Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அய்யய்யோ, இது வேறயா?” – அலறும் நடிகை பூஜா

ஜே.ஜே. படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா. தொடர்ந்து அஜீத்துடன் அட்டகாசம், மாத வனுடன் தம்பி, ஜீவாவுடன் பொறி, ஆர்யாவுடன் உள்ளம் கேட்குமே, ஓரம் போ, பட்டியல், போன்ற படங்களில் நடித்தவர், பாலாவின் நான் கடவுள் படம் மூலம் தேசிய அளவுக்கு பேசப் பட்டார்.

அந்தபடத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கிடைக் கவில்லை. மேலும் நான் கடவுள் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்று எதிர் பார்த்த நிலையில் அதன்பின் தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு விடியும் முன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடு த்துள்ளார் பூஜா. இது பற்றி அவர் பத்திரிகை ஒன்றுடன் பகிர் ந்து கொண்ட சில தகவல்கள் இதோ…

“நான் கடவுள்க்கு பின், எந்த படங்க ளிலும் பார்க்க முடியவில்லை‌யே?

“நான் கடவுள் தமிழில், நான் நடித்ததில் முக்கியமான படம். அதனால், அதன் பின், அது போன் ற வித்தியாசமான கதைகளாக நடிக்க விரும்பி காத்திருந்தேன். ஆனா ல், அந்த மாதிரி கதைகளே கிடைக்கவில்லை. அதனால்தான், இடை பட்ட காலத்தில் சிங்கள படங்களில் நடித்து வந்தே ன்.

* “பரதேசிபடத்தில் நடிக்க அழைத்தபோது நீங்கள் மறுத்துவிட்டது ஏன்?

“நான் கடவுள் படத்தில், கண் தெரியாத பெண் வேடத்தை கொடுத்து, என்னை சிறப்பாக நடிக்க வைத்தவர் டைரக்டர் பாலா. அதனால், மீண்டும், “பரதேசியில் நடிக்கக்கேட்டபோது, ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால், அவர் கால்ஷீட் கேட்ட அதே தேதியில், வேறொரு படத்திற்கும் கால் ஷீட் கொடுத் திருந் ததால், நடிக்க முடியா மல்போய் விட் டது.

* உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதுன்னு செய்தி கூட வந்ததே?

அய்யய்யோ, இது வேறயா? நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க. உண் மை என்ன என் பது, கடவுளுக்கு தான் தெரியும். நான், திருமணம் முடிததால், ரகசிய மாக முடிக்க மாட்டேன். யார் தான் இப்படி எல்லாம் வதந் தியை பரப்பி விடுகின்றனர் என, தெரியவில்லை.

* தொடர்ந்து படங்களில் நடிப்பீங்களா?

என்ன பாஸ், இப்படி கேட்டுட்டீங்க. எனக்கு நடிப்பு மீது, ரொம்ப பிரியம் உண்டு. யாரா வது ஒரு இயக்குனர், நல்ல கதையோடு வந்து, இதற்கு பூஜா தான் நடிக்க வேண்டும் என, வற்புறுத்தினால், அடுத்த நிமிஷமே, மேக் அப்புடன், ரெடியாகி விடுவேன்.

* நீங்க, ரொம்ப பேசுவீங்களே, இப்ப குறைச் சிருக்கீங்களா?

எப்பவுமே, எதையாவது உளறி கொட்டி கொண்டு இருப்பது, என்னோட கேரக்டர். அம்மா, நிறைய முறை, இதுபற்றி அட்வைஸ் பண்ணிருக்கா ங்க. பேச்சை குறை, அதிகமா பேசி னால் ஆபத்துன்னு அடிக்கடி சொல் லி இருக்காங்க. ஆனால், என்னை மாத்த முடியவில்லை.

* நீங்க யாரையோ காதலிக்கிறீங்க ளாமே?

அப்படியா,எனக்கு தெரியலையே. எனக்கு, காத லில் ஆர்வம் உண்டு. எனக்கு வாழ்க்கை துணை யாக வரு பவர், நம்பிக்கை துரோகம் செய்கிற வராக இல்லாமல், நல்ல குணம் படைத்தவரா இருக்க வேண்டும். அப்படி ஒருத்தர் அமைஞ்சா கண்டிப்பாக காதலிக்கலாம். ஆனால், இன்னும், அப்படிப்பட்ட ஒரு நபர் கிடைக் க வில்லையே.

Leave a Reply