Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: மட்டன் ரசம்

தேவையான பொருட்கள்:

ஆட்டு எலும்பு – 250 கிராம்
எலுமிச்சை பழம் – 1
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
பூண்டுப் பல் – 4
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
சாம்பார் வெங்காயம் – 50 கிராம்
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு

செய்முறை:

எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண் டும்.

கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்டு மிளகுத் தூள், சிவப்பு மிள காய் வற்றல், சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். எழும்புத் துண்டு வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித் ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.பின்பு அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கலக்கி பரிமாறலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: