Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கண்ணன், சித்தருக்கு உபதேசித்த கீதை”! – நீங்க அறியாத‌ அரிய தகவல் இது!

சித்தரகள் பலரும் சிவனை வழிபடுபவ ராகவே நாம் அறிந்திருக்கிறோம். ஆனா ல் நமக்கு தெரியாத விடயம் மாயக் கண் ணனே ஒருமுறை ஒரு சித்தருக்கு கீதை யை உபதே சித்திருக்கிறான்.

முன்னொரு காலத்தில் ஒரு முறை வய தான யோகி ஒருவர் தீராத தலை வலி காரணமாக சித்தரான பிண் ணாக்கீசரை சந்தித்தார்.

“பிண்ணாக்கீசா…உன் சேவை பறறி நிறையவே கேள் விப்பட்டேன்.வலி துன்பம் என்று உன்னை வந்தடைபவர் துயர்துடைக்கும் மருத்துவ ஞானத்தை நீ பெற்றிருக்கிறாய் என்று உணர்நது உனை காண வந்தேன் .என் தலைவலியை உன்னால் தீர்க்க முடியுமா? …”என்று கேட்டார்.அவர் நாடி பிடித்து பார்த்த பிண் ணாக்கீசர் அதிர்ந்தார். அவர் உடலில் இனம்புரியாத பரவசம் பரவுவதை உணர்ந் தார்.யோகியின் நாடியை பரிசோதித்த தில் அவருக்கு தலைவலி எது வும் இல் லை என்று அறிந்தார்.தன் வாழ நாளில் சந்தித்திராத மனிதராய் பிண்ணாக்கீசர் உணர்ந்தார். வந்திருக்கு ம் யோகி ஒரு தேவன் என்று எண்ணினார்.

“ஐயா என்னை ஆழம் பார்க்காமல் தாங்கள் யார் என்று கூறுங்கள்” என்றார் பிண்ணாக்கீசர்.

“நானும் உன்னை போல் ஒரு யோகி தானப் பா…ஆனால் கர்மயோகி”-அந்த யோகி என்ற வார்த்தை பிண்ணாக்கீசரை யோசிக்க வைத்தது.

“கர்ம யோகி என்றால்…?”

“கர்மம் என்றால் செயல்.செயல் என்று வந் தாலே நற்செயல்,தீயசெயல் என்று இரண்டு வந்து விடும்.அது இரண்டாக இருந்தாலே அதில் ஒன்றை நாம் தௌிவாக உணர முடியும்.அப்படி தௌிவாக அதில் ஒன்றை உணரும் போது மற்றது எதிராக போட்டிக்கு நிற்கும். அப்படி நிற்பதை ஜெயித்து உணர்ந்ததை நிலைப்படுத்தி அதனுள் இருந் து அல்லது அதன் வழியாக மீண்டு வருபவன் எவனோ அவனே கர்ம யோகி…”

குழப்பமான பதிலாக உள்ளதே?…”

“சரி புரியும்படி கூறுகிறேன்.இப்பெழுது உன் னையே எடுத்துக்கொள் வோம்.நீ புலன்களை அடக்கி ஆளும் ஒரு யோகி என்றால் அப்படி யே அந்தயோக சக்திகளைக்கொண்டு அட்ட மா சித்திகளையும் பெற்றாய் .இப்போது அவைகளை பயன்படுத்தி பலரது கர்மவி னைகளை தீர்க்கும் கருவியாக உள்ளாய் .மனித சமுதாயத்தின் துன்பங்களில் ஒன்றா ன நோய்களை தீர்க்கும் நிவாரணியாகவும் உள்ளாய்.அதாவது அறப் பணி ஆற்றும் ஒரு யோகி.அதாவது உன் செயல்கள் நற்செயல்கள் என் னும் வகையைச் சேர்ந்தவை.கை தட்டு ம் போது சப்தம் எழும்புவது போல நற் செயல்கள் புரியும்போது சில விளைவு கள் ஏற்படும்உன்னால் துயர் நீங்கப் பெற் றவர்.நீ பல்லாண்டு வாழ வாழ்த்தியிருப் பர். அதன் விளை வேயிது.எனவே நீ பல் லாண்டு வாழும் ஒருபலத்தை பெறுவா ய் .வேறு விதமாகவுமிதை மாற்றிக் கூற லாம்.பல்லாண்டு வாழ்ந் திடும் ஒரு விதி யமைப்பு உனக்கு இருந்தால் உன்னை ஒருவர் இப்படி த்தான் வாழ்த்த வார் நீயும் வாழ்ந்தே தீர வேண்டும்…”

“நான் கர்மயோகிக்கு விளக்கம் கேட்டேன் .அதாவது கர்மயோகிக்கு விளக்கம் கேட்டே ன்.ஆனால் நீங்களோ என் செயல்பாட்டிற்கா ன விளைவுகளைக் கூறி நான் நீண்ட காலம் வாழப்போவதாக கூறுகறீர்கள். இது எப்படி எனக்கான விடையாகும்?”-பிண்ணாக்கீசர்.

“ஒரு செயல் நற்செயல்,தீயசெயல் என்றிறு கூறாகிறது.அதில் நற்செய ல்கள் வாழ்த்துக் களை உருவாக்கி நலமாக உலகில் வாழ்ந்தி ட வழி காட்டுகின்றன.நீயும் வாழப்போகிறாய் என்றுதான் கூறினேன்.”-யோகி.

“அப்படியானால் நீங்கள் என்போல் நற்கருமம் புரிந்து வாழ்வாங்கு வாழ்ந்திடும் ஒரு யோகியில்லையா?”

“அது எனக்கு தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நன்றாகத் தெரி யும்.நீ ஆசையுள்ள யோகி…உனக்கு அவ்வள வு சுலபத்தில் முக்தி கிட் டாது.”-யோகி.

“நற்கருமங்கள் செய்யும் எனக்கே முக் தி கிட்டாதென்றால் வேறெவருக் கது கிட்டும்?.”-பிண்ணாக்கீசர்.

“அப்பனே…நற்கருமங்கள் நோயற்றவாழ்வு  தரும்.பதினாறு பேறு தரும். பெயரைத் தரும்,புகழைத்தரும்.உலகையே உன் கால டியில் சேரக்கும் ஆனால் முக்தியை மட்டு ம் தராது.”

இது என்ன உளறல்?”

“உளறலில்லை அப்பனே…நான் உணரந்து கொண்ட உண்மையிது.அந்த அளவு உணரப்போய் தான் மூளையை கசக்கிக் கொண்டதில் தீராத தலை வலியும் வந்தது.”

பிண்ணாக்கீசர் ஆழமாக யோசிக்கத் தொட ங்கினார்.யோகியின் உதட்டி லோ மர்மப் புன்னகை.

“என்னப்பா யோக சித்தா என் கருத்தில் உனக்கு நம்பிக்கையில்லை யா.. .எதற்கித் தனை யோசனை?”-யோகி

“நல்லதை செய்தால் நல்லன நடக்குமெ ன்பது சான்றோர் வாக்கு அப்படியிருக்க நற்செயல்களின் ஒட்டு மொத்த பயனாய் முக்தி கிட்டாதென் பதாக தாங்கள் கூறுவ து வியப்பாகயிருக்கிறது.ஆனால் நீங்கள் கூறுவதைப் பார்ததால் நற்செயல்கள் புரிந் தவர் எவரும் முக்தியடைந்திருக்க வாய்ப் பில்லாதது போலிருக்கிறது?”-பிண்ணாக்கீசர்

“ஆம்…அதுவும் உண்மையுங்கூட”

“சரி என்ன செய்தால் முக்தி கிட்டும்?”-பிண் ணாக்கீசர் மடக்கி விட்டது போல் பார்த்தார்.

“அதற்கு உன்னிடம் ஒரு கேள்வி.முக்தி என் றால் என்னவென்று நீ முதலில் சொல் …”என்றார் அந்த முதிய யோகி.

பிண்ணாக்கீசருக்கு தான் அகப்பட்டுக் கொண் டது போல்ஈஉ தோன்றிய து.

“நானறிந்தவரையில் முக்தியென்பது மீண்டும் பிறவாமை…அழியாத பேரின்பம்…யிறைவனை அடைதல்”

ஒரு கேள்விக்கு முன்று விதமான பதில்களா ?…சரி இந்த உலகில் எந்த விதத்திலும் புல் பூண்டாகக் கூட ஜென்மம் எடுத்து விடக் கூடாது என்கிறரகமாய் நீ சொல்வதாகவே யிருக்கட் டும்.மீண்டும் பிறக்கக்கூடாதென் றால் நீ என்ன ஆக விரும்புகிறாய்…?”-யோகி

“என்னவென்றால் நான் என்ன சொல்ல….?அவ்விறைவனோடு கலந்து விட்டால் அது போதுமெனக்கு…?”

“சரி இறைவனோடு ஏன் கலக்க விழைகிறாய்?”

“அவனோடு கலந்து விட்டால் அழியாத பேரின்பத்தை அடைந்தவர்க ளாவோம்…”-பிண்ணாக்கீசர்

“அப்படியென்றால் அவ்விறைவனின் பமயமானவனா?”-யோகி

“நிச்சயமாக…அதில் என்ன சந்தேகம்?”

“அப்படியானால் நீயறைவனைப் பார்த்து அவனின்பமயமானவன் என் பதை உணர்ந் திருக்கிறாயா?”

“அப்படி உணர்ந்திருந்தால் நானிப்போது தங்கள் முன் நிற்க வேண்டிய அவசியம் ஏற பட்டிருக்காதென்பதை நீங்கள் புரிந்து கொள் ள வேண்டு ம்…”-பிண்ணாக்கீசர்

“பின் எப்படியிறைவன் என்பவனின்பமயமானவன் ,அவனோடு கலந்து விட்டால் நாமும்மின்பமயமாகி விடுவோம் என்றாய்?”-யோகி.

முதியவரின் கிடுக்கிப்பிடி கேள்வியி ல் தடுமாறினார் பிண்ணாக்கீசர்.

“ஸ்வாமி தாங்கள் யார் உண்மை யைக் கூறுங்கள்?”-பிண்ணாக்கீசர் பணி வோடு கேட்கவும் அந்த யோகி அண்டமதிர சிரித்தார்.

“நான் யாரென்று உனக்கு தெரியவி ல்லை…நீ யாரெனன்பதிலும் குழப்ப ம்.மனதைக் கட்டு படுத்தி,உடலை உறுதியாக்கிக் கொண்டிருககிறாய் .அட்டாமாசித்திகளும் கூட உனக்கு வசப்பட்டிருக்கிறது.அதில் எட்டாவ து அம்சமான ஈசத்துவம் என்பதில் தான் நீ கேட்ட அத்தனை கேள்வி களுக்கும் விடையிருக்கிறது.”

“அணிமா எனும் அணுவாதல்
லஹிமா எனும் லேசாதல்
கரிமா எனும் கனத்தல்
மகிமா எனும் பெரிதாகுதல்
மற்றும் கூடுமாறுதல்
வசியம் புரிதல்

பிராப்தி என்னும் வேண்டுவதை அடைதல்”

என்கற அனைத்து சக்திகளையும் துளியும் பயன்படுத்தாது துச்சமாக கருதமுடிந்தாலே ஈ சத்துவம் என்னு மிறைநிலை வாய்க்கும்…முக்தி என்பது முடிவில்லாத வின்பத்தில் கிடப்பதல் ல…இன்பமமென்று ஒன் றிருந்தால் அதை உணர துன்பமென்று ஒன்று வரும். .. முக்தி யென்பது இன்பமானதுமன்று துன்பமானது மன்று.அது ஒரு பேரமைதி.

முக்திக்கு சிறந்த உதாரணம் கர்ணன்.கர்ணன் மிகச்சிறந்த தர்மவான். யார் எதைக்கேட்டாலும் வாரி வழங்குபவன்.அப்படிப்பட்டவன் தர்மத் தால் தான் பெற்ற அனைத்து புண்ணியங்களையும் கூட தர்மம் செய் தானல்லவா? அதுவே முக்திக்குரி ய செயல்…

புண்ணியத்தின் மேல் கூட பற்றி ருக்கக்கூடாது.துி எதிர்பார்ப்புமி ன்றி அனைதது கடமைகளையும் செய்ய வேண்டும்.”கடமையை செய் பலனை எதிர்பாராதே!”…எதிர்பாராதே என்பதில் தான் ஞான சூட்சு மம் உள்ளது.எதிர்பார்ப்பு என்பது ஆசை சார்ந்தது.நன்கு கடமை யை செய்த வனிறுதியில் ஆசைவயப்பட்டால் அது திரும்பவும் அவனை மாயையிலேயே வைத்திருக்கும்.அதே சமயம் நன்கு கடமையை செய் தவர்கள் எதையும் எதிர் பார்க்கத் தேவையில்லை.ஏனென்றால் அவர் கள் எதிர்பார்க்கும் முன்பே அதற்கான பலன்கள் அவர்களை சென்றடை ந்து விடு ம் என்பதே இதன் உட்பொருள்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு விளையாட் டைப் போன்றது வெற் றியும் தோல்வியும் மாறி மாறி வரும் வெற்றி பெற்றாலும் தோற்று விடக்கூடாது என்ற அச்சம் வரும் தோற்றாலும் நாளை வெற்றி பெறு வோம் என்ற எதிரபார்ப்பு வரும்.விளையாட நான் விரும்பவில்லை .வெற்றியும் வேணடாம் தோல்வியும் வேண்டாம் என்று எண்ணுவதே துறவு.

தறவிக்கு எதுவும் பெரிதல்ல.பொன்னும் பொருளும் வேணடாமென்ப து ஒரு பெரிய விடயமேயல்ல.முக்தி கூட வேணடாம் என்று எண்ணுமளவு ஒரு பற்றற்ற மனம் வாய்க்க வேணடும் .உன் மனம் அப்படிப்பட்ட பற்றற்ற மனம் தானா ?”

யோகியின் மிகநீண்ட விளக்கமும் இறு திக்கேள்வியும் பிண்ணாக்கீசரை ஆழ்ந்த மவுனத்திலும், சிந்தனையிலும்  புதைந் திட யோகி தான் யாரென்பதைக் காட்ட எண்ணினான்.முதிய யோகி மாயக்கண்ண னாக காட்சியளித்தான்.கண்ணபிரான் தரிச னத்தை கண்டு அகமகிழ்ந்த பிண்ணாக்கீசர் அதன் பின்னர் பிறர்க்கு வழிகாட்டுதல் மருத்துவ சேவை புரிதல் போன றவற்றை எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்து அனை வரிடத்திலும் இறைவனைக் கண்டார்…

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

3 Comments

 • Seems to attempt to explain Karma Yoga;s Non action..
  But there seems to any reference to this anywhere
  either in Sanskrit or among Siddhas.
  If there are any, the writer may provide,
  Reason is that some points are at variance with the Bhagavad Gita., on Karma Yoga..
  If explanation or references of authority is not found, it might be some one’s attempt to pass on one;s views as Hinduism,, without quotes..
  This will also become popular as the One touted as Girasaara,Edhu Nadanthathoo Nanraahave nadanthathu’ non sense, for it has no basis in the Bhagavad Gita.
  What is a woman before mikesis doing in this post

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: