்.

சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடு க்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடு படுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனா வதைத் தடுத்துவிடும்.

விடியற்காலையில் மிதமான சுடுநீரில் தேன் கலந் து பருகி வந்தால், உடலில் உள்ள கொழுப்புகள் எளிதில் கரையும்.

இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடு படுத்தி ஆற வைத்து காலை உணவுக்குமுன் ஒரு கரண்டி யும் மாலையில் ஒரு கரண்டியும் உட் கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் தொப்பை குறையும்.

உடல் எடையை குறைக்க உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.

பப்பாளிக்காயைய் சமைத்து சாப்பிட்டு வந் தால் உடல் எடை குறையும்.

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும் அழ கான தோற்றம் கிடைக்கும்.

தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீ ரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கல ந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண் ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர் த்துக்கொள்ளுங்கள்.

உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல்எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப் புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன் படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையு ம் வரை காய்ச்சி தொ டர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்து விடும்.

இதுதவிர ப்ப்பாளிக்காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: