Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கடன் வாங்கித்தான் ஆட்சி செய்யவேண்டும் என்றால், அதற்கு எதற்கு ஆட்சியாளர்கள்???

கடன் வாங்கித்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் இவர்கள் எதற்கு ஆட்சியாளர்கள் என்று…தமிழகத்தில் 7 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்டுள்ள நம் மாநிலத்தில் நாம் ஏன் அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டும் …நம் மாநிலத்தை விட சின்ன நாடு சிங்கபூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எவனை நம்பி உள்ளார்கள் …அது போல் மதிய அரசு என்ற ஒன்று இருப்பதை யே நினைக்கமால் தமிழகத்தை ஒரு நாடாக நினைத்து செயல் பட்டு பொருளா தாரத்தை மேம்படுத்த முடியாதா என்ன?கடன் எங்கிருந்து வந்தது …நீங்கள் மாறி மாறி கொடுக்கும் இலவசத் தால்தானே, அதை முதலில் நிறுத்தி மூலதனத்தை மேம்படுத்துங்கள்…வருவாயை பெருக்க பல வழிகள் இருக்கி றது. அதே போல் எதாவது விபத்தோ அல் லது வேறு உயிரிழப்போ நேர்ந்தால் அதற் க்கு மாநில அரசு சார்பாக ஏன் நிவாரண நிதி அளி க்க வேண்டும் ..அதற்க்கு மாறாக ஒ வ்வொரு குடிமகன் பேரில் விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் போன்றவற்றை அரசாங்க ம் சார்பாக நடத்தி அவர்களை அதில் சேர வைத்து அதன் மூலமாக அவர்களின் பணத்தையே இழப்பீடு தொகை யாக அளியுங்கள் . இன்னும் எவ்வளவோ செய்யலாம் கடன் இன்றி வருவாயை பெரு க்க …தமிழ்நாடு கல்வியறிவு இந்தியாவின் சராச ரியைவிட அதிகம். இங்கு 1991-2001 இடைப்பட்ட காலத்தில் 62.66%ல் இருந்து 73.47% கல்வியறிவு அதிகரித் தது. இதில் ஆண்கள்: 82.33% ம் பெண் கள்:  64.56% ம் ஆகும். தமிழ் நாட்டில் 37 பல்கலைக் கழகங்கள், 454 பொ றியியல் கல்லூரிகள், 1150 கலை கல்லூரிகள், 2550 பள்ளி க்கூடங்கள் மற்றும் 5000 மருத்துவ மனைகள் உள்ள ன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில் நுட்பக் கழகம், மற்றும் திருச்சியில் அமைந் த தேசிய தொழில் நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ்மிக்க சென்னை பல் கலைக் கழகம், அண்ணா பல் கலைக்கழகம், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ் நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகம் கோய ம்புத்தூர், இலயோலா க் கல்லூரி, சென்னை ஆகியனவும் உள்ளன. தமிழ கத்தில் வருடம் தோறும் 1,30,000 பேர் பொறி யியல் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.சமூகமுன்னேற்றத்தின் குறியீடுளான பரவலா ன கல்வியறிவு, ஆண்-பெண் சமத்துவம், மேம் பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வள ர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோ டி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ் நாடு, நல்ல தொழில் வளர்ச் சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களு ள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத் தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெச வா லைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திரு ப்பூர் ஆயத்த ஆடை ஏற்று மதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணை கள், திருச்செங்கோடு ஆழ் குழாய்க் கிணறு அமை க்கும் தொழில், பண்டங்க ளை போக்குவரவு செய்யும்  கனரக வாக னங்களை இயக் கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத் திக்கும், காவிரி பாசன பகுதியில் அமை ந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலு க்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசா யத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் களுக்கும் பெயர் பெற்றுள்ளன.அப்படி இருந்தும் கடன் வாங் கிதான் அரசு பிழை ப்பு ஒட்டுகிறது ஏன்? ஏன் ?ஏன் ?

– தஞ்சை தேவா, முகநூல்

Leave a Reply

%d bloggers like this: